சூரியனை தொட்ட நாசா விண்கலம் எடுத்த 'வீடியோ'.. பிரபஞ்ச வரலாற்றில் நம்ப முடியாத முதல் அதிசய நிகழ்வு இது தான்..

|

விண்வெளி பயணம், விண்வெளி ஆராய்ச்சி என்ற பல விண்வெளி தொடர்பான பல செய்திகளை இதுவரை நீங்கள் படித்திருக்கலாம். ஆனால், இது முற்றிலும் நம்ப முடியாத ஒரு அதிசய நிகழ்வு. மனிதன் சந்திரனில் கால் பதிப்பது சாத்தியமற்றது என்று சொல்லப்பட்ட வேளையில், நீல் ஆம்ஸ்ட்ராங் விண்வெளியில் பயணத்தில் நிலவில் முதல் மனிதனின் கால் தடத்தைப் பதிவிட்டார். இது மனித இனத்திற்கான மிகப்பெரிய சாதனை என்று கூறப்பட்டது. ஆனால், இப்போது அதைவிட மிகப்பெரிய சாதனையை மனிதன் செய்து, இந்த பிரபஞ்ச வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தை பிடிக்கும் நிகழ்வைப் பதிவு இப்போது செய்துள்ளான்.

மனிதன் சூரியனுக்குச் செல்ல முடியுமா?

மனிதன் சூரியனுக்குச் செல்ல முடியுமா?

இதற்கு முன் யாரோ ஒருவர் மனிதன் சூரியனுக்குச் செல்ல முடியுமா என்று கேள்வி எழுப்பியதாக நான் எங்கோ படித்த ஞாபகம் இருக்கிறது. அப்போது, அதெல்லாம் சாத்தியமே இல்லை, சூரியனின் வெப்பம் பல மில்லியன் தொலைவில் இருக்கும் பூமி வாசிகளுக்குச் சுட்டெரிக்கும் வெப்பத்தைக் கொடுக்கும் போது, சூரியனை நெருங்குவது என்பதெல்லாம் கனவில் கூட நடக்காத காரியம் என்று பலர் அந்த கேள்விக்குப் பதில் அளித்ததும் என் நினைவில் இருக்கிறது. ஆனால், இனி அப்படி யாரும் சொல்ல முடியாது, ஏனெனில் இதை விண்வெளி விஞ்ஞானிகள் முயன்று சாத்தியமாகியுள்ளனர்.

நம்முடைய பிரபஞ்ச வரலாற்றில் 'இது' முக்கிய மைல்கல் - NASA

நம்முடைய பிரபஞ்ச வரலாற்றில் 'இது' முக்கிய மைல்கல் - NASA

அவர்களின் முயற்சி இப்போது வீண் போகவில்லை, காரணம் மனிதர்களால் உருவாக்கப்பட்ட நாசாவின் விண்கலம் இப்போது சூரியனின் வளிமண்டலத்திற்குள் சென்றுவிட்டது. இது நமது பூமி மட்டுமின்றி, நம்முடைய ஒட்டுமொத்த பிரபஞ்ச வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லை நிறுவியுள்ளது. பார்க்கர் சோலர் பிரோப் (Parker Solar Probe) என்று அழைக்கப்படக் கூடிய விண்கலத்தைப் பயன்படுத்தி சூரியனை நாசா எப்படி நெருங்கியது? எப்படி நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் இந்த விண்கலத்தைப் பயன்படுத்தி தனது ஆய்வை மேற்கொள்கிறது என்று விரிவாகப் பார்க்கலாம்.

பூமியில் தண்ணீர் எப்படி உருவானது? சூரியன் தான் நமக்கு தண்ணீர் கொடுத்ததா? உண்மையை கட்டவிழ்த்த விஞ்ஞானிகள்..பூமியில் தண்ணீர் எப்படி உருவானது? சூரியன் தான் நமக்கு தண்ணீர் கொடுத்ததா? உண்மையை கட்டவிழ்த்த விஞ்ஞானிகள்..

முதல் முறையாகச் சூரியனை 'தொட்டது' மனிதர்கள் தானா?

