Home
News

கேபிள் TV கதை அம்பேல்.. 350+ சேனல்கள்.. 6 மாதங்கள் வேலிடிட்டி.. 22+ ஓடிடி சந்தா.. 40எம்பிபிஎஸ் வை-பை டேட்டா!

ஏர்டெல் நிறுவனத்தின் பிராட்பேண்ட் திட்டத்தில் 350+ லைவ் டிவி சேனல்கள் மட்டுமல்லாமல், எச்டி சேனல்கள், 22+ ஓடிடி ஆப்களின் சந்தா கிடைக்கிறது. மேலும், 40 எம்பிபிஎஸ் வேகத்தில் வை-பை டேட்டா சலுகைகள் கிடைக்கிறது. 6 மாதங்கள் அல்லது 12 மாதங்கள் வேலிடிட்டியை தேர்ந்தெடுத்தால், வை-பை ரூட்டர் மற்றும் இன்ஸ்டாலேஷன் இலவமாக கொடுக்கப்பட்டு உள்ளது.

கேபிள் டிவிகளுக்கு மாற்றாக ஆண்ட்ராய்டு பாக்ஸ் வழியாக ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் லைவ் டிவி சேனல்களை கொடுத்து வருகிறது. கூடவே, பிரீமியம் ஓடிடி ஆப்களின் சந்தா மற்றும் வை-பை டேட்டா கொடுக்கப்படுவதால், கஸ்டமர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதில் ஏர்டெல்லின் ரூ.699 திட்டம் அதிகளவில் பெறப்பட்டு வருகிறது.

கேபிள் TV கதை அம்பேல்.. 350+ சேனல்கள்.. 6 மாதங்கள் வேலிடிட்டி.. 22+ ஓட

ஏர்டெல் ரூ. 699 திட்ட விவரங்கள் (Airtel Rs 699 Plan Details): இந்த வை-பை திட்டத்துக்கு 1 மாதம் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். ஆனால், 6 மாதங்கள் அல்லத 12 மாதங்கள் வேலிடிட்டியை தேர்ந்தெடுத்து, அதற்கான தொகையை செலுத்தினால் வை-பை ரூட்டர் மற்றும் 4K ஆண்ட்ராய்டு பாக்ஸ் ஆகியவை மற்றும் அதற்கான இன்ஸ்டாலேஷன் இலவமாக கொடுக்கப்படும்.

மேலும், ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும். இந்த 6 மாதங்கள் அல்லது 12 மாதங்கள் வேலிடிட்டி முடிந்த பிறகு மாதத்துக்கு செலவாகும் ரூ.699 மட்டுமே செலுத்தி திட்டத்தை பெற்று கொள்ளலாம். இப்படி பெறும் திட்டத்தில் 40 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை கொடுக்கப்படும். வை-பை வழியாக வாய்ஸ் கால்களையும் கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம்.

350+ லைவ் டிவி சேனல்களின் (Live TV Channels) சந்தாவை பெற்று கொள்ளலாம். இதில் எச்டி டிவி சேனல்களும் (HD TV Channels) கொடுக்கப்பட்டு உள்ளது. ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), ஜீ5 (ZEE5) மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் (Airtel Xstream Play Premium) சந்தாவும் கிடைக்கிறது. இதில் சோனிலிவ் (SonyLIV) உள்ளிட்ட 22+ ஓடிடி ஆப்களின் சந்தா கிடைத்துள்ளது.

டிவி சேனல்களில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள், ஜீடிவி சேனல்கள் உள்ளிட்ட பல்வேறு பண்டில்களும் கொடுக்கப்பட்டு உள்ளது. கூகுள் ஒன் (Google One) சந்தா கிடைத்து உள்ளது. மேலும், அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் (Adobe Xpress Premium) சந்தாவும் இதில் கொடுக்கப்பட்டு உள்ளது. ஐபிடிவி (IPTV) வழியாக இந்த டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம்.

ஏர்டெல் ரூ. 699 திட்டத்தை பெறுவது எப்படி?

1. ஏர்டெல் நிறுவனத்தின் போர்டலுக்கு சென்று கொள்ளுங்கள். இதில் பிராட்பேண்ட் பக்கத்துக்கு செல்லுங்கள். இப்போது, ரூ.499 முதல் ரூ.3,999 வரையில் திட்டங்கள் இருக்கும். அதற்கு கீழே பை நவ் (Buy Now) விருப்பம் தோன்றும். இதை கொடுத்தால், மொபைல் நம்பர் கேட்கப்படும். பிறகு இன்ஸ்டாலேஷன் முகவரி கொடுக்க வேண்டும்.

2. இதை கொடுத்தால் போதும், அருகில் இருக்கும் ஏர்டெல் ஸ்டோர்களுக்கு உங்களது விவரங்கள் அனுப்பி வைக்கப்படும். பிறகு அங்கிருந்து உங்களை ஏஜென்ட்கள் அழைத்து பேசுவார்கள். மேலும், ஏர்டெல் நிறுவனத்தின் ஏர்ஃபைபர் மற்றும் ஃபைபர் திட்டங்கள் கிடைக்கும் பகுதிகளில் மட்டுமே இந்த திட்டங்கள் கிடைக்கும். இந்த திட்டங்கள் உங்களுது பகுதியில் கிடைக்கிறதா என்பதை பார்த்து கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Airtel Rs 699 Plan 350 TV Channels Including HD Channels 22 OTTs 40 Mbps Internet Speed How To Get
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X