வாட்ஸ்அப் எழுத்துக்களின் ஸ்டைலை மாற்றம் செய்வது எப்படி? இனி ஸ்டைலா வாட்ஸ்அப் யூஸ் பண்ணலாம்..

|

வாட்ஸ்அப் தனது பயனர்களுக்கு எண்ணில் அடங்காத பல சேவைகளை வழங்குகிறது. வாட்ஸ்அப் பயனர்களுக்குக் கிடைக்கும் பல தனித்துவமான அம்சங்களை இன்னும் ஏராளமான பயனர்கள் அறிந்திருக்கவில்லை என்பதே உண்மை. அப்படி, வாட்ஸ்அப் வழங்கக்கூடிய ஒரு தனித்துவமான அம்சம் தான், ஃபான்ட் ஸ்டைல் மற்றும் ஃபான்ட் சைஸ் மாற்றுவதற்கான விருப்பம். ஆம், நீங்கள் வழக்கமாக வாட்ஸ்அப் இல் பயன்படுத்தும் ஃபான்ட் ஸ்டைல் மற்றும் ஃபான்ட் அளவு ஆகியவற்றை நீங்கள் சாட் செய்யும் போதே மாற்றம் செய்து பயன்படுத்தலாம். இதன் எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்.

மற்ற மெசேஜ்ஜிங் ஆப்ஸில் இல்லாத ஒரு தனித்துவமான அம்சம்

மற்ற மெசேஜ்ஜிங் ஆப்ஸில் இல்லாத ஒரு தனித்துவமான அம்சம்

வாட்ஸ்அப் இல் இருக்கும் பல சிறப்பான அம்சங்களைப் போல், இந்த அம்சமும் சிறப்பானது. உண்மையில் இந்த அம்சம் மிகவும் தனித்துவமானது. ஏனெனில், இது போன்ற அம்சத்தை மற்ற எந்த சாட்டிங் பயன்பாடும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து அதன் பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கு இன்னும் பல புதிய அம்சங்களைத் தொடர்ந்து அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. சமீபத்தில் வியூ ஒன்ஸ் மீடியா பைல் அம்சம், லேப்டாப்பில் இருந்து அழைப்புகளை பெறுவதற்கான அம்சம் போன்ற பல அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஃபான்ட் ஸ்டைல் மற்றும் அளவை மாற்ற முடியுமா?

ஃபான்ட் ஸ்டைல் மற்றும் அளவை மாற்ற முடியுமா?

இதேபோல், இப்போது நீங்கள் உங்கள் மெசேஜ்ஜிங் ஆப்ஸில் பயன்படுத்தும் ஃபான்ட் ஸ்டைலை மாற்றம் செய்யலாம், உங்கள் ஃபான்ட் ஸ்டைலை மாற்றம் செய்வதுடன் அதன் அளவையும் நீங்கள் மாற்றி அமைக்கலாம். இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் எதுவும் இல்லாமல், வாட்ஸ்அப் தளத்திலிருந்தே இந்த மாற்றங்களை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். நீண்ட நாட்களாக ஒரே ஃபான்ட் ஸ்டைலில் மெசேஜ் செய்து அலுத்துப் போனவர்களுக்கு இந்த அம்சம் ஒரு மாற்று அனுபவத்தை வழங்கும்.

எலோன் மஸ்க் போட்ட ஸ்கெட்ச்.. செவ்வாய் கிரகத்தில் மனிதர்களுக்கான திட்டம் இது தானா? வீடியோ இதோ..எலோன் மஸ்க் போட்ட ஸ்கெட்ச்.. செவ்வாய் கிரகத்தில் மனிதர்களுக்கான திட்டம் இது தானா? வீடியோ இதோ..

வாட்ஸ்அப் இல் புதிய ஃபான்ட் அனுபவத்தைப் பெற இதைச் செய்யுங்கள்

வாட்ஸ்அப் இல் புதிய ஃபான்ட் அனுபவத்தைப் பெற இதைச் செய்யுங்கள்

சரி, இப்போது எப்படி உங்கள் வாட்ஸ்அப் மெசேஜ் ஃபான்ட் ஸ்டைலை மாற்றலாம் என்பதைப் பார்க்கலாம். இந்த அம்சத்தைப் பயன்படுத்த உங்களுடைய வாட்ஸ்அப் முதலில் புதிய வெர்ஷனுக்கு அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். பின்னர் உங்களிடையே வாட்ஸ்அப் மெசேஜ்ஜிங் ஆப்ஸ் ஓபன் செய்து, உங்கள் சாட் பாக்சில் உள்ள எந்தவொரு சாட்டையாவது ஓபன் செய்துகொள்ளுங்கள். பின்னர் கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறையைச் சரியாகப் பின்பற்றுங்கள்.

வாட்ஸ்அப் ஆப்ஸில் ஃபான்ட் ஸ்டைலை எப்படி மாற்றுவது?

வாட்ஸ்அப் ஆப்ஸில் ஃபான்ட் ஸ்டைலை எப்படி மாற்றுவது?

  • வாட்ஸ்அப் இல் உள்ள ஏதேனும் ஒரு சாட்டை ஓபன் செய்துகொள்ளுங்கள்.
  • இப்போது நீங்கள் அனுப்ப விரும்பும் வார்த்தையை டைப் செய்துகொள்ளுங்கள்.
  • உதாரணத்திற்கு Hi என்று டைப் செய்துகொள்ளுங்கள்.
  • இப்போது, நீங்கள் டைப் செய்த வார்த்தையை லாங் பிரஸ் செய்யுங்கள். அதாவது நீண்ட நேரம் அழுத்திப் பிடியுங்கள்.
  • இப்போது காண்பிக்கப்படும் விருப்பத்தில் மூன்று புள்ளிகள் தெரியும் இடத்தை கிளிக் செய்யுங்கள்.
  • வாட்ஸ்அப் அறிமுகம் செய்த வேற லெவல் 6 அம்சங்கள்: கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க மக்களே..வாட்ஸ்அப் அறிமுகம் செய்த வேற லெவல் 6 அம்சங்கள்: கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க மக்களே..

    போல்ட், இட்டாலிக், ஸ்டிரைக் த்ரூ, மோனோஸ்பேஸ் ஃபான்ட் ஸ்டைல் என்றால் என்ன?

    போல்ட், இட்டாலிக், ஸ்டிரைக் த்ரூ, மோனோஸ்பேஸ் ஃபான்ட் ஸ்டைல் என்றால் என்ன?

    • இதில் இருந்து உங்களுக்குக் காண்பிக்கப்படும் ஸ்டைல் பார்மட்களை தேர்வு செய்யுங்கள்.
    • போல்ட் (Bold), இட்டாலிக் (Italic), ஸ்டிரைக் த்ரூ (Strike Through), மோனோஸ்பேஸ் (Mono space) போன்ற ஸ்டைலிங் விருப்பத்தைத் தேர்வு செய்துகொள்ளுங்கள்.
    • போல்ட் (Bold) என்ற ஸ்டைலிங் விருப்பம், நீங்கள் டைப் செய்த ஃபான்டை தடித்த வார்த்தையாக மாற்றுகிறது.
    • இட்டாலிக் (Italic) என்ற ஸ்டைலிங் விருப்பம், நீங்கள் டைப் செய்த ஃபான்டை சாய்ந்த வார்த்தையாக மாற்றுகிறது.
    • இப்படி சில நொடியில் ஃபான்ட் ஸ்டைல் மாற்றலாமா?

      இப்படி சில நொடியில் ஃபான்ட் ஸ்டைல் மாற்றலாமா?

      • ஸ்டிரைக் த்ரூ (Strike Through) என்ற ஸ்டைலிங் விருப்பம், நீங்கள் டைப் செய்த ஃபான்டை அடித்தல் போன்ற கோட்டுடன் கூடிய வார்த்தையாக மாற்றுகிறது.
      • மோனோஸ்பேஸ் (Mono space) என்ற ஸ்டைலிங் விருப்பம், நீங்கள் டைப் செய்த ஃபான்டை போதிய இடைவெளி கொண்ட வார்த்தையாக மாற்றுகிறது.
      • இந்த வழிமுறையைப் பின்பற்றி நீங்கள் வாட்ஸ்அப் இல் டைப் செய்யும் ஃபான்ட்களின் ஸ்டைலை மாற்றி அமைக்கலாம்.
      • இது அனுப்புநர் மற்றும் பெறுநர் ஆகிய இருவருக்கும் மாற்றத்தைக் காண்பிக்கும்.
      • நெசம் இதுதான் நம்புங்க: வெறும் ரூ.399 விலையில் 3.3 TB டேட்டா..Jio, BSNL, Airtel, ACT பிராட்பேண்ட் திட்டங்கள்..நெசம் இதுதான் நம்புங்க: வெறும் ரூ.399 விலையில் 3.3 TB டேட்டா..Jio, BSNL, Airtel, ACT பிராட்பேண்ட் திட்டங்கள்..

        வாட்ஸ்அப் இல் ஃபான்ட் அளவை மாற்றம் செய்ய முடியுமா?

        வாட்ஸ்அப் இல் ஃபான்ட் அளவை மாற்றம் செய்ய முடியுமா?

        வாட்ஸ்அப் இல் நீங்கள் பயன்படுத்தும் ஃபான்ட் அளவை மாற்றம் செய்வதற்கு வாட்ஸ்அப் இப்போது உங்களுக்கு அனுமதி வழங்குகிறது. உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, உங்கள் வாட்ஸ்அப் ஃபான்ட் ஸ்டைலை எப்படி மாற்றி அமைத்தீர்களோ, அதேபோல், உங்களுடைய வாட்ஸ்அப் மெசேஜ்ஜிங் ஃபான்ட் அளவையும் நீங்கள் சில நொடியில் மாற்றி அமைக்கலாம். இந்த மாற்றம் உங்கள் போனிற்கு மட்டுமே பிரதிபலிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் மெசேஜ் அனுப்பிய நபரின் செட்டிங்கில் என்ன அளவு விருப்பம் தேர்வு செய்யப்பட்டுள்ளதோ, அப்படியே அவருக்கு மெசேஜ் டிஸ்பிளே செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

        வாட்ஸ்அப் ஃபான்ட் அளவை மாற்றுவது எப்படி?

        வாட்ஸ்அப் ஃபான்ட் அளவை மாற்றுவது எப்படி?

        • இதற்கு நீங்கள் முதலில் உங்கள் வாட்ஸ்அப் பயன்பாட்டை ஓபன் செய்ய வேண்டும்.
        • பின்னர் வலது மேல் மூலையில் உள்ள மூன்று புள்ளிகள் கொண்ட ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.
        • இப்போது செட்டிங்ஸ் (Settings) விருப்பத்தை கிளிக் செய்யுங்கள்.
        • பின்னர், சாட்ஸ் (Chats) என்ற விருப்பத்தை கிளிக் செய்யுங்கள்.
        • இப்போது சாட்ஸ் செட்டிங்ஸ் விருப்பத்திற்குள் இருக்கும், ஃபான்ட்ஸ் சைஸ் (Fonts size) என்ற விருப்பத்தை கிளிக் செய்யுங்கள்.
        • வைஃபை ரூட்டரை எந்த இடத்தில் வைத்தால் சிறந்தது? அதிக இணைய வேகம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?வைஃபை ரூட்டரை எந்த இடத்தில் வைத்தால் சிறந்தது? அதிக இணைய வேகம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

          Small, Medium, Large விருப்பம் என்ன செய்யும் தெரியுமா?

          Small, Medium, Large விருப்பம் என்ன செய்யும் தெரியுமா?

          • இப்போது காண்பிக்கப்படும் மூன்று விருப்பங்களில் இருந்து ஏதேனும் ஒரு ஃபான்ட் அளவை நீங்கள் செலக்ட் செய்து பயன்படுத்தலாம்.
          • Small, Medium, Large என்ற மூன்று விருப்பங்கள் மூன்று வெவேறு அளவிலான ஃபான்ட்களை உங்களுக்கு வழங்குகிறது.
          • Small - சிறிய, Medium - நடுத்தர, Large - பெரிய அளவிலான ஃபான்ட் அளவை உங்களுக்கு வழங்குகிறது.
          • யாருக்கெல்லாம் இந்த மாற்றம் பிரதிபலிக்கும்?

            யாருக்கெல்லாம் இந்த மாற்றம் பிரதிபலிக்கும்?

            இந்த வழிமுறையைப் பின்பற்றி உங்களுடைய வாட்ஸ்அப் ஃபான்ட் ஸ்டைல் மற்றும் ஃபான்ட் அளவை சில நொடியில் மாற்றிப் பயன்படுத்தலாம். இந்த ஸ்டைலிங் மாற்றம் அனுப்புநர் மற்றும் பெறுநர் ஆகிய இருவருக்கும் பிரதிபலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.ஃபான்ட் அளவு உங்கள் ஸ்மார்ட்போனில் மட்டுமே பிரதிபலிக்கும் என்பதை மறக்காதீர்கள். இது உங்களின் வாட்ஸ்அப் காண்டாக்ட் நண்பர்களின் போன்களில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
How To Change WhatsApp Font Style And Font Size In Your Chat With Easy Trick : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X