Home
Mobile

ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யமே மிரளுது.. 8600mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. 12GB ரேம்.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டையும் காத்திருக்க வைத்த ஒன்பிளஸ் ஏஸ் 6 அலட்ரா (OnePlus Ace 6 Ultra) ஸ்மார்ட்போனின் ரேம், ஸ்டோரேஜ் மற்றும் கலர் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன. 8600mAh பேட்டரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங், ஓஎல்இடி போன்ற மற்ற பீச்சர்களும் மூக்கில் விரல் வைக்க செய்துள்ளன. இந்த ஒன்பிளஸ் ஏஸ் 6 அலட்ரா ஸ்மார்ட்போனின் பீச்சர்கள் மற்றும் கான்பிகிரேஷன்களை தெரிந்து கொள்ளலாம்.

வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி சீன மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. பிறகு குளோபல் மற்றும் இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே, டிஸ்பிளே, கேமரா, பேட்டரி, சிப்செட் போன்ற பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்தன. இப்போது கீக்பெஞ்ச் தளத்தில் முக்கிய பீச்சர்கள் உறுதி செய்யப்பட்டன. அதே நேரத்தில் ஒன்பிளஸ் நிறுவனமும் கான்பிகிரேஷன்களை உறுதி செய்துவிட்டது.

ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யமே மிரளுது.. 8600mAh பேட்டரி.. 100W சார்ஜிங்!

12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்க உள்ளது. மேலும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட டாப் எண்ட் வேரியண்ட்களும் கிடைக்க இருக்கின்றன. ஏஸ் அவேக்கிங் (Ace Awakening) மற்றும் மெட்டல் ஸ்டார்ம் (Metal Storm) ஆகிய கலர்களில் கிடைக்க உள்ளது.

இந்த விவரங்களை ஒன்பிளஸ் சீனா நிறுவனம் உறுதி செய்துவிட்டது. கீக்பெஞ்ச் தளத்தில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9500 (Octa Core MediaTek Dimensity 9500) சிப்செட் கிடைக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 16 ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக 8500mAh பேட்டரி கிடைக்க இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால், இப்போது 8600mAh பேட்டரி கிடைக்க இருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது. ஏஸ் அவேக்கிங் மற்றும் மெட்டல் ஸ்டார்ம் ஆகிய கலர் வேரியண்ட்களின் அதிகாரப்பூர்வ போஸ்டர்கள் வெளியிடப்பட்டு, மார்கெட்டில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்திய மார்கெட்டிலும் ஒன்பிளஸ் பிரியர்கள் வெயிட்டிங் மோடில் காத்திருக்க தொடங்கிவிட்டனர்.

ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா அம்சங்கள் (OnePlus Ace 6 Ultra Specifications): சீன மார்கெட்டில் முன்னதாக கசிந்த பீச்சர்களின்படி, 165Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1.5K ரெசொலூஷன் கொண்ட 6.78 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவை இந்த ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா ஸ்மார்ட்போன் கொடுக்க இருக்கிறது. ஆக்ஸிஜன் ஓஎஸ் 16 (OxygenOS 16) பேஸ்டு ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் வருகிறது.

100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 8600mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கான 16 எம்பி செல்பீ ஷூட்டரை இந்த ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயர் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera Setup) கொடுத்து உள்ளது.

இப்போது, அதிகாரப்பூர்வமாக வெளியான போஸ்டரிலும் டூயல் ரியர் கேமரா செட்டப் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது. இதுவொரு கேமிங் மாடலாக இருக்கிறது. ஆகவே, கேமிங் கன்ட்ரோலர் சப்போர்ட் கொடுக்க உள்ளது. இதற்கு தனியாக செலவு செய்ய வேண்டி இருக்கும். வெளியீட்டின் போது விலை தெரியவரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Ace 6 Ultra Color Options Configurations Officially Revealed Ahead of China Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X