அடிச்சான் பாரு ஆஃபர்.. மிட்-ரேஞ்சல 7000mAh பேட்டரி.. 60W சார்ஜிங்.. SONY கேமரா.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனத்தின் புதிய மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி 16 5ஜி (Realme 16 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. மிட்-ரேஞ்ச் விலையில் 7000mAh பேட்டரி, 60W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் சோனி சென்சார் கேமராவை, IP69 ரேட்டிங் கொடுக்கிறது.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 24 சதவீத தள்ளுபடி போக 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.33,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், ரூ.1,500 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.32,499 விலைக்கு வாங்கி கொள்ளலாம். ஏர் ஒயிட் (Air White) மற்றும் ஏர் பிளாக் (Air Black) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது.

ரியல்மி 16 5ஜி அம்சங்கள் (Realme 16 5G Specifications): ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6400 Turbo 6nm) சிப்செட்டை இந்த ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 6 வருடங்களுக்கு ப்ளூயன்சி புரொடெக்சன் கிடைக்கிறது.
6.57 இன்ச் (2372 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 4200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் டிசிஐ பி3 (DCI P3) கலர் காமட் கிடைக்கிறது. டிடி ஸ்டார் டி+ (DT Star D+) புரொடெக்சன் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 15 OS) இந்த ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது.
3 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன . ஐஸ் கியூப் ஐகான் (Ice Cube Icons), மிஸ்டி கிளாஸ் கன்ட்ரோல் சென்டர் (Misty Glass Control Center), ப்ரீத்திங் டாக் (Breathing Dock) போன்ற பீச்சர்களுடன் ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) உள்ளது. 6050 எம்எம் ஏர்ப்ளோவ் விசி கூலிங் சிஸ்டம் (Airflow VC Cooling System) கிடைக்கிறது.
சோனி ஐஎம்எக்ஸ்852 (Sony IMX852) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமராவை இந்த ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 2 எம்பி மோனோகுரோம் கேமரா கிடைக்கிறது. மேலும், ஏஐ எரைசர் (AI Eraser), ஏஐ அன்பிளர் (AI Unblur), ஏஐ அல்ட்ரா கிளாரிட்டி (AI Ultra Clarity) பீச்சர்களை இந்த டூயல் ரியர் கேமரா கொடுத்துள்ளது. மேலும், செல்பீ மிரர் கிடைக்கிறது.
50 எம்பி செல்பீ கேமராவை இந்த ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 60W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7000mAh பேட்டரி கிடைக்கிறது. மேலும், இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கொடுக்கப்பட்டு உள்ளது. 8.1 எம்எம் தடிமன் மற்றும் 183 கிராம் எடை உள்ளது.
அல்ட்ரா பிரீமியம் வாட்டர் ப்ரூப் கொடுக்கும்படி IP66 ரேட்டிங், IP68 ரேட்டிங், IP69 ரேட்டிங் மற்றும் IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) கிடைக்கிறது. 5ஜி எஸ்ஏ/என்எஎஸ்ஏ, டூயல் 4ஜி வோஎல்டிஇ, வை-பை 6 மற்றும் ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








