ஏப்.23 க்கு குறிச்சாச்சு.. பட்ஜெட்ல 6300mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. 13MP கேமரா.. புது POCO போன்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் பட்ஜெட் விலை மாடல்களாக களமிறங்க இருக்கும் போகோ சி81 (POCO C81), போகோ சி81எக்ஸ் (POCO C81X) ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி மட்டுமல்லாமல், முக்கிய பீச்சர்கள் மற்றும் விற்பனை விவரங்கள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. இந்த போகோ மாடல்களின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி இந்த போகோ சி81 மற்றும் போகோ சி81எக்ஸ் ஸ்மார்ட்போன்கள் வெளியாக இருக்கின்றன. முந்தைய மாடல்களை போலவே பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனை கிடைக்க இருக்கின்றன. ஆகவே, முக்கிய பீச்சர்கள் அந்த தளத்தில் உறுதியாகி உள்ளன. பட்ஜெட்டில் பெரிய பேட்டரியை விரும்பும் பிரியர்களுக்கு ஏற்ற மாடலாக இருக்கிறது.

2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் போகோ சி71 (POCO C71) ஸ்மார்ட்போன் வெளியாகியது. அதேபோல இந்த ஏப்ரலில் போகோ சி81 ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. ஆனால், டபுள் ட்ரீட்டாக போகோ சி81எக்ஸ் ஸ்மார்ட்போனும் வெளியாக இருக்கிறது. போகோ சி71 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டானது ரூ.7,499 பட்ஜெட்டில் வெளியாகியது.
ஆகவே, போகோ சி81 ஸ்மார்ட்போனை ரூ.10,000 பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம். அதேபோல போகோ சி81எக்ஸ் ஸ்மார்ட்போனும் பட்ஜெட் விலையிலேயே வெளியாக வாய்ப்புள்ளது. இதனாலேயே இந்த மாடல்களுக்கு எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இப்போது, பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், டிஸ்பிளே உள்ளிட்ட பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
போகோ சி81 அம்சங்கள் (POCO C81 Specifications): போகோ சி71 ஸ்மார்ட்போனில் 5200mAh பேட்டரி மட்டுமே கிடைத்தது. ஆனால், இதில் 6300mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது. 1000 சார்ஜிங் சைக்கிள்களுக்கு பிறகும் 80 சதவீத பேட்டரி ஹெல்த் உறுதி செய்யப்பட்டு உள்ளது. பட்ஜெட் மாடலாக இருப்பதால், 15W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7.5W ரிவர்ஸ் சார்ஜிங் கிடைக்கிறது.
13 எம்பி ரியர் கேமராவை இந்த போகோ சி81 ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. சிப்செட்டில் எந்த அப்கிரேடும் செய்யப்படவில்லை. போகோ சி71 ஸ்மார்ட்போனில் கிடைத்த அதே யுனிசோக் டி7250 (UNISOC T7250) கிடைக்கிறது. ஆனால், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு உள்ளது. சியோமி ஹைப்பர்ஓஎஸ் 3 (Xiaomi HyperOS 3) கிடைக்கிறது.
6.9 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. இது முந்தைய மாடலைவிட கொஞ்சம் பெரிய டிஸ்பிளேவாக இருக்கிறது. ஆகவே, ஸ்லிம் பாடியை எதிர்பார்க்கலாம். மற்ற பீச்சர்கள் அடுத்தடுத்து வெளியாக வாய்ப்புள்ளது. இப்போது, போகோ சி81எக்ஸ் ஸ்மார்ட்போனில் கிடைக்க இருக்கும் பீச்சர்களை பார்க்கலாம்.
போகோ சி81எக்ஸ் அம்சங்கள் (POCO C81X Specifications): 5200mAh பேட்டரியை இந்த போகோ சி81எக்ஸ் ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. இது போகோ சி71 மாடலில் கிடைத்த பேட்டரி கேபாசிட்டியாக இருக்கிறது. மேலும், 15W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7.5W ரிவர்ஸ் சார்ஜிங் கொடுக்கப்பட உள்ளது. 1000 சார்ஜிங் சைக்கிள்களுக்கு பிறகு 80 சதவீத பேட்டரி ஹெல்த் கிடைக்கிறது.
இந்த பீச்சர்கள் மட்டுமே இந்த போகோ சி81எக்ஸ் ஸ்மார்ட்போனுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளியீட்டுக்கு 3 நாட்களே இருப்பதால், மற்ற பீச்சர்கள் ஓரிரு நாட்களில் வெளியாகும். அதேபோல பட்ஜெட் விவரங்களும் வெளியாக வாய்ப்புள்ளது. அப்படி இல்லையென்றால், மார்கெட்டில் கசிந்துவிடும். எப்படி பார்த்தாலும், பட்ஜெட் பிரியர்களுக்கு ஏற்ற மாடலாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








