Home
Deal of the day

பொக்குனு போட்ட OnePlus.. ரூ.2,000 ஆஃபர் ரேட்ல 10050mAh பேட்டரி.. 33W சார்ஜிங்.. 4 ஸ்பீக்கர்கள்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் பேட் கோ 2 (OnePlus Pad Go 2) மாடல் தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. குவாட் ஸ்பீக்கர்கள் மட்டுமல்லாமல், டால்பி அட்மோஸ் ஆடியோ கொடுத்துள்ளது. 12.1 இன்ச் டிஸ்பிளேவுடன் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. இந்த ஒன்பிளஸ் பேட் கோ 2 மாடலின் தள்ளுபடியை பார்க்கலாம்.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வை-பை வேரியண்ட்டின் விலை ரூ.27,999ஆக இருக்கிறது. 3 சதவீத தள்ளுபடி போக இந்த விலைக்கு கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.2,000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.25,999 விலைக்கு இந்த ஒன்பிளஸ் பேட் கோ 2 டேப்லெட்டை வாங்கி கொள்ளலாம்.

பொக்குனு போட்ட OnePlus.. ரூ.2,000 ஆஃபர் ரேட்ல 10050mAh பேட்டரி!

ஒன்பிளஸ் பேட் கோ 2 அம்சங்கள் (OnePlus Pad Go 2 Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 அல்ட்ரா 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 Ultra 4nm) சிப்செட் மற்றும் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டை இந்த ஒன்பிளஸ் பேட் கோ 2 கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஆக்ஸிஜன்ஓஎஸ் 16 (OxygenOS 16) கிடைக்கிறது.

12.1 இன்ச் (2800 x 1980 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 900 எச்பிஎம் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 7:5 அஸ்பெக்ட் ரேசியோ கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த டிஸ்பிளேவுக்கு 284 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 12 பிட் ஸ்கிரீன் கலர் டெப்த் கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த டிஸ்பிளேவுக்கு ஏற்ப 4 ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. இந்த குவாட் ஸ்பீக்கர்களுக்கு (Quad Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆடியோ சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio) சப்போர்ட் கிடைக்கிறது. எஸ்பிசி (SBC), ஏஏசி (AAC), எல்டிஏசி (LDAC) உள்ளிட்ட ப்ளூடூத் ஆடியோ கோடக் சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.

ஆகவே, பிஎல்இ ஆடியோ (BLE Audio), ப்ளூடூத் 5.4 லோவ் எனர்ஜி (Bluetooth 5.4 Low Energy) கிடைக்கிறது. மேலும், வை-பை 6 (Wi-Fi 6) கனெக்டிவிட்டி கொண்டுள்ளது. 8 எம்பி ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமராவை இந்த ஒன்பிளஸ் பேட் கோ 2 டேப்லெட் கொடுத்து உள்ளது. 33W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 10050mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த பேட்டரியுடன் 597 கிராம் எடை மற்றும் 6.83 எம்எம் தடிமன் கொண்டுள்ளது. மேலும், ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த ஒன்பிளஸ் பேட் கோ 2 இருக்கிறது. ஆகவே, இயர்பட்ஸ் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்களுக்கு இதில் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கும். டைப்-சி சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.

லாவெண்டர் டிரிஃப்ட் (Lavender Drift) மற்றும் ஷேடோ பிளாக் (Shadow Black) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். வை-பை வேரியண்ட் மட்டுமல்லாமல், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரியுடன் 5ஜி வேரியண்ட்டும் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த வேரியண்ட்டின் விலை ரூ.33,999 பட்ஜெட்டில் இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Pad Go 2 With 8GB RAM Wi-Fi Only Available At Rs 2000 Discount on Flipkart Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X