தள்ளுபடியில் தத்தளிக்கும் புதிய iPhone: வாய்ப்ப மிஸ் பண்ணா ரொம்ப வருத்தப்படுவீங்க!

|

iPhone 14 Pro மற்றும் iPhone 13 Pro ஆகியவை இ-காமர்ஸ் இணையதளங்களில் மிக குறைந்த விலையில் வாங்கலாம். ஐபோன் என்பது பலரின் கனவாக இருக்கிறது. ஆனால் அதன் விலை காரணமாக பலரால் இதை வாங்க முடிவதில்லை. இதற்கு தீர்வளிக்கும் விதமாக ஆன்லைன் விற்பனை தளங்கள் அவ்வப்போது தள்ளுபடி வழங்கி ஐபோன் மாடல்களை தரைமட்ட விலைக்கு கொண்டு வருகிறது. அதன்படியான ஒரு சலுகை விவரத்தை தான் பார்க்கப்போகிறோம்.

ஐபோன் 14 மற்றும் ஐபோன் 13

ஐபோன் 14 மற்றும் ஐபோன் 13

ஐபோன் 14 அல்லது ஐபோன் 13 தொடரில் உள்ள ப்ரீமியம் மாடல்களான ப்ரோ ரகங்கள் தற்போது தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. ஏறத்தாழ அதன் சாதாரண மாடல் விலையில் இந்த ப்ரோ மாடலை வாங்கலாம். சலுகை விலையில் ப்ரோ மாடல் வாங்கத் திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ ஆகிய மாடல்கள் இ-காமர்ஸ் தளங்களில் குறைந்த விலையில் கிடைக்கிறது. தள்ளுபடி விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

iPhone 13 Pro தள்ளுபடி

iPhone 13 Pro தள்ளுபடி

ஐபோன் 13 ப்ரோ அமேசானில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதாவது இந்த ஐபோன் மாடலை அமேசானில் ரூ.1,07,900 என வாங்கலாம். இது கோல்ட் ஃபினிஷ் வடிவமைப்புக் கொண்ட 128 ஜிபி வேரியண்ட் மாடல் விலை ஆகும். இந்தியாவில் ஐபோன் 13 ப்ரோ மாடல் ஆனது ரூ.1,19,900 என அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது இந்த ஐபோன் மாடலை ரூ.12,000 தள்ளுபடி உடன் வாங்கலாம்.

iPhone 14 Pro தள்ளுபடி

iPhone 14 Pro தள்ளுபடி

ஆப்பிள் ஐபோன்களில் விலை உயர்ந்த மாடல்களில் ஒன்றாக ஐபோன் 14 ப்ரோ இருக்கிறது. ஐபோன் 14 ப்ரோ ஆனது ரூ.1,29,900 என்ற விலைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. விஜய் சேல்ஸ் தளத்தில் தற்போது இந்த ஐபோன் 14 ப்ரோ மாடலை ரூ.1,26,100 என வாங்கலாம். அதாவது இந்த சமீபத்திய மற்றும் புதிய ஐபோன் மாடலுக்கு ரூ.3,800 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பிற தளங்கள் உடன் ஒப்பிடுகையில் இந்த ஐபோன் 14 ப்ரோ மாடல் இந்த தளத்தில் தான் குறைந்த விலையில் கிடைக்கிறது. எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களும் இந்த ஐபோன் மாடலுக்கு கிடைக்கிறது.

ப்ரீமியம் ஐபோன் மாடலுக்கு தள்ளுபடி

ப்ரீமியம் ஐபோன் மாடலுக்கு தள்ளுபடி

அடிப்படை ஐபோன் மாடல்களுக்கு தள்ளுபடி கிடைப்பது இயல்பு தான். ஆனால் இதுபோல் ப்ரீமியம் மாடல்களுக்கு தள்ளுபடி என்பது எப்போதாவது தான் கிடைக்கும். எனவே 2023 இல் நீங்கள் புதிய ஐபோன் மாடலை வங்கத் திட்டமிட்டிருந்தால் அதற்கு இதுவே சரியான சமயமாகும்.

iPhone 14 Pro மற்றும் iPhone 13 Pro எதை வாங்கலாம்?

iPhone 14 Pro மற்றும் iPhone 13 Pro எதை வாங்கலாம்?

iPhone 14 Pro அல்லது iPhone 13 Pro மாடல்களில் எதை வாங்குவது என்ற கேள்வி வரலாம். இரண்டு ஐபோன் மாடல்களுக்கும் பெரிய அளவிலான விலை வித்தியாசங்கள் இருக்கிறது. சுமார் ரூ.1 லட்சம் விலை பிரிவில் ஐபோன் வாங்கத் திட்டமிட்டிருந்தால் உங்களுக்கு ஐபோன் 13 ப்ரோவே சிறந்த மாடலாக இருக்கும். காரணம் ஐபோன் 14 ப்ரோ விலை ரூ.1.25 விலையை தாண்டிவிடுகிறது. ஆனால் பக்கா ப்ரீமியம் ஐபோன் அனுபவம் வேண்டும் என்றால் உங்களுக்கு ஐபோன் 14 ப்ரோ தான் சிறந்த தேர்வாக இருக்கும்.

