ஒரே ஒரு ரீசார்ஜ்.. 365 நாட்களுக்கும் ஓஹோன்னு நன்மைகள்.. BSNL-வின் இந்த 4 சூப்பர் பிளான்களை பற்றி தெரியுமா?

|

அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் ஆபரேட்டர் ஆன பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது ஒரே ஒரு ரீசார்ஜில், 365 நாட்களுக்கும்.. அதாவது 1 ஆண்டு முழுவதும்.. ஓஹோவென்று நன்மைகளை வழங்கும் 4 சூப்பரான பிளான்களை தன்வசம் கொண்டுள்ளது!

அதென்ன பிளான்கள்? அவற்றின் விலை நிர்ணயங்கள் என்ன? அவைகள் வழங்கும் நன்மைகள் என்னென்ன? இதோ விவரங்கள்:

வேறு எந்த நிறுவனத்திடம் இருந்தும் கிடைக்கவில்லை!

வேறு எந்த நிறுவனத்திடம் இருந்தும் கிடைக்கவில்லை!

பிஎஸ்என்எல் (BSNL) என்று நன்கு அறியப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட், இந்தியாவின் மிகப்பெரிய வயர்லைன் நெட்வொர்க்குகளில் ஒன்றாகும்.

இந்நிறுவனத்தின் போட்டியாளர்களான ஏர்டெல் (Airtel) மற்றும் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) ஏற்கனவே 5ஜி சேவைகளை (5கி Service) அறிமுகம் செய்துவிட்டன. ஆனால் பிஎஸ்என்எல் இன்னும் 4ஜி-யை கூட அறிமுகப்படுத்தாததால் - ஒப்பீட்டளவில் - இந்நிறுவனம் மிகவும் பின்தங்கியுள்ளது.

ஆனாலும் கூட, பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் அளவிற்கு, பல்வேறு வகையான ப்ரீபெய்ட் ரீசார்ஜ்களை (Prepaid Recharges) வேறு எந்த நிறுவனத்திடம் இருந்தும் கிடைக்கவில்லை.

வேலையை காட்டிய BSNL.. ஜனவரி 1 முதல் சைலன்ட் ஆக அமல் ஆன புதிய மாற்றம்! இனிமே இப்படி தான்!வேலையை காட்டிய BSNL.. ஜனவரி 1 முதல் சைலன்ட் ஆக அமல் ஆன புதிய மாற்றம்! இனிமே இப்படி தான்!

குறிப்பாக 365 டேஸ் வேலிடிட்டி என்று வந்துவிட்டால்..?

குறிப்பாக 365 டேஸ் வேலிடிட்டி என்று வந்துவிட்டால்..?

365 நாட்கள் என்கிற வேலிடிட்டியை (365 Days Validity) வழங்குவதில் பிஎஸ்என்எல்-ஐ அடித்துக்கொள்ள ஆளே இல்லை எனலாம். ஏனென்றால், இந்நிறுவனத்திடம் ஒன்றல்ல, இரண்டல்ல - மொத்தம் நான்கு ஓராண்டு திட்டங்கள் உள்ளன.

இன்னும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இந்த 4 திட்டங்களுமே ஒரே மாதிரியான வேலிடிட்டியை (Validity) வழங்கினாலும் கூட, அவைகள் வழங்கும் நன்மைகளில் (Benefits) வேறுபடுகின்றன.

ஆகையால், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான நன்மைகளை வழங்கும் திட்டத்தை "சுதந்திரமாக" தேர்வு செய்ய முடியும்.

01. பிஎஸ்என்எல் ரூ.1,515 ப்ரீபெய்ட் திட்டம்:

01. பிஎஸ்என்எல் ரூ.1,515 ப்ரீபெய்ட் திட்டம்:

பிஎஸ்என்எல்-ன் ரூ.1515 திட்டமானது, ஒவ்வொரு நாளும் 2ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் ஒரு ப்ரீபெய்ட் திட்டமாகும். முன்னரே குறிப்பிட்டபடி, இதன் வேலிடிட்டி - 365 நாட்கள் ஆகும்.

2ஜிபி என்கிற தினசரி டேட்டா வரம்பை (Daily Data Limit) மீறிய பின்னர், இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் 40கேபிபிஎஸ் (40Kbps) ஆக குறைக்கப்படும்.

