Just In
- 38 min ago
Apple-க்கு தண்ணீ காட்டிய Samsung.! புது டிவைஸால் சூடுபிடிக்கப்போகும் ஆட்டம்.!
- 2 hrs ago
அட்டகாசமான வடிவமைப்புடன் இந்தியாவில் களமிறங்கும் கோகோ கோலா போன்: அறிமுகம் தேதி இதுதான்.!
- 15 hrs ago
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- 16 hrs ago
BSNL தரும் இந்த சலுகையை இந்தியாவில் வேறு யாருமே தரவில்லை.! மலிவு விலையில் 1 வருட 1 டைம் ரீசார்ஜ்.!
Don't Miss
- Movies
அதிர்ச்சி.. பரியேறும் பெருமாள் நடிகர் நெல்லை தங்கராஜ் காலமானார்.. சோகத்தில் திரையுலகம்
- News
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல்:எடப்பாடி பழனிசாமியுடன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திடீர் சந்திப்பு
- Automobiles
டொயோட்டா ஹைரைடர் சிஎன்ஜி vs மாருதி சுஸுகி கிராண்ட் சிஎன்ஜி... இந்த இரண்டு கார் மாடலில் எது பெஸ்ட்?
- Lifestyle
Today Rasi Palan 03 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கவனக்குறைவே பெரும் சிக்கலை உண்டாக்கக்கூடும்...
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
30 நாட்கள் வேலிடிட்டி உடன் அதிக சலுகைகளை வழங்கும் Jio, Airtel, VI ப்ரீபெய்ட் திட்டங்கள்.!
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தகுந்தபடி பட்ஜெட் விலையில் அதிக டேட்டா நன்மையுடன் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகின்றன. குறிப்பாக 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களை விட தற்போது 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டங்களைத் தான் மக்கள் அதிகம் தேர்வு செய்கின்றனர்.

30 நாட்கள் வேலிடிட்டி
ஆனால் இந்த தனியார் டெலிகாம் நிறுவனங்கள் கூடிய விரைவில் ப்ரீபெய்ட் திட்டங்களின் கட்டணத்தை உயர்த்தும் என்று கூறப்படுகிறது. எனவே இப்போதே ஒரு நல்ல திட்டங்களைத் தேர்வு செய்வது நல்லது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் அருமையான ப்ரீபெய்ட் திட்டங்களைப் பார்ப்போம்.

ஜியோ ரூ.259 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ ரூ.259 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். குறிப்பாக வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் இதில் உள்ளது. இதுதவிர இதுதவிர ஜியோவின் ஜியோடிவி, ஜியோசினிமா,ஜியோகிளவுட் மற்றும் ஜியோ செக்யுரிட்டி போன்ற செயலிகளுக்கான சந்தாவும் வழங்கப்படுகின்றன.

ஜியோ ரூ.296 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ ரூ.296 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது மொத்தமாக 25ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். குறிப்பாக வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் இதில் உள்ளது. இதுதவிர இதுதவிர ஜியோவின் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோகிளவுட் மற்றும் ஜியோ செக்யுரிட்டி போன்ற செயலிகளுக்கான சந்தாவும் வழங்கப்படுகின்றன.

ஏர்டெல் ரூ.319 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.319 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். குறிப்பாக வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர Apollo 24|7 Circle, FASTag இல் ரூ.100 கேஷ்பேக், இலவச Hellotunes மற்றும் Wynk Music ஆகிய அணுகலும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ 296 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ 296 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 30 நாட்கள் வேலிடிட்டி உடன் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் மொத்தம் 25 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயனர்களுக்கு தினசரி 100 எஸ்எம்எஸ் உடன் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. Apollo 24|7 Circle, FASTag இல் ரூ.100 கேஷ்பேக், இலவச Hellotunes மற்றும் Wynk Music ஆகிய அணுகலும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கையில், இந்த திட்டத்தில் பயனர்களுக்கு மொத்தம் 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. பயனர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு, 30 நாட்களுக்கு 300 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் ஏர்டெல் தேங்க்ஸ், விங்க் மியூசிக் மற்றும் Hellotunes நன்மைகள் வழங்கப்படுகிறது.

வோடபோன் ஐடியா ரூ.319 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா ரூ.319 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். மேலும் வீக்கெண்ட் ரோல் ஓவர் டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், Vi movies TV அணுகல், தினசரி 100 எஸ்எம்எஸ், binge all night உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

வோடபோன் ஐடியா ரூ.337 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா ரூ.337 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது மொத்தமாக 28ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும்.மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், Vi movies TV அணுகல், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470