Vodafone Idea கஸ்டமர்கள் ஷாக்.. இரவோடு இரவாக ரூ.20, ரூ.30 விலை உயர்வு.. 9 ரீசார்ஜ்களில் திடீர் திருத்தம்!
வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனமானது - சத்தமின்றி - பல்வேறு டெலிகாம் வட்டங்களில் உள்ள தனது சில ப்ரீபெய்ட் திட்டங்களை மாற்றியமைத்துள்ளது. இதன்கீழ் வி (Vi) நிறுவனத்தின் சில திட்டங்களின் பலன்கள் குறைக்கப்பட்டுள்ளது, கூடவே சில திட்டங்களின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது.
முன் குறிப்பு: வோடபோன் ஐடியா செய்துள்ள இந்த மாற்றியமைப்புகளில் சில, வட்டம் சார்ந்தவைகளாகவும் உள்ளன மற்றும் அனைவருக்கும் கிடைப்பவைகளாகவும் உள்ளன. எனவே, உங்கள் வோடபோன் ஐடியா மொபைல் நம்பருக்கான திட்டங்கள் மற்றும் அதன் பலன்கள் குறித்த சரியான விவரங்களை - ரீசார்ஜ் செய்வதற்கு முன்னர் - வி ஆப் (Vi App) மூலம் சரிபார்க்கவும்.

விலை உயர்த்தப்பட்ட ப்ரீபெய்ட் பேக்குகள்: வோடபோன் ஐடியாவின் ரூ.649 நான்ஸ்டாப் ஹீரோ பேக் ஆனது ரூ.670 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. டெலிகாம்டால்க்கின் சமீபத்திய அறிக்கையின்படி - இந்த விலை மாற்றம் இப்போதைக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா, பீகார், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய வட்டங்களில் பிரதிபலிக்கிறது.
இதேபோல வி ரூ.1020 திட்டமானது ரூ.1050 ஆக திருத்தப்பட்டுள்ளது. முன்பு சென்னை பயனர்களுக்கு ரூ.1020 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த இந்த திட்டம், தற்போது ரூ.1050 ஆக திருத்தப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட வி நான்-ஸ்டாப் ஹீரோ ரூ.1050 திட்டமானது, வரம்பற்ற டேட்டா (5ஜி மற்றும் 4ஜி), வரம்பற்ற அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 84 நாட்களுக்கு வழங்குகிறது. 5ஜி ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் சந்தாதாரர்கள், 5ஜி நெட்வொர்க் உள்ள பகுதிகளில் மட்டுமே வரம்பற்ற 5ஜி டேட்டாவை பயன்படுத்த முடியும்.
2. பலன்கள் அல்லது நன்மைகள் குறைக்கப்பட்ட திட்டங்கள்: வோடபோன் ஐடியா நிறுவனமானது, தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் - சில நான்ஸ்டாப் ஹீரோ திட்டங்களை, ஹீரோ அன்லிமிடெட் திட்டங்களாக தரம் குறைத்துள்ளது. இதன் மூலம், விலையில் எந்த மாற்றமும் செய்யாமல், வழங்கப்படும் பலன்களை / நன்மைகளை மட்டுமே குறைத்துள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட சில வட்டங்களில், வரம்பற்ற டேட்டாவுடன் கூடிய நான்ஸ்டாப் ஹீரோ திட்டங்களிலிருந்து, வரையறுக்கப்பட்ட டேட்டாவுடன் கூடிய ஹீரோ அன்லிமிடெட் திட்டங்களாக ரூ.696, ரூ.795, ரூ.979, ரூ.994, ரூ.996, ரூ.998 மற்றும் ரூ.1198 போன்ற சில திட்டங்கள் தரம் குறைக்கப்பட்டுள்ளன.
வி ஹீரோ ரூ.696 திட்டத்தின் கீழ் கிடைக்கும் நன்மைகள்: 56 நாட்கள் செல்லுபடியுடன் வரம்பற்ற அழைப்புகள், ஒரு நாளைக்கு 2ஜிபி, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், 56 நாட்களுக்கு அமேசான் பிரைம் லைட் சந்தா, டெய்லி டேட்டா ஒதுக்கீட்டிற்கு பிறகான 64 கேபிபிஎஸ் டேட்டா ஸ்பீட் மற்றும் 5ஜி போன் பயன்படுத்தும் சந்தாதாரர்களுக்கு 5ஜி நெட்வொர்க்கின் கீழ் வரம்பற்ற 5ஜி டேட்டா.
வி ஹீரோ ரூ.795 திட்டத்தின் கீழ் கிடைக்கும் நன்மைகள்: 56 நாட்கள் வேலிடிட்டியின் கீழ் வரம்பற்ற அழைப்புகள், ஒரு நாளைக்கு 3ஜிபி, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், 60 நாட்களுக்கு வி மூவிஸ் மற்றும் டிவி சூப்பர் சந்தா, டிவி மற்றும் மொபைலில் சோனிலிவ், ஜீ5, ஃபேன் கோட் மற்றும் மேலும் 16 ஓடிடி தளங்களுக்கான அணுகல், டெய்லி டேட்டா ஒதுக்கீட்டிற்கு பிறகான 64 கேபிபிஎஸ் டேட்டா ஸ்பீட் மற்றும் 5ஜி போன் பயன்படுத்தும் சந்தாதாரர்களுக்கு 5ஜி நெட்வொர்க்கின் கீழ் வரம்பற்ற 5ஜி டேட்டா.
வி ஹீரோ ரூ.979 திட்டத்தின் கீழ் கிடைக்கும் நன்மைகள்: 84 நாட்கள் வேலிடிட்டியின் கீழ் வரம்பற்ற அழைப்புகள், ஒரு நாளைக்கு 2ஜிபி, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், 60 நாட்களுக்கு வி மூவிஸ் மற்றும் டிவி சூப்பர் சந்தா, டிவி மற்றும் மொபைலில் சோனிலிவ், ஜீ5, ஃபேன் கோட் மற்றும் மேலும் 16 ஓடிடி தளங்களுக்கான அணுகல், டெய்லி டேட்டா ஒதுக்கீட்டிற்கு பிறகான 64 கேபிபிஎஸ் டேட்டா ஸ்பீட் மற்றும் 5ஜி போன் பயன்படுத்தும் சந்தாதாரர்களுக்கு 5ஜி நெட்வொர்க்கின் கீழ் வரம்பற்ற 5ஜி டேட்டா.


Click it and Unblock the Notifications