மேலும் இது ஒரு டேட்டா ஒன்லி ரீசார்ஜ் (Data Only Recharge) ஆகும். அதாவது இந்த திட்டத்தில் டேட்டாவை தவிர்த்து வேறு எந்த நன்மையையும் கிடைக்காது. ஒருவேளை உங்களுக்கு டேட்டாவுடன் சேர்த்து வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் நன்மையையும் தேவையென்றால், கீழ்வரும் திட்டங்களை கருத்தில் கொள்ளவும்.

நேர்மைக்கும், பொறுமைக்கும் கிடைத்த பரிசு! BSNL-ஐ நக்கல் அடிச்சவங்கலாம்.. இப்போ மூஞ்ச எங்க வச்சிப்பாங்க?நேர்மைக்கும், பொறுமைக்கும் கிடைத்த பரிசு! BSNL-ஐ நக்கல் அடிச்சவங்கலாம்.. இப்போ மூஞ்ச எங்க வச்சிப்பாங்க?

02. பிஎஸ்என்எல் ரூ.1,999 ப்ரீபெய்ட் திட்டம்:

02. பிஎஸ்என்எல் ரூ.1,999 ப்ரீபெய்ட் திட்டம்:

பிஎஸ்என்எல்-ன் ரூ.1,999 திட்டமானது 600ஜிபி அளவிலான மொத்த டேட்டாவை வழங்கும் ஒரு ப்ரீபெய்ட் திட்டம் ஆகும். குறிப்பிட்ட டேட்டா லிமிட் தீர்ந்த பிறகு (அதாவது 600ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு) இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் 40கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

365 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வரும் இந்த திட்டம், ஒவ்வொரு இந்திய வட்டத்திலும் (All Indian Circles) ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ஒரு திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் கீழ், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளும் அணுக கிடைக்கும்.

கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை, 30 நாட்களுக்கு பிஆர்பிடி ரிங்டோன், 30 நாட்களுக்கு ஈரோஸ் நவ் எண்டர்டெயின்மென்ட் மற்றும் 30 நாட்களுக்கு லோக்துன் கன்டென்ட் போன்றவைகள் இலவசமாக கிடைக்கும்.

03. பிஎஸ்என்எல் ரூ.2,399 ப்ரீபெய்ட் திட்டம்:

03. பிஎஸ்என்எல் ரூ.2,399 ப்ரீபெய்ட் திட்டம்:

பிஎஸ்என்எல்-ன் ரூ.2,399 திட்டமானது 395 நாட்கள் வேலிடிட்டி மற்றும் தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்கும் ஒரு ப்ரீபெய்ட் திட்டம் ஆகும். இது அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்-களையும் வழங்கும்.

கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை, இது முதல் 30 நாட்களுக்கு ரிங்டோன், ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் மற்றும் லோக்துன் கன்டென்ட்டிற்கான இலவச அணுகலை வழங்கும்.

மேலும் - வழக்கம் போல - டெய்லி டேட்டா வரம்பை "தொட்டதும்" இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் 40கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

ஹலோ அம்பானி சார்.. BSNL-ஐ பார்த்து கத்துக்கோங்க! காசு இல்ல கஸ்டமர் தான் முக்கியம்னு நிரூபிக்கும் ஒரு ஆபர்!ஹலோ அம்பானி சார்.. BSNL-ஐ பார்த்து கத்துக்கோங்க! காசு இல்ல கஸ்டமர் தான் முக்கியம்னு நிரூபிக்கும் ஒரு ஆபர்!

04. பிஎஸ்என்எல் ரூ.2,999 ப்ரீபெய்ட் திட்டம்:

04. பிஎஸ்என்எல் ரூ.2,999 ப்ரீபெய்ட் திட்டம்:

இந்த பட்டியலில் கடைசியாக உள்ள திட்டம், பிஎஸ்என்எல்-ன் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் ஆகும். டேட்டா நன்மையை தவிர்த்து, இந்த திட்டத்தின் மற்ற நன்மைகள் அனைத்தும் ரூ.2,399 திட்டத்துடன் ஒப்பிடத்தக்கது.

அதாவது ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டமானது, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள், முதல் 30 நாட்களுக்கு பிஆர்பிடி ரிங்டோன், ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் மற்றும் லோக்துன் கன்டென்ட்டிற்கான இலவச அணுகல் போன்ற நன்மைகளை வழங்குகிறது.

ஆனால் இது 2ஜிபி என்கிற டெய்லி டேட்டாவிற்கு பதிலாக 3ஜிபி டெய்லி டேட்டாவை வழங்கும்!

Best Mobiles in India

English summary
Looking For BSNL Best Validity Plan 2023 Check Out These 4 Prepaid Recharge Offers 365 Days Validity

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X