முதல் முறையாகச் சூரியனை 'தொட்டது' மனிதர்கள் தானா?

நமக்குத் தெரிந்த நமது பிரபஞ்ச வரலாற்றில் முதல் முறையாகச் சூரியனை 'தொட்டது' மனிதர்கள் தான் என்பதை நாசா தனது அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தில் வாயிலாகப் பூமி வாசிகளுக்குத் தெரியப்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்த விளக்கமான பதிவை இன்ஸ்டாகிராமில் நாசா பகிர்ந்துள்ளது. அந்த பதிவில் "நாம் சூரியனைத் தொட்டுவிட்டோம்! வரலாற்றில் முதன்முறையாக, ஒரு விண்கலம் சூரிய கரோனாவிற்குள் நுழைந்துள்ளது. சூரியனின் வளிமண்டலத்தில் அதன் காந்தமும் புவியீர்ப்பு சக்தியும் சூரியப் பொருட்கள் வெளியேறுவதைத் தடுக்கும் அளவுக்கு வலுவாக உள்ளது என்று நாசா கூறியுள்ளது.

பார்க்கர் சோலார் பிரோப் எதற்காகச் சூரியனுக்கு அனுப்பப்பட்டது?

பார்க்கர் சோலார் பிரோப் எதற்காகச் சூரியனுக்கு அனுப்பப்பட்டது?

நாசாவின் பார்க்கர் சோலார் ப்ரோப், 2018 இல் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு குறுகிய காலத்திற்குச் சூரியனின் கரோனா வழியாக முதன் முதலில் இந்த விண்கலம் பறந்தது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், அடுத்த சில வரிகளில், அந்தச் சம்பவத்தின் முக்கியத்துவத்தைப் பற்றியும், சூரியனைப் பற்றி அறிவியலாளர்களுக்கு அது எப்படி உதவும் என்பதையும் விளக்கியுள்ளது. "சந்திரனில் இறங்குவது விஞ்ஞானிகளுக்கு அது எவ்வாறு உருவானது என்பதைப் புரிந்து கொள்ள அனுமதித்தது போல, சூரியன் உருவாக்கப்பட்ட பொருட்களைத் தொடுவது, சூரியன் பற்றிய புரிதலை வலுப்படுத்தும் என்று கோரப்பட்டுள்ளது.

பூமியில் எந்த இடத்திற்கு போகணும் மட்டும் சொல்லுங்க.. வெறும் 1 மணிநேத்தில் பிளைட்டில் கூட்டி போறோம்..பூமியில் எந்த இடத்திற்கு போகணும் மட்டும் சொல்லுங்க.. வெறும் 1 மணிநேத்தில் பிளைட்டில் கூட்டி போறோம்..

சூரியக் காற்றில் இப்படி ஒரு அசாதாரண ஜிக்-ஜாக் வடிவமா?

சூரியக் காற்றில் இப்படி ஒரு அசாதாரண ஜிக்-ஜாக் வடிவமா?

நமது நெருங்கிய நட்சத்திரம் மற்றும் சூரியக் குடும்பத்தில் அதன் தாக்கம் பற்றிய முக்கியமான தகவல்களை விஞ்ஞானிகள் கண்டறிய இந்த ஆராய்ச்சி உதவும். எடுத்துக்காட்டாக, பார்கர் சோலார் ப்ரோப் கரோனா வழியாக மேற்கொண்ட பயணம், பூமியையும் அதற்கு அப்பால் உள்ள கிரகங்களையும் கடந்து செல்லும் சூரியக் காற்றில் காணப்படும் அசாதாரண ஜிக்-ஜாக் இன் தோற்றத்தை ஏற்கனவே வானியல் இயற்பியலாளர்களுக்குப் புரிந்துகொள்ள அனுமதித்து உதவியுள்ளது. பார்க்கர் ஏற்கனவே சூரியனை பத்து முறை பறந்து கடந்துவிட்டது.

சூரியனின் கரோனா என்றால் என்ன?

சூரியனின் கரோனா என்றால் என்ன?

