Airtel SIM கஸ்டமர்கள் காட்டில் மழை.. மாதம் ரூ.155 போதும்.. 365 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டத்தில்?
ஏர்டெல் (Airtel) நிறுவனமானது டிராய் (TRAI) என்கிற இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவுக்கு கட்டுப்படுவது மட்டுமில்லாமல், அதன் முக்கிய போட்டியாளரான ரிலையன்ஸ் ஜியோவை சமாளிக்கவும் தனது சேவையின் கீழ் 2 வாய்ஸ் அண்ட் எஸ்எம்எஸ் ஒன்லி பிளான்களை வழங்கி வருகிறது.
பெயர் குறிப்பிடுவது போலவே, இந்த திட்டங்கள் வாய்ஸ் கால்கள் (Voice Calls) ற்றும் எஸ்எம்எஸ் (SMS) நன்மையை மட்டுமே வழங்கும். ஆனால் டேட்டா நன்மைகளுடன் வரும் திட்டங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் மலிவான திட்டங்களாக உள்ளன; கூடவே நீண்ட நாட்களுக்கான வேலிடிட்டியையும் (Long Validity) வழங்குகின்றன.

1. பார்தி ஏர்டெல் ரூ.1849 ப்ரீபெய்ட் திட்டம்: இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 3600 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. இந்த திட்டம் 365 நாட்கள் செல்லுபடியாகும். அதாவது 12 மாதங்கள் சர்வீஸ் வேலிடிட்டியை வழங்கும், ஆக மாதாந்திர செலவு ரூ.154 ஆகும். ஆனால் எந்த டேட்டா நன்மை எதையும் வழங்காது. டேட்டா தேவை உள்ளவர்கள்,தேவைப்படும் போது கூடுதலாக டேட்டா பேக்குகளை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
சுவாரசியமாக ரூ.1849 திட்டத்தின் கீழ் ஒரு அட்டகாசமான இலவச நன்மையும் கிடைக்கிறது. அது 12 மாதங்களுக்கு அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியத்திற்கான (Adobe Express Premium) இலவச அணுகல் ஆகும். இந்த சந்தாவின் உண்மையான மதிப்பு ரூ.4,000 ஆகும். இதோடு இலவச ஹெலோட்யூன்களும் (Hellotunes) அணுக கிடைக்கும்.
2. பார்தி ஏர்டெல் ரூ.469 ப்ரீபெய்ட் திட்டம்: இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 900 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. இந்த திட்டம் 84 நாட்கள் செல்லுபடியாகும். அதாவது கிட்டத்தட்ட 3 மாதங்கள் சர்வீஸ் வேலிடிட்டியை வழங்கும். ஆனால் இதுவும் ரூ.1849-ஐ போலவே, எந்த டேட்டா நன்மை வழங்காது.
ஆனால் ரூ.1849-ஐ போலவே இதுவும் 12 மாதங்களுக்கு அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியத்திற்கான (Adobe Express Premium) இலவச அணுகலையும், இலவச ஹெலோட்யூன்களையும் வழங்குகிறது. கடைசியாக இந்த திட்டமும் ரூ.1849-ஐ போலவே பயனர்கள் விரும்பும் போதெல்லாம் டேட்டா வவுச்சர்கள் மூலம் ரீசார்ஜ் செய்ய அனுமதிக்கும்.
டேட்டா தேவை இல்லாதவர்களுக்கு. குறைவான மாதாந்திர பட்ஜெட்டை கொண்டவர்களுக்கு அல்லது நீண்ட காலத்திற்கு தங்களுடைய சிம் கார்ட்டை ஆக்டிவ் ஆக வைத்துக்கொள்ள விரும்புபவர்களுக்கு ரூ.469 மற்றும் ரூ.1849 ஆகிய இரண்டுமே பெஸ்ட் பிளான்கள் ஆகும். இந்த இரண்டு திட்டங்களுமே நாட்டில் உள்ள அனைத்து டெலிகாம் வட்டங்களிலும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.
ஜியோவிடமும் இதேபோன்ற திட்டங்கள் உள்ளன. முதல் திட்டம் ரூ.1178 திட்டமாகும். இதன் வேலிடிட்டி 336 நாட்கள் ஆகும். அதாவது இது 11 மாதங்கள் செல்லுபடி ஆகும். இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை வழங்கும், ஆனால் எந்த டேட்டா நன்மையும் இருக்காது. இந்த திட்டத்துடன் 3600 எஸ்எம்எஸ் இணைக்கப்பட்டுள்ளன.
ஒருவேளை நீங்கள் ரிலையன்ஸ் ஜியோ சேவையின் கீழ் இன்னும் மலிவான வாய்ஸ் ஒன்லி திட்டத்தை தேடினால், நீங்கள் ரூ.448 ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம். அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 1000 எஸ்எம்எஸ் உடன் வரும் இந்த திட்டம் 84 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது. "மீண்டும்" டேட்டா தேவை ஏற்பட்டால் ரூ.448 க்கு மேல் டேட்டா பேக்கை ரீசார்ஜ் செய்யலாம். ஏர்டெல் திட்டங்களை போலவே இந்த 2 ஜியோ திட்டங்களின் மேலும் - அவசர டேட்டா தேவை ஏதேனும் ஏற்பட்டால் - நீங்கள் எப்போது வேண்டுமானாலும் ஒரு டேட்டா பேக்கை ரீசார்ஜ் செய்யலாம்.


Click it and Unblock the Notifications








