2020-ல் மொபைல் போன் ஏற்றுமதி குறையும்? காரணம் என்ன?

|

மக்கள் அதிகளவில் மொபைல் போன்களை பயன்படுத்த துவங்கிவிட்டனர், குறிப்பாக பல்வேறு வேலைகளை முடிக்க இந்த மொபைல் போன்கள் எளிமையாக உதவுகின்றன. மேலும் இப்போது வரும் புதிய புதிய மொபைல் போன்கள் அருமையான மென்பொருள் வசதியுடன் பல்வேறு தொழில்நுட்பங்களை கொண்டுள்ளன.

மலிவு விலையில்

இந்நிலையில் 2020-ம் ஆண்டில் மலிவு விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்கள் சந்தைக்கு அதிகளவு வரும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இப்போது வெளியாவதற்கு வாய்ப்பில்லை. அதாவது இந்த கோரோனா தாக்கத்தினால், 2020-ம் ஆண்டில் மொத்த மொபைல் போன்களின் ஏற்றுமதி சுமார் 14.6சதிவிகிதம் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.

 இந்த ஆண்டு மொத்தம் 1.3

குறிப்பாக ஸ்மார்ட்போன்களின் ஏற்றுமதி ஆண்டுக்கு 13.7சதவிகிதம் குறைந்து இந்த ஆண்டு மொத்தம் 1.3 பில்லியன் யூனிட்களாக இருக்கும் என்று செவ்வாயன்று வெளியிடப்பட்ட கார்ட்னர் கணிப்பு மதிப்பிட்டுள்ளது என்பது குறிப்பிடத்க்கது.

Elon Musk மகனின் பெயரை உச்சரிக்கமுடியாத நெட்டிசன்ஸ்! பெயருக்கான அர்த்தம் இதுதான்!Elon Musk மகனின் பெயரை உச்சரிக்கமுடியாத நெட்டிசன்ஸ்! பெயருக்கான அர்த்தம் இதுதான்!

 வருமானம் குறைவதால்,

தற்சமயம் இந்த மொபைல் பயன்பாடு அதிகளவு உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதாவது . சக ஊழியர்கள், பணி கூட்டாளர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பங்களுடன் தொடர்பு கொள்வது இந்த முடக்கநிலையின்போது பெருமளவு அதிகரித்துள்ள நிலையில், வருமானம் குறைவதால், நுகர்வோரின் வாங்கும் திறன் குறையும்.

வாங்குவதை தவிர்ப்பார்கள்

மக்கள் தங்கள் விருப்பங்களின், செலவு செய்யும் பொருட்களின் பட்டியலை மாற்றியமைப்பார்கள், புதிதாக போன்களை வாங்குவதை தவிர்ப்பார்கள் என கார்ட்னரின் மூத்த ஆராய்ச்சி இயக்குனர் ரஞ்சித் அட்வால் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல!4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல!

 5ஜி ஸ்மார்ட்போன்களை விநியோகிப்பதில்

தற்போது 5ஜி ஸ்மார்ட்போன்களை விநியோகிப்பதில் தாமதர் ஏற்படுவதுபோல, 5ஜி ஸ்மார்ட்போன்களின் அதிக விலை,மற்றும்வேறு பல காரணிகளும் 5 ஜி ஸ்மார்ட்போன்களை வாங்கும் விருப்பத்தை மட்டுப்படுத்தும்.

 சீனாவில் 5ஜி ஸ்மார்ட்போன்கள்

குறிப்பாக 5ஜி உள்கட்டமைப்பில் தொடர்ந்து முதலீட்டை எதிர்பார்க்கும் சீனாவை தவிர பெரும்பாலான பிராந்தியங்களில் 5ஜி
ஸ்மார்ட்போன்களுக்கான செலவு, தாக்கத்தை ஏற்படுத்தும், சீனாவில் 5ஜி ஸ்மார்ட்போன்கள் திறம்பட சந்தைப்படுத்த அனுமதி
கொடுக்கப்படுகிறது.

மொபைல் போன்களின்

சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், 2020-ம் ஆண்டில் உலக அளவில், கணினிகள், லேப்லெட்டுகள் மற்றும் மொபைல் போன்களின் ஏற்றுமதியும் விற்பனையும் 13.6சதவிகிதம் வீழ்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சேர்ந்தவர்கள்

தற்போது வீட்டில் இருந்து அலுவலகப்பணியை மேற்கொள்பவர்கள் பெரும்பாலும் தகவல் தொழில்நுட்பத் துறைகளை சேர்ந்தவர்கள், தற்போதைய மாறும் காலகட்டமும், கொரொனாவின் அழுத்தமும், அதிகமான ஊழியர்கள் வீட்டில் இருந்தே அலுவலக பணியை மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தை உருவாக்கியிருப்பதால்,நோட்புக்குள், டேப்லெட்டுகள், குரோம் சாதனங்களுக்கான தேவைகள்
அதிகரித்துள்ளன.

 எதிர்பார்க்கப்படுகிறது. 2020 ஆம் ஆண்டில் நோட்புக்குகள்,டேப்

ஆனால் கணினி ஏற்றுமதி இந்த ஆண்டு 10.5 சதவீதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2020 ஆம் ஆண்டில் நோட்புக்குகள்,டேப்லெட்டுகள் மற்றும் Chromebook களின் ஏற்றுமதி குறையும், ஆனால் இவற்றைவிட கணினிகளின் ஏற்றுமதி பெருமளவில் குறையும் என்றும் கணிப்புகள் கூறுகின்றன.

Best Mobiles in India

English summary
Mobile Phone Shipments Process will Reduce Due to Covid-19: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X