ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.15000 பட்ஜெட்ல SONY கேமரா.. 5000mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் வாவ் டீல் விற்பனை (Wow Deal Sale) நடக்கிறது. இதில் லாவா மொபைல்ஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் லாவா பிளே அல்ட்ரா 5ஜி (Lava Play Ultra 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
இப்போது, பிளிப்கார்ட் வாவ் டீல் விற்பனையில் லாவா பிளே அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட மாடலுக்கு 24 சதவீத தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடியுடன் ரூ.15,878 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டு வழியாக வாங்கினால் ரூ.794 தள்ளுபடி கிடைக்கும். ரூ.15,084 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

லாவா பிளே அல்ட்ரா 5ஜி அம்சங்கள் (Lava Play Ultra 5G Specifications): மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டுடன் ஆக்டா கோர் 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 (4nm Octa Core MediaTek Dimensity 7300) சிப்செட்டை இந்த லாவா பிளே அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) உள்ளது. 2 ஆண்ட்ராய்டு அப்டேட்கள் (Android Updates) உள்ளன.
மேலும், 3 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை இந்த லாவா பிளே அல்ட்ரா 5ஜி போன் கொடுத்துள்ளது. 6.67 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 1080 x 2400 பிக்சல்கள் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 394 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் டிசிஐ பி3 ( DCI P3) கலர் காமட் கிடைக்கிறது.
64 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி மேக்ரோ கேமராவை இந்த லாவா பிளே அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. சோனி ஐஎம்எக்ஸ்682 (Sony IMX682) சென்சார் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Electronic Image Stabilization) கிடைக்கிறது. 4K ரெக்கார்டிங், நைட் மோட் (Night Mode), ஏஐ மோட் (AI Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), பியூட்டி மோட் (Beauty Mode) கிடைக்கிறது.
மேலும், ப்ரோ மோட் (Pro Mode), ப்ரோ வீடியோ (Pro Video), டூயல் வியூ வீடியோ (Dual View Video) மற்றும் மேக்ரோ (Macro) கிடைக்கிறது. 13 எம்பி செல்பீ ஷூட்டரை இந்த லாவா பிளே அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 7.8 எம்எம் தடிமன் மற்றும் 182 கிராம் எடை கொடுத்து உள்ளது.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோஎல்டிஇ மற்றும் வை-பை 6இ கிடைக்கிறது. மேலும், ப்ளூடூத் 5.2 உள்ளது. ஆர்டிக் ப்ரோஸ்ட் (Arctic Frost) மற்றும் ஆர்டிக் ஸ்லேட் (Arctic Slate) ஆகிய கலர்களில் வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








