Home
News

ஒரே ஏர்டெல் ரீசார்ஜ்.. ஒரு வருடம் வேலிடிட்டி.. OTT.. தினசரி 2.5ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்..

ஏர்டெல் (airtel) நிறுவனம் பயனர்களின் பாதுகாப்பு விஷயத்தில் அதிக கவனம் செலுத்துகிறது. அதேபோல் இந்நிறுவனம் அவ்வப்போது ப்ரீபெய்ட் திட்டங்களில் சலுகைகள் வழங்குகிறது. எனவே தான் இந்நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சரி இப்போது இந்நிறுவனத்தின் ஒரு வருட வேலிடிட்டி தரும் ப்ரீபெய்ட் திட்டங்களின் பட்டியலைப் பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ 1849 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 1849 prepaid plan) 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மை இந்த திட்டத்தில் உள்ளது. மேலும் இந்த திட்டத்தில் 3600 எஸ்எம்எஸ், ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), ரூ.4000 மதிப்புள்ள adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம் (adobe express premium) உள்ளிட்ட நன்மைகளும் உள்ளன. ஆனால் இந்த திட்டத்தில் டேட்டா நன்மை கிடைக்காது.

ஒரே ஏர்டெல் ரீசார்ஜ்.. ஒரு வருடம் வேலிடிட்டி.. ஓடிடி..

ஏர்டெல் ரூ 2249 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 2249 prepaid plan) 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை இந்த திட்டம் மூலம் பெற முடியும். அதேபோல் இந்த திட்டத்தில் மொத்தமாக 30ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன.

அதன்படி ஏர்டெல் நிறுவனத்தின் ரூ 2249 ப்ரீபெய்ட் திட்டத்தில் மொத்தம் 3600 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. மேலும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (airtel xstream play) சந்தா, ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம் உள்ளிட்ட நன்மைகளும் இந்த அசத்தலான ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகின்றன.

ஏர்டெல் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 3599 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. 365 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கிறது. நீங்கள் இந்த ஏர்டெல் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 730ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.3599 திட்டத்தில் வழங்கப்படுகிறது. தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (airtel xstream play) சந்தா, உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

ஒரே ஏர்டெல் ரீசார்ஜ்.. ஒரு வருடம் வேலிடிட்டி.. ஓடிடி..

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 3999 prepaid plan) ஒரு வருடம் வேலிடிட்டி வழங்குகிறது. இந்த திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. எனவே இந்த ஏர்டெல் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 912.5ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் திட்டத்தில் தினசரி 2.5 டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

இந்த ஏர்டெல் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம் 1 வருடத்திற்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தாவை வழங்குகிறது இந்த திட்டம்.மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.3999 திட்டத்தில் வழங்கப்படுகிறது. adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம், இலவச ஹாலோ டியூன்ஸ் (Hellotunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா(unlimited 5g data), தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளை இந்த திட்டம் மூலம் பெற முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Prepaid Plans with 365 Days Validity and Unlimited Benefits in 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X