மேலும் அடுத்த நான்கு ஆண்டுகளில் பார்க்கர் சோலார் பிரோப் சூரியனுக்கு இன்னும் நெருக்கமான சுற்றுப்பாதையில் பயணித்து, சூரியன் தொடர்பான கூடுதல் தரவுகளைச் சேகரிக்கும் என்று நாசா கூறியுள்ளது. சூரியனின் கரோனா என்று அழைக்கப்படுவது சூரியனின் வளிமண்டலத்தின் வெளிப்புற அடுக்கு ஆகும். அங்கு வலுவான காந்தப்புலங்கள் பிளாஸ்மாவை பிணைக்கின்றன மற்றும் கொந்தளிப்பான சூரியக் காற்று வெளியேறுவதை இந்த கரோனா தடுக்கின்றது.

செவ்வாய் கிரகம்: ஒருவழியாக 'அதை' கண்டறிந்த விஞ்ஞானிகள்! பூமியை விடவும் பல மடங்கு பெரியது மற்றும் ஆழமானது.!செவ்வாய் கிரகம்: ஒருவழியாக 'அதை' கண்டறிந்த விஞ்ஞானிகள்! பூமியை விடவும் பல மடங்கு பெரியது மற்றும் ஆழமானது.!

சூரியனின் கரோனாவிற்குள் சென்ற போது எடுக்கப்பட்ட வீடியோ

நாசா பகிர்ந்துள்ள படம் மார்ச் 2012 இல் சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரியில் இருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு இடுகையை முடித்தது. ஆனால், நாசாவின் மற்றொரு பதிவில் பார்க்கர் சோலார் பிரோப் சூரியனின் கரோனாவிற்குள் சென்ற போது என்ன நடந்தது என்பதை வீடியோவாக காட்டியுள்ளது. இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகிவருகிறது. இது ஒரு அற்புதமான வீடியோ - குறிப்பாக ஆய்வு சூரியனின் வளிமண்டலத்தில் வினாடிக்கு 142 கிலோமீட்டர் வேகத்தில் பிரோப் கத்திக்கொண்டிருப்பதை காட்டுகிறது.

சூரியன் பற்றிய நமது புரிதலை மாற்றிய பார்க்கர் சோலார் பிரோப்

சூரியன் பற்றிய நமது புரிதலை மாற்றிய பார்க்கர் சோலார் பிரோப்

நாசாவின் புகைப்படம் வலது பக்கத்தில் மேற்பரப்பில் இருந்து வெடித்த சூரியப் பொருட்களின் மாபெரும் வெடிப்பைக் இது காட்டுகிறது. இப்போது, இதன் வீடியோ மூலம் கண்டுபிடித்த தகவல்கள் சூரியன் பற்றிய நமது புரிதலை என்றென்றும் மாற்றிவிடும் விதத்தில் அமைந்துள்ளது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் இன்னும் விரிவான வீடியோகளையும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனது யூடியூப் சேனல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

பூமியில் சூரியன் மறையாத 6 இடங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? உண்மைதான் இங்கெல்லாம் சூரியன் மறையாது..பூமியில் சூரியன் மறையாத 6 இடங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? உண்மைதான் இங்கெல்லாம் சூரியன் மறையாது..

சூரியனைத் தொட்டுவிட்ட மனிதனின் மறக்கமுடியாத திருப்பம்

சூரியனைத் தொட்டுவிட்ட மனிதனின் மறக்கமுடியாத திருப்பம்

உண்மையில் இது நம்ப முடியாத ஒரு அசாதாரணமான சாதனையாகும். நிலவை, தொடர்ந்து செவ்வாய் கிரகம் சென்ற மனிதனின் கரங்கள், இப்போது சுட்டெரிக்கும் சூரியனைக் கூட தொட்டுவிட்டது என்பது வரலாற்றில் நாம் மறக்கமுடியாத திருப்பமாக அமைந்துள்ளது. இந்த சாதனையைச் செய்த நாசாவுக்கு நம்முடைய வாழ்த்துகள். விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
NASA Parker Solar Probe Took A Video As It Touched The Sun Corona In Space : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X