Home
Mobile

இவ்வளவு விலையா? மிரட்டலான மோட்டோரோலா 5ஜி போன் ரெடி.. 6500mAh பேட்டரி.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?

மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ (motorola edge 70 Pro) ஸ்மார்ட்போன் வரும் ஏப்ரல் 22-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த போனின் விலை குறித்த தகவல்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது.

அதன்படி இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.30,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இப்போது இந்த போனின் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

இவ்வளவு விலையா? மிரட்டலான மோட்டோரோலா 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?

மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ அம்சங்கள் (motorola edge 70 Pro Specifications): மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ போன் 6.8 இன்ச் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 2712 x 1220 பிக்சல்கள், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 5200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் புரொடெக்சன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 8500 எக்ஸ்ட்ரீம் எஸ்ஒசி (MediaTek Dimensity 8500 Extreme SoC) சிப்செட் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் 4600mm² விசி கூலிங் (4600mm² VC cooling) சிஸ்டம் ஆதரவும் இந்த போனில் உள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

அதுவும் 50எம்பி LYTIA-710 மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள ரியர் கேமரா உடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ போன் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் உடன் இந்த போன் வெளியாகும்.

அதேபோல் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மூலம் மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு மூன்று வருட ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் ஐந்து வருட பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ போனில் உள்ளது. 12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவும் இதில் உள்ளது.

6500mAh பேட்டரி மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ போனில் உள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டி (Dual 4G VoLTE), வை-பை 6இ (Wi-Fi 6E), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) மற்றும் ஜிபிஎஸ் (GPS) உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன.

அதுவும் IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். அதேபோல் MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் இந்த போன் வெளியாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
motorola edge 70 Pro India price leaked ahead of April 22 launch: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X