Home
Mobile

மிரட்டி விட்டாப்ல.. ரூ.15,999 க்கு 6500mAh பேட்டரி.. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்.. IP64 Pro ரேட்டிங்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் டெக்னோ பாப் எக்ஸ் 5ஜி (TECNO POP X 5G) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பட்ஜெட் விலையில் 6500mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், IP64 ப்ரோ ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுத்து உள்ளது.

அரிசோன்டல் கேமரா டிசைன் கொண்ட மாடல்களுக்கு இப்போது, நல்ல வரவேற்பு இருக்கிறது. பிரீமியம் மாடல்களில் கிடைத்த இந்த டிசைன் இப்போது பட்ஜெட் விலைக்கு கிடைக்கிறது. இதில் டெக்னோ பாப் எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் புதிதாக சேர்ந்துள்ளது. 6 சீரிஸ் ஏரோஸ்பேஸ்-கிரேடு அலுமினியம் கேமரா டெகோ (Aerospace-grade Aluminum Camera Deco) கொடுத்துள்ளது.

மிரட்டி விட்டாப்ல.. ரூ.15,999 க்கு 6500mAh பேட்டரி.. 45W சார்ஜிங்!

டிசைன் மட்டுமல்லாமல், ஏஐ பீச்சர்களில் பட்டையை கிளப்புகிறது. ஆகவே, ஏஐ நாய்ஸ் கேன்சலேஷன் (AI Noise Cancellation), ஏஐ ரைட்டிங் அசிஸ்டன்ட் (AI Writing Assistant) கிடைக்கிறது. மேலும், கேமராவுக்கு ஏஐ எரைசர் 2.0 (AI Eraser 2.0), ஏஐ இமேஜ் எக்ஸ்டெண்டர் (AI Image Extender), ஏஐ ஃபிளாஷ் ஸ்னாப் (AI Flash Snap) போன்ற பீச்சர்கள் கொடுக்கப்பட்டு உள்ளன.

ப்ரீலிங்க் கம்யூனிகேஷன் (FreeLink Communication) டெக்னாலஜி கிடைக்கிறது. செல்லூலார் கனெக்டிவிட்டி கிடைக்காத பகுதிகளில் டிவைஸ்-டூ-டிவைஸ் கனெக்டிவிட்டி கொடுக்கிறது. இதில் டெக்ஸ்ட், வாய்ஸ் கால்கள் மற்றும் ஃபைல் ஷேரிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. டிஸ்பிளே, கேமரா, சிப்செட் மற்றும் பேட்டரி போன்ற பீச்சர்களும் பக்காவாக இருக்கின்றன.

டெக்னோ பாப் எக்ஸ் 5ஜி அம்சங்கள் (TECNO POP X 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6400 6nm) சிப்செட்டை இந்த டெக்னோ பாப் எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. மேலும், ஹைஓஎஸ் 16 (HiOS 16) மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு உள்ளது. 13 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது.

8 எம்பி செல்பீ ஷூட்டரை இந்த டெக்னோ பாப் எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. 6.78 இன்ச் (720 x 1576 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 560 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுத்து உள்ளது.

IP64 Pro ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. மேலும், சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கிடைக்கிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கிடைக்கிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6500mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 8.18 எம்எம் தடிமன் மற்றும் 210 கிராம் எடை உள்ளது.

4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.15,999ஆக இருக்கிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.17,999ஆக இருக்கிறது. வருகிற ஏப்ரல் 24ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. அமேசான் தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். பேங்க் டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
TECNO POP X 5G With 6500mAh Battery launched in India Sale From April 24 on Amazon Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X