குறைந்த விலையில் 108MP கேமராவுடன் புது Infinix Note 12 Pro 4G அறிமுகம்.! எப்போ தெரியுமா?

|

குறைந்த விலையில் பெஸ்டான ஒரு புது ஸ்மார்ட்போன் சாதனத்தை வாங்க உங்களுக்கு ஏதேனும் திட்டம் இருக்கிறதா? அப்போ, கொஞ்சம் வெயிட் செய்யுங்கள். வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி இன்பினிக்ஸ் நிறுவனம் புதிதாக இந்தியாவில் இன்பினிக்ஸ் நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த Infinix Note 12 Pro 4G சாதனம் என்னென்ன அம்சங்களை கொண்டுவரப் போகிறது என்று இப்போது பார்க்கலாம்.

புது Infinix Note 12 Pro 4G டிவைஸ் ரெடி

புது Infinix Note 12 Pro 4G டிவைஸ் ரெடி

இன்பினிக்ஸ் நிறுவனம், Infinix Note 12 Pro 4G என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை, ஆகஸ்ட் 26 ஆம் தேதி அன்று நாட்டில் அறிமுகம் செய்யுமென்று அறிவித்துள்ளது. இன்பினிக்ஸ் நிறுவனம் ஏற்கனவே இதே மோனிகருடன் ஒரு புதிய 5G போனை அறிமுகப்படுத்தியுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இது இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 5ஜி என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Flipkart பட்டியல் என்ன சொல்கிறது?

Flipkart பட்டியல் என்ன சொல்கிறது?

Flipkart பட்டியலின்படி, Infinix Note 12 Pro 4G ஆனது ஆகஸ்ட் 26 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். இது 6nm செயல்பாட்டில் கட்டமைக்கப்பட்ட மற்றும் அதிகபட்ச கிளாக் ஸ்பீட் கொண்ட Helio G99 சிப்செட் உடன் வெளிவரும் நாட்டின் முதல் ஸ்மார்ட்போன் சாதனம் இது என்று கூறப்படுகிறது. தெரியாதவர்களுக்கு நினைவுகூர, இந்தியாவில் Note 12 Pro 5G ஆனது MediaTek Dimensity 810 5G சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்பட்டது.

இப்படி ஒரு டபுள் ட்ரம் வாஷிங் மெஷினா? Xiaomi அறிமுகம் செய்த MIJIA பார்ட்டிஷன் வாஷிங் மெஷின்!இப்படி ஒரு டபுள் ட்ரம் வாஷிங் மெஷினா? Xiaomi அறிமுகம் செய்த MIJIA பார்ட்டிஷன் வாஷிங் மெஷின்!

Infinix Note 12 Pro 4G சிறப்பம்சம்

Infinix Note 12 Pro 4G சிறப்பம்சம்

Flipkart பட்டியல் வரவிருக்கும் இந்த புதிய Infinix போனின் சில சிறப்பம்சங்களை உறுதிப்படுத்தியுள்ளது. Infinix Note 12 Pro 4G ஸ்மார்ட்போன் ஆனது FHD+ தெளிவுத்திறனுடன் கொண்ட 6.7' இன்ச் உடைய AMOLED டிஸ்பிளேவை பெரும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 60Hz ரெஃபிரஷ் ரேட் உடன் இந்த டிஸ்பிளே வருகிறது. இது வாட்டர் ட்ராப் நாட்ச் உடன் வெளிவரும் என்பதை பிளிப்கார்ட் பட்டியல் காண்பிக்கிறது.

ஸ்டோரேஜ் விபரம்

ஸ்டோரேஜ் விபரம்

MediaTek Helio G99 சிப்செட் 8GB LPDDR4x ரேம் மற்றும் 128GB UFS 2.2 சேமிப்பகத்துடன் இணைக்கப்படும். இது எக்ஸ்பெண்டபிள் ரேம் வசதியைப் பெறக்கூடும் என்பது கவனிக்கத்தக்கது. இது பயனர்களை 5 ஜிபி வரை இன்டெர்னல் ஸ்டோரேஜை மெய்நிகர் ரேமாகப் பயன்படுத்த அனுமதிக்கும். மேலும், கிராஃபிக்ஸிற்கான திறமையான ஆர்ம் மாலி ஜி57 ஜிபியுவை இந்த போன் கொண்டிருக்கும் என்று பட்டியல் காண்பிக்கிறது.

அடடே சூப்பர்! 5G-க்கான கட்டணம் இவ்வளவு தானா? 5ஜி யூஸ் பண்ண புது சிம் வாங்க வேண்டுமா?அடடே சூப்பர்! 5G-க்கான கட்டணம் இவ்வளவு தானா? 5ஜி யூஸ் பண்ண புது சிம் வாங்க வேண்டுமா?

கேமரா விபரம்

கேமரா விபரம்

கேமரா அம்சத்தைப் பற்றிப் பேசுகையில், இந்த ஸ்மார்ட்போனில் f/1.75 அபெர்ச்சர் லென்ஸுடன் 108 எம்பி ப்ரைமரி சென்சார் உடன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக, இது 2MP டெப்த் லென்ஸ் மற்றும் பின்புறத்தில் AI லென்ஸைப் பெறும். இந்த ஸ்மார்ட்போனில் 16 எம்பி செல்ஃபி கேமராவும் இருக்கிறது. Infinix இன் வரவிருக்கும் ஸ்மார்ட்போன் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும்.

Infinix Note 12 Pro 4G விலை என்ன?

Infinix Note 12 Pro 4G விலை என்ன?

மேலும், இது ஆண்ட்ராய்டு 12 இல் XOS 10.6 ஸ்கின் மூலம் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Infinix Note 12 Pro 5G இந்தியாவில் ரூ.17,999 ஆரம்ப விலையுடன் வருகிறது. இந்த புதிய இன்பினிக்ஸ் நோட் 12 4G மாடல் இந்தியாவில் பட்ஜெட் ஸ்மார்ட்போனாக வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. இதன் விலை தோராயமாக ரூ.15,000 என்ற விலை புள்ளிக்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அல்பைன் ஒயிட், டஸ்கனி ப்ளூ மற்றும் வோல்கானிக் கிரே வண்ண விருப்பங்களில் இந்த போன் வரும் என கூறப்படுகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
Infinix Note 12 4G with Helio G99 to launch on August 26 in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X