ஏ15 பயோனிக் சிப்

ஏ15 பயோனிக் சிப்

ஐபோன் 13 ப்ரோ சாதனமானது ஆடம்பரமான தோற்றத்தை கொண்டிருக்கிறது. கையில் தொடக் கூடிய உணர்வு மிகவும் ப்ரீமியம் ஆக இருக்கிறது. அதேபோல் ஐபோன் 13 சாதனமானது நான்கு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. 6.1 இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்ப்ளே வசதி இதில் இருக்கிறது. இந்த ஐபோன் டிஸ்ப்ளே ஆனது 120 ஹெர்ஸ் மோஷன் ரெஃப்ரெஷ் ரேட்டிங் மற்றும் 1000 நிட்ஸ் பிரகாச ஆதரவைக் கொண்டிருக்கிறது. ஐபோன் 13 ப்ரோ மாடலில் ஏ15 பயோனிக் சிப் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பின்புறத்தில் டிரிபிள் 12 எம்பி கேமராக்கள் மற்றும் 12 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

3095 எம்ஏஎச் பேட்டரி

ஐபோன் 13 ப்ரோ சாதனத்தில் ரெஃப்ரெஷ் ரேட் டெக்னாலஜி வழங்கப்பட்டிருக்கிறது. இது ஒளிக்கேற்ப காட்சி தன்மையை சரி செய்து கொள்கிறது. இதன்மூலம் ஐபோன் 13 ப்ரோ சாதனமானது 22 மணிநேர வீடியோ ப்ளேபேக் ஆதரவை வழங்குகிறது. இந்த ஐபோன் மாடலில் 3095 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

A16 பயோனிக் சிப்

A16 பயோனிக் சிப்

Apple iPhone 14 Pro சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் 6.1-இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் ஓஎல்இடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளேயில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் மற்றும் 2000 நிட்ஸ் உச்ச பிரகாச நிலை ஆதரவு உள்ளது. இதில் உள்ள HDR அம்சமானது பரந்த வண்ண வரம்பு ஆதரவை வழங்குகிறது. இந்த ஐபோன் மாடலில் புதிய ரக சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. அதாவது ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ ஆனது 4nm-அடிப்படையிலான A16 பயோனிக் சிப் மூலம் இயக்கப்படுகிறது. கேமிங் மற்றும் கிராபிக்ஸ் செயல்திறனை இந்த சிப்செட் மேம்படுத்தி வழங்குகிறது.

கேமரா அம்சங்கள்

கேமரா அம்சங்கள்

Apple iPhone 14 Pro இன் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், 48MP முதன்மை குவாட்-பிக்சல் சென்சார், 12MP டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 12MP அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமரா என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. போர்ட்ரெய்ட், நைட் மோட், நைட் மோட் போர்ட்ரெய்ட், ஸ்டெபிலைசேஷன் டூயல் ஓஐஎஸ், ஸ்மார்ட் எச்டிஆர், மேக்ரோ மோட், ஆப்பிள் ப்ரோரா உள்ளிட்ட பல்வேறு கேமரா ஆதரவுகள் இதில் இருக்கிறது.

12MP ஸ்னாப்பர் கேமரா

12MP ஸ்னாப்பர் கேமரா

வீடியோ ஆதரவைப் பொறுத்தவரை, 4K தரத்தில் வீடியோவை இந்த ஐபோன் மாடல் மூலம் பதிவு செய்யலாம். இதன் அவுட் மிக அருமையாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. செல்பி மற்றும் வீடியோ கால் ஆதரவுக்கு என இந்த ஐபோன் மாடலின் முன்புறத்தில் 12MP ஸ்னாப்பர் பொருத்தப்பட்டுள்ளது. iPhone 14 Pro ஆனது iOS 16 மூலம் இயங்குகிறது.

ஒரே மாதரியான அம்சங்கள்

ஒரே மாதரியான அம்சங்கள்

ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மாடலில் கிட்டத்தட்ட ஒரே மாதரியான டிஸ்ப்ளே மற்றும் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த இடத்தில் அதிக வித்தியாசங்கள் எதுவும் காண முடியாது. ஆனால் இரண்டு மாடல்களிலும் வெவ்வேறு சிப்செட் இடம்பெற்றிருக்கிறது. எனவே ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து சமீபத்திய அம்சங்களும் அதன் 14 ப்ரோ மாடலில் இருக்கிறது. ஐபோன் 13 ப்ரோ மாடலுக்கு தேவையான அப்டேட்டை ஆப்பிள் தொடர்ந்து வழங்கி வழங்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

Best Mobiles in India

English summary
iPhone 14 Pro, iPhone 13 Pro Available at Huge Discount Price in Amazon and Vijay Sales.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X