இரவோடு இரவாக.. மதுரை, ஓசூர் உட்பட 6 முக்கிய மாவட்டங்களில் Jio 5G அறிமுகம்! இந்த பட்டியலில் உங்கள் ஊர் உள்ளதா?

|

இரவோடு இரவாக ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்தின் ட்ரூ 5ஜி (Jio True 5G) சேவைகளானது, மதுரை (Madurai), ஓசூர் (Hosur) உட்பட 6 முக்கியமான தமிழக மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக சென்னையில் (Chennai) மட்டுமே அறிமுகமாகி இருந்த ஜியோ 5ஜி சேவைகள் ஆனது தற்போது வேறு எந்தெந்த தமிழக (Tamil Nadu) மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது? இதோ விவரங்கள்:

எந்தெந்த தமிழக மாவட்டங்களுக்கு ஜியோ 5ஜி வந்துள்ளது?

எந்தெந்த தமிழக மாவட்டங்களுக்கு ஜியோ 5ஜி வந்துள்ளது?

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தமிழ்நாட்டின் ஆறு முக்கிய மாவட்டங்களில் / நகரங்களில் தனது 5ஜி சேவையை அறிமுகம் செய்துள்ளது.

ஜியோ வெளியிட்டுள்ள பட்டியலின்படி மதுரை, கோவை (Coimbatore), திருச்சிராப்பள்ளி (Thrichy), ஓசூர், சேலம் (Salem) மற்றும் வேலூர் (Vellore) என மொத்தம் 6 மாவட்டங்களில் ஜியோவின் ட்ரூ 5ஜி நெட்வொர்க் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆணியே புடுங்க வேணாம்! BSNL-ன் திடீர் அறிவிப்பு.. கடுப்பான கஸ்டமர்ஸ்.. வேற நெட்வொர்க்கிற்கு ஜம்ப்?ஆணியே புடுங்க வேணாம்! BSNL-ன் திடீர் அறிவிப்பு.. கடுப்பான கஸ்டமர்ஸ்.. வேற நெட்வொர்க்கிற்கு ஜம்ப்?

வெல்கம் ஆபரும் கிடைக்கும்!

வெல்கம் ஆபரும் கிடைக்கும்!

ரிலையன்ஸ் ஜியோவின் கூற்றுப்படி, மேற்கண்ட பட்டியலில் உள்ள 6 தமிழக மாவட்டங்களில் உள்ள ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஜியோவின் 5ஜி வெல்கம் ஆபரும் (Welcome Offer) அணுக கிடைக்கும்.

அதாவது மதுரை, கோவை, திருச்சிராப்பள்ளி, ஓசூர், சேலம் மற்றும் வேலூரில் உள்ள ஜியோ வாடிக்கையாளர்கள், ஜியோ நிறுவனத்திடம் இருந்து 5ஜி-க்கான அழைப்பு கிடைக்கும் பட்சத்தில், அவர்களால் ஜியோவின் 5ஜி சேவைகளை அனுபவிக்க முடியும்!

வெல்கம் ஆபரின் கீழ் என்ன கிடைக்கும்?

வெல்கம் ஆபரின் கீழ் என்ன கிடைக்கும்?

ஜியோ வழங்கும் வெல்கம் ஆபரின் கீழ், தகுதியான வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபிபிஎஸ்+ என்கிற இண்டர்நெட் ஸ்பீடின் கீழ் அன்லிமிடெட் டேட்டா (Unlimited Data) அணுக கிடைக்கும்.

நினைவூட்டும் வண்ணம், ஜியோவின் 5ஜி நெட்வொர்க்கை பெற உங்களிடம் ஒரு 5ஜி ஸ்மார்ட்போன் (5G Phone) இருக்க வேண்டும். ஏனென்றால், ஜியோவின் 5ஜி ஆனது 4ஜி ஸ்மார்ட்போன்களில் வேலை செய்யாது.

ஒருவேளை உங்களிடம் ஒரு 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது என்றால், ஜியோவின் 5ஜி நெட்வொர்க்கை ஆதரிக்கும் ஓடிஏ அப்டேட் (OTA Update) உங்களுக்கு ஏற்கனவே கிடைத்து இருக்கலாம். மாறாக, உங்கள் மொபைல் பிராண்ட்டிடம் இருந்து குறிப்பிட்ட அப்டேட் வரவில்லை என்றால், அப்டேட் வரும்வரை காத்திருப்பது அவசியம்!

சாபம் சார்.. யாரை விட்டுச்சு! செவ்வாய் கிரகத்திடம் சிக்கி சின்னாபின்னமான சீனாவின் கனவும், பணமும்!சாபம் சார்.. யாரை விட்டுச்சு! செவ்வாய் கிரகத்திடம் சிக்கி சின்னாபின்னமான சீனாவின் கனவும், பணமும்!

மக்களுக்கு 700 மெகா ஹெர்ட்ஸ்.. நிறுவனங்களுக்கு 26 ஜிகாஹெர்ட்ஸ்!

மக்களுக்கு 700 மெகா ஹெர்ட்ஸ்.. நிறுவனங்களுக்கு 26 ஜிகாஹெர்ட்ஸ்!

ஜியோ நிறுவனம் தனது 5ஜி சேவைகளை வழங்க 700 மெகா ஹெர்ட்ஸ், 3500 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் ஆகியவற்றின் கலவையை பயன்படுத்துகிறது.

வாடிக்கையாளர்களுக்கான 5ஜி சேவைகளை பொறுத்தவரை இந்நிறுவனம் 700 மெகா ஹெர்ட்ஸ் பேண்ட் மற்றும் 3500 மெகா ஹெர்ட்ஸ் பேண்ட் ஏர்வேவ்ஸ்-களை மட்டுமே பயன்படுத்துகிறது.

26 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் பேண்ட் ஏர்வேவ்ஸ் ஆனது பெரும்பாலும் நிறுவனங்களுக்கான சேவைகளை வழங்க பயன்படுத்தப்படும்.

ஏனென்றால் 26 ஜிகாஹெர்ட்ஸ் பேண்ட் ஏர்வேவ்ஸ் ஆனது பிரீமியம் மிமீவேவ் (மில்லிமீட்டர் வேவ்லெங்த்) ஏர்வேவ்ஸ் ஆகும். இது சிறப்பான பேண்ட்வித் மற்றும் கேப்பாசிட்டியை வழங்குகிறது. ஆனாலும் கூட இதன் கவரேஜ் மிகவும் மோசமாக இருக்கும்.

வேலூர் உடன் சேர்த்து 101 நகரங்கள்!

வேலூர் உடன் சேர்த்து 101 நகரங்கள்!

தமிழ் நாட்டின் 6 முக்கிய மாவட்டங்களில் அறிமுகமானதை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோவின் ட்ரூ 5ஜி நெட்வொர்க் கிடைக்கும் மொத்த நகரங்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து பேசுகையில் ஜியோவின் செய்தித் தொடர்பாளர், "ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 5ஜி-யை பயன்படுத்துவதற்காக இம்மாநிலத்தில் ரூ.40,000 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளது."

"மேலும் ஜியோ நிறுவனமானது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தமிழகத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பையும் வழங்கியுள்ளது" என்று கூறி உள்ளார்!

Best Mobiles in India

English summary
Jio Introduced Its True 5G Services in 6 Major Cities Of Tamil Nadu Check Your District in this List

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X