பின்றானே இவன்.. 6500mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. புது Infinix 5ஜி போன்!
இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ 5ஜி (Infinix Note 60 Pro 5G) ஸ்மார்ட்போனின் கலர் ஆப்ஷன்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு உள்ளன. குளோபல் மார்கெட்டில் கிடைத்ததைவிட கம்மியான ஆப்ஷன்களே வர இருக்கின்றன. ஆனால், அதே கலர்கள் மற்றும் டிசைனில் இந்தியாவில் வெளியாக இருக்கிறது. என்னென்ன கலர்களில் கிடைக்க உள்ளது?
குளோபல் மார்கெட்டில் மிஸ்ட் டைட்டானியம் (Mist Titanium), டீப் ஓசன் ப்ளூ (Deep Ocean Blue), சோலார் ஆரஞ்ச் (Solar Orange), மோச்சா பிரவுன் (Mocha Brown), டோரினோ பிளாக் (Torino Black) மற்றும் ப்ரோஸ்ட் சில்வர் (Frost Silver) ஆகிய கலர்கள் வெளியாகின. ஆனால், இந்திய மார்கெட்டில் டீப் ஓசன் ப்ளூ, மோச்சா பிரவுன் மற்றும் சோலார் ஆரஞ்ச் ஆகிய 3 கலர்கள் மட்டுமே வெளியாக உள்ளன.

ஆகவே, ஆப்ஷன்கள் மட்டுமே குறைக்கப்பட்டு உள்ளன. ஆனால், அதே கலர் மற்றும் டிசைனில் இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. ஆக்டிவ் மேட்ரிக்ஸ் டிஸ்பிளே கொண்ட மாடலாக களமிறங்க இருக்கிறது. வருகிற ஏப்ரல் 13 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வர உள்ளது.
முன்னதாக, ஆக்டிவ் மேட்ரிக்ஸ் டிஸ்பிளே மற்றும் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கொண்ட டிசைன் உறுதி செய்யப்பட்டது. இந்த விவரங்களை வைத்தே குளோபல் மார்கெட்டில் வெளியான அதே வெர்ஷன் இந்தியாவிலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு ஏற்ப குளோபல் மார்கெட்டில் கிடைத்த அதே கலர் ஆப்ஷன்கள் இங்கும் உறுதி செய்யப்பட்டு உள்ளன.
ஆகவே, குளோபல் வெர்ஷனில் கிடைத்த பீச்சர்கள் அப்படியே இதிலும் கிடைக்கும். இந்த ஆக்டிவ் மேட்ரிக்ஸ் டிஸ்பிளேவில் நோட்டிபிகேஷன்கள் கொடுக்கப்படும். மினி கேம்கள், கஸ்டம் சிக்னேச்சர், சார்ஜிங் மற்றும் பேட்டரி இன்டிகேஷன், நோட்டிபிகேஷன்கள் மற்றும் அப்டேட்கள், டைம் மற்றும் வெதர், கால்கள் மற்றும் மெசேஜ்கள் உள்ளிட்டவையை இதில் அணுகலாம்.
மேட்ரிக்ஸ் டிஸ்பிளேவாக இருப்பதால், வெறும் டாட்களை வைத்து அவுட்புட் கொடுக்கப்படும். ஆகவே, பிளாக் மற்றும் ஒயிட் டாட்களில் அவுட்புட் கிடைக்கும். இந்த ஆக்டிவ் மேட்ரிக்ஸ் டிஸ்பிளே ஆன் செய்யப்படும் வரையில், கேமரா பம்பில் இருப்பது கிட்டத்தட்ட தெரியாது. ஆகவே, பெரியதாக பிடிக்காமல் போகாது. ரிங் டைப் எல்இடி கிடைக்கிறது.
டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera) கொண்டுள்ளது. 360 டிகிரியிலும் ஏரோஸ்பேஸ் கிரேடு அலுமினியம் ஃபிரேம் கொண்ட மாடலாக இருக்கிறது. இதுவரை பார்த்த பீச்சர்கள், கலர் மற்றும் விற்பனை விவரங்கள் மட்டுமே உறுதி செய்யப்பட்டு உள்ளன. இப்போது, குளோபல் வெர்ஷனில் கிடைத்த பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம். இதே பீச்சர்கள் இந்திய வெர்ஷனிலும் கிடைக்கும்.
அலுமினியம் பாடி மட்டுமல்லாமல், கார்னிங் கொரில்லா கிளாஸ் (Corning Gorilla Glass) டிஸ்பிளே புரொடெக்சன் கொண்டுள்ளது. பிரீமியம் ஆடியோ குவாலிட்டி கொடுக்க ஜேபிஎல் நிறுவனத்தின் 360 டிகிரி டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers) கிடைக்கின்றன. 50 எம்பி ஓஐஎஸ் நைட் மாஸ்டர் கேமரா (OIS Night Master Camera) கொடுக்கப்பட்டு உள்ளது.
அல்ட்ரா எச்டி ஆர், லைவ் போட்டோ மோட் கிடைக்கிறது. 6500mAh பேட்டரியுடன் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. 30W வயர்லெஸ் சார்ஜிங் கொண்டுள்ளது. 3டி ஐஸ்கோர் விசி சேம்பர் கூலிங் கிடைக்கிறது. ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 (Snapdragon 7s Gen 4) சிப்செட் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட அல்ட்ரா எச்டிஆர் அமோலெட் டிஸ்பிளே உள்ளது.


Click it and Unblock the Notifications








