Home
Mobile

மார்ச் 10 வரை எந்த 5G போனும் வாங்கிடாதீங்க.. பக்கா பட்ஜெட்டில் புது POCO 5ஜி போன் அறிமுகமாகுது!

யோவ்.. நக்கல் தான்யா உனக்கு என்று கூறும் படியாக போக்கோ (POCO) நிறுவனமானது, மேலும் ஒரு புதிய ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியாவில் இந்நிறுவனம், அதன் போக்கோ எக்ஸ்8 ப்ரோ சீரீஸின் கீழ் 2 புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை இம்மாதம் (மார்ச் 2026) அறிமுக செய்யவுள்ளது.

இந்த சீரிஸின் கீழ் போக்கோ எக்ஸ்8 ப்ரோ மற்றும் போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் என்கிற 2 மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்றும், இது மார்ச் 26 ஆம் தேதியன்று அறிமுகம் ஆகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் போக்கோ நிறுவனம் மார்ச் 10 ஆம் தேதியன்று முற்றிலும் வேறொரு சீரீஸின் கீழ் இன்னொரு புதிய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.

மார்ச் 10 வரை எந்த 5G போனும் வாங்கிடாதீங்க.. புது POCO 5ஜி போன்!

என்ன மாடல்? அது போக்கோ சி85எக்ஸ் 5ஜி (Poco C85x 5G ) ஸ்மார்ட்போனாகும். பிளிப்கார்ட்டில் உள்ள பிரத்யேக மைக்ரோசைட்டின் படி, இது வருகிற மார்ச் 10 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். கூடவே வரவிருக்கும் போக்கோ ஸ்மார்ட்போனின் டிசைனையும் வெளிப்படுத்தியுள்ளது.

அதன்படி போக்கோ சி85எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் டூயல் டோன் ரியர் பேனலை கொண்டிருக்கும். கீழ்-இடது மூலையில் போக்கோ பிராண்டிங் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கோல்ட் கலர் ஆப்ஷனில் வருவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் உள்ள டூயல் ரியர் கேமரா செட்டப் ஆனது பில்-ஷேப்டு கேமரா ஐலேண்ட்டின் உள்ளே வைக்கப்பட்டுள்ளது. கேமரா மாட்யூலுக்கு அடுத்ததாக ஒரு LED ஃபிளாஷும் வைக்கப்பட்டுள்ளது. முக்கிய அம்சங்கள் இன்னும் டீஸ் செய்யப்படவில்லை.

போக்கோ சி85எக்ஸ் 5ஜி என்ன விலைக்கு வரலாம்? போக்கோ சி85எக்ஸ் 5ஜி ஆனது டிசம்பர் 2025 இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட போக்கோ சி85 5ஜி-க்கு பிறகு, நிறுவனத்தின் சி-சீரீஸின் கீழ் அடுத்ததாக வரும் மாடலாகும். நினைவூட்டும் வண்ணம் போக்கோ சி85 5ஜி மாடலின் பேஸிக் ஆப்ஷன் ரூ.12,499 க்கு அறிமுகமானது. ஆக இது ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் (ரூ.14,999 க்கு) அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.

போக்கோ சி85 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு உடனான 6.9-இன்ச் பிளாட் எச்டி பிளஸ் டிஸ்பிளாஸ், தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IP64 ரேட்டிங், 6என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 சிப்செட், 50எம்பி (f/1.8) டூயல் ரியர் கேமரா செட்டப், 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 6,000mAh பேட்டரி ஆகிய அம்சங்கள் உள்ளன.

போக்கோ எக்ஸ்8 ப்ரோ சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் சிப்செட் உறுதி செய்யப்பட்டுள்ளது: போக்கோ பிராண்ட் பகிர்ந்துள்ள ஒரு டீஸர், போக்கோ எக்ஸ்8 ப்ரோ சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது மீடியாடெக் (MediaTek) நிறுவனத்தின் டைமன்சிட்டி 8500 அல்ட்ரா (Dimensity 8500 Ultra) மற்றும் டைமன்சிட்டி 9500எஸ் (Dimensity 9500s) சிப்களில் இயங்கும் என்பதை உறுதி செய்துள்ளது.

இருப்பினும் போக்கோ நிறுவனம் இன்னும் சரியான மாடல் பெயர்களை உறுதிப்படுத்தவில்லை. ஆகையால் எந்த மாடலில் எந்த சிப்செட் இடம்பெறும் என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.பெரும்பாலும் போக்கோ எக்ஸ்8 ப்ரோ மாடல் ஆனது டைமன்சிட்டி 8500 அல்ட்ரா சிப்பை பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் மாடல் ஆனது டைமன்சிட்டி 9500எஸ் கொண்டு இயங்கலாம்.

வரவிருக்கும் புதிய போக்கோ எக்ஸ்8 ப்ரோ சீரிஸ் மாடல்களில் இடம்பெறும் சிப்செட்கள் - விலை ஏற்றத்திற்கு வழிவகுக்கலாம். அப்படியாக போக்கோ எக்ஸ்8 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.30,000 - ரூ.33,000 க்குள் என்கிற வரம்பில் நிலைநிறுத்தப்படலாம். ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை இன்னும் அதிகமாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
Poco C85x 5G All Set to Launch in India on March 10 What Will be The Price Range
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X