ஒன்பிளஸ்-ஐ கதிகலங்க வைத்த Vivo நிறுவன போன்.. சோனி கேமரா.. இந்தியாவுக்கு வருகிறது.. எந்த மாடல்?
கடந்த மார்ச் 5-ம் தேதி விவோ எக்ஸ்300 எப்இ (Vivo X300 FE) ஸ்மார்ட்போனை ரஷ்யாவில் அறிமுகம் செய்தது விவோ நிறுவனம். இந்நிலையில் இந்த விவோ போன் விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.
டிப்ஸ்டர் யோகேஷ் பிரார் சமீபத்தில் வெளியிட்ட தகவலின்படி, கிரீன், மூன்லைட் ஒயிட், கூல் பர்பிள் மற்றும் கிராஃபைட் பிளாக் இந்த புதிய விவோ எக்ஸ்300 எப்இ போன் அறிமுகமாகும் என்று தெரிவித்துள்ளார். அதுவும் இந்த மாதம் இறுதியில் அல்லது வரும் மே மாதம் தொடக்கத்தில் இந்த விவோ போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இப்போது விவோ எக்ஸ்300 எப்இ போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

விவோ எக்ஸ்300 எப்இ அம்சங்கள் (Vivo X300 FE specifications): 6.31-இன்ச் எல்டிபிஒ அமோலெட் (LTPO AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது விவோ எக்ஸ்300 எப்இ. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1,216×2,640 பிகச்ல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 5000 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.
ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6)மூலம் இந்த விவோ எக்ஸ்300 எப்இ ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.
3என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் (3nm octa core Snapdragon 8 Gen 5 chip) வசதி விவோ எக்ஸ்300 எப்இ ஸ்மார்ட்போனில் உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.
50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது விவோ எக்ஸ்300 எப்இ ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது.
6500எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது விவோ எக்ஸ்300 எப்இ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 40W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor), இன்பிராரெட்சென்சார் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த விவோ எக்ஸ்300 எப்இ ஸ்மார்ட்போனில் உள்ளன. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவும் இந்த போனில் உள்ளது.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 7, புளூடூத் 6.0, என்எப்சி, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), கலிலியோ (Galileo) உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் 6, ஒன்பிளஸ் 16 போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. ஆகவே இந்த போன்களுக்கு போட்டியாக விவோ எக்ஸ்300 எப்இ போனை களமிறக்க உள்ளது விவோ நிறுவனம்.
photos credits: smartprix, vivo


Click it and Unblock the Notifications








