Home
Mobile

VIVO வெளுத்து விட்டான்.. ஸ்லிம் டிசைனில் 9020mAh பேட்டரி, IP69, 50MP SONY கேமரா.. புது 5ஜி போன்.. எந்த மாடல்?

விவோ (Vivo) நிறுவனம் 9020எம்ஏஎச் பேட்டரி (9020mAh Battery) கொண்ட ஒரு முரட்டு 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. அது விவோ டி5 ப்ரோ 5ஜி (Vivo T5 Pro 5G) மாடலாகும். இப்போதைக்கு இது ஏப்ரல் 2026 இல் இந்தியாவில் அறிமுகமாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது; சரியான வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

மாடல் குறிப்பிடுவது போலவே.. விவோ டி5 பட்டோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது விவோ டி4 ப்ரோ 5ஜி மாடலின் அப்கிரேடட் வெர்ஷன் ஆக இருக்கும். அறிமுகமான நாளில் இருந்து விவோ டி4 ப்ரோ 5ஜி மாடலானது மிட்-ரேன்ஜ் பிரிவில் மிகவும் பிரபலமாக உள்ளதால், விவோ டி5 ப்ரோ 5ஜி மீது இப்போதே எதிர்பார்புகள் எகிற தொடங்கிவிட்டன.

VIVO வெளுத்து விட்டான்.. ஸ்லிம் டிசைனில் 9020mAh பேட்டரி, IP69!

இதற்கிடையில் விவோ நிறுவனம் அதன் விவோ டி5 ப்ரோ ஸ்மார்ட்போனில் 9020mAh பேட்டரி இடம்பெறும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. தற்போதைய தரநிலைகளின்படி கூட இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும், ஏனெனில் இந்த பிரிவில் உள்ள பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் 5000mAh முதல் 7,000mAh வரையிலான மட்டுமே பேட்டரியை மட்டுமே பேக் செய்கின்றன.

இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் - மேலும் இவ்வளவு பெரிய பேட்டரி திறன் கொண்ட ஸ்மார்ட்போன்களிலேயே விவோ டி5 பப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் தான் மிகவும் ஸ்லிம் ஆன ஸ்மார்ட்போன் ஆக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக இதைவிட பெரிய பேட்டரி கெப்பாசிட்டி கொண்ட சற்றே தடினமான ஸ்மார்ட்போன்களுக்கும் கூட இது போட்டியாக அமையும்.

மேலும் விவோ நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் 120FPS கேமிங் ஆதரவையும் உறுதிப்படுத்தியுள்ளது, இது மென்மையான கேம்ப்ளே மற்றும் மேம்பட்ட டச் ரெஸ்பான்சிவ்னஸ் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதை குறிக்கிறது. சரி வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது என்ன விலைக்கு வரலாம்?

விவோ டி5 ப்ரோ ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? லீக் ஆன விவரங்களின் படி, இது 1.5கே ரெசல்யூஷன் மற்றும் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.8-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம்

சிப்செட்டை பொறுத்தவரை இது முந்தைய மாடலில் இருந்த ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட்டிற்கு பதிலாக, ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது செயல்திறன் மற்றும் தொடர்ச்சியான வேலைப்பளுவில் ஒரு சிறிய, ஆனால் குறிப்பிடத்தக்க செயல்திறன் மேம்பாட்டை குறிக்கிறது. இது அன்றாட மல்டிடாஸ்கிங், சாதாரண மற்றும் மிதமான கேமிங், சோஷியல் மீடியா மற்றும் ஸ்ட்ரீமிங் ஆகியவற்றை எளிதாக கையாளும் எபத்தில் சந்தேகமே வேண்டாம்.

கேமராவை பொறுத்தவரை, விவோ டி5 ப்ரோ ஸ்மார்ட்போனில் 50எம்பி சோனி IMX882 ப்ரைமரி சென்சார் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ரெசல்யூஷன் முந்தைய மாடலை போலவே இருந்தாலும், சென்சாரில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், ஒரு பெரிய ஹார்டுவேர் பாய்