Home
News

தமிழகத்தில் ரேஷன் கார்டு தொடர்பான மிக முக்கியமான அப்டேட்.. என்னென்ன மாறுது? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கார்டு (ration card) பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளன. அதுவும் இந்த ஏப்ரல் 2026 முதல் வரும் புதிய மாற்றங்களைப் பொதுமக்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். இது குறித்த விரிவான தகவல்கள் இந்த பதிவில் பார்க்கலாம்.

1.மூன்று மாத உணவுத் தானியங்கள் ஒரே முறையில் வழங்கப்படும் என்ற புதிய திட்டம் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்குத் தேவையான அரிசி மற்றும் கோதுமை போன்ற பொருட்கள் ஒரே தடவையில் வழங்கப்பட உள்ளன. கோதுமை கொள்முதல் தொடங்க உள்ளதால், மத்திய அரசின் கிடங்குகளில் உள்ள பழைய இருப்புகளை காலி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் ரேஷன் கார்டு தொடர்பான மிக முக்கியமான அப்டேட்..

எனவே இனி மாதம் மாதம் ரேஷன் கடைக்குச் செல்ல வேண்டிய அவசியம் குறையும். அதுவும் வேலைக்குச் செல்லும் மற்றும் கிராமப்புற மக்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.

2.தற்போது e-KYC கட்டாயம் என்ற முக்கிய மாற்றமும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் தங்களின் ஆதார் விவரங்களைச் சரிபார்த்து e-KYC அப்டேட் செய்ய வேண்டும். இதைச் செய்யாதவர்களுக்கு எதிர்காலத்தில் ரேஷன் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3. இப்போது டிஜிட்டல் விநியோக முறை (e-POS) மூலம் ரேஷன் வழங்கும் நடைமுறை பலப்படுத்தப்பட்டுள்ளது.அதுவும் ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பு மூலம் உண்மையான பயனாளிகளுக்கு மட்டும் பொருட்கள் கிடைப்பதை அரசு உறுதி செய்ய திட்டமிட்டுள்ளது. அதேபோல் தகுதி இல்லாத அல்லது போலியான ரேஷன் கார்டுகளை (ration cards) நீக்கும் நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் உண்மையான பயனாளிகளுக்கு உரிய அளவு உதவி கிடைப்பதை உறுதி செய்யப்படுகிறது.

4.தமிழகத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தல் காரணமாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. ஆகவே புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்குத் தேர்தல் முடிந்த பிறகு, மே 4-ஆம் தேதிக்கு மேல் கார்டுகள் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில் புதிய ரேஷன் கார்டு தேவைப்படுவோர் ஆன்லைன் வாயிலாகத் தடையின்றி விண்ணப்பிக்கலாம். குறிப்பாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் புதிய கார்டுகளை அச்சிட்டு வினியோகம் செய்யும் பணி தற்போது நடைபெறாது.

தமிழகத்தில் ரேஷன் கார்டு தொடர்பான மிக முக்கியமான அப்டேட்..

குறிப்பாக தேர்தல் நடைமுறைகள் முடிந்து, விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்ட பின்பு தான் புதிய கார்டுகள் வழங்கும் பணி தொடங்கும். அதுவும் ஒவ்வொரு மாவட்டத்தில் சராசரியாக மாதத்திற்கு 2000 புதிய விண்ணப்பங்கள் வருகின்றன. ஆனால் இவை அனைத்தும் தேர்தல் முடிவுக்குப் பின்பு பரிசீலிக்கப்பட்டு, தகுதியானவர்களுக்கு கார்டுகள் வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

தற்போது ரேஷன் கார்டு தொலைந்துவிட்டாலோ அல்லது புதிய கார்டு தேவைப்பட்டாலோ, இப்போதே ஆன்லைனில் விண்ணப்பித்து வைப்பது நல்லது. வரும் மே மாதம் தேர்தல் முடிவுகள் வெளியானதும் ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் விரைவுபடுத்தப்படும். ஆகவே அப்போது விண்ணப்பிப்பது சிக்கலை ஏற்படுத்தலாம் அல்லது தாமதப்படுத்தலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
From e-KYC to new card application, major changes have come to ration cards in Tamil Nadu
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X