Home
Mobile

9000mAh பேட்டரி, IP69K உடன் புது OnePlus 5ஜி போன் அறிமுகம்.. ரூ.3000 டிஸ்கவுண்ட் உடன் ஏப்.9 முதல் விற்பனை!

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆக ஒன்பிளஸ் நோர்ட் 6 (OnePlus Nord 6) மாடல் இன்று (ஏப்ரல் 7 ஆம் தேதி) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? எப்போது முதல் விற்பனை? என்னென்ன ஆபர்? இதோ விவரங்கள்:

ஒன்பிளஸ் நோர்ட் 6 விலை, விற்பனை, ஆபர்: இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.38,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.41,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 9 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் ஃப்ரெஷ் மின்ட், பிட்ச் பிளாக் மற்றும் க்விக் சில்வர் ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கி வரும்.

9000mAh பேட்டரி உடன் புது OnePlus 5ஜி போன் அறிமுகம்!

விற்பனை சலுகைகளை பொறுத்தவரை வாடிக்கையாளர்கள் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டுகளில் (ஃபுல் ஸ்வைப்) ரூ.2,000 தள்ளுபடியையும், ஆக்சிஸ் வங்கி மற்றும் எச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்டுகளில் (இஎம்ஐ பரிவர்த்தனைகள்) ரூ.3,000 தள்ளுபடியையும் பெறலாம். இதன் மூலம், 8ஜிபி மற்றும் 12ஜிபி வேரியண்ட்களின் விலை முறையே ரூ.35,999 மற்றும் ரூ.38,999 ஆக குறைக்க முடியும்.

ஒன்பிளஸ் நோர்ட் 6 அம்சங்கள்:
- டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவு
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஆக்சிஜன்ஓஎஸ் 16 ஓஎஸ்
- 4 மேஜர் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள்கிடைக்கும்
- 6 ஆண்டுகள் வரையிலான செக்யூரிட்டி பேட்ச்கள் கிடைக்கும்

- 6.78-இன்ச் 165ஹெர்ட்ஸ் அமோஎல்இடி டிஸ்பிளே
- 1.5கே (1,272x2,772 பிக்சல்கள்) ரெசல்யூஷன்
- 450பிபிஐ பிக்சல் டென்சிட்டி
- 93.5 சதவீத ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ
- கிரிஸ்டல் கார்டு ப்ரொடெக்ஷன்
- PWM டிம்மிங் (3840ஹெர்ட்ஸ்) ஆதரவு
- 3600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்

- அட்ரினோ 825 GPU உடன் கூடிய ஸ்னாப்டிராகன் 8s ஜென் 4 சிப்செட்
- 12ஜிபி வரை LPDDR5X ரேம்
- 256ஜிபி வரை UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஹீட் மேனேஜ்மென்ட்டிற்கான 33,147மிமீ சதுர வெப்ப வெளியேற்ற பகுதி (ஹீட் டிஸ்பேஷன் ஏரியா)

- டூயல் ரியர் கேமரா செட்டப்
- ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS), எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS), எப்/1.8 அபெர்ச்சர் மற்றும் PDAF உடனான 50-மெகாபிக்சல் சோனி LYT-600 CMOS ப்ரைமரி கேமரா
- 112-டிகிரி பீல்ட் ஆப் வியூ உடனான 8-மெகாபிக்சல் ஆம்னிவிஷன் OV08F அல்ட்ரா-வைட் கேமரா
- செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கான 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா

- ஓரியாலிட்டி (OReality) ஆடியோவுடன் கூடிய டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- பிளஸ் கீ (இதை கொண்டு ஸ்க்ரீனில் உள்ள எந்தவொரு கன்டென்ட்டையும் மைண்ட் ஸ்பேஸில் சேர்க்கலாம்)
- ப்ளூடூத் 6, 5ஜி, ஜிபிஎஸ், க்ளோனாஸ், பிடிஎஸ், கலிலியோ, QZSS, நாவிக், வைஃபை மற்றும் ஒரு யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- ஆக்சிலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட் சென்சார், இ-காம்பஸ், சிக்ஸ்-ஆக்சிஸ் கைரோஸ்கோப், கலர் டெம்ப்ரேச்சர் சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார் மற்றும் எக்ஸ்-அச்சு லீனியர் மோட்டார்

- MIL-STD-810H மிலிட்டரி கிரேட் ட்யூரபிலிட்டி
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP66 + IP68 + IP69 + IP69K ரேட்டிங்
- 80W சூப்பர்VOOC சார்ஜிங் ஆதரவு
- 27W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங்
- மற்றும் பைபாஸ் சார்ஜிங் ஆதரவு
- 9000mAh சிலிக்கான் கார்பன் பேட்டரி
- அளவீட்டில் 162.5x77.5x8.5மிமீ
- எடையில் 217 கிராம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Nord 6 Launched in India Check Out Price Sale Offers Specifications Sale Starts April 9
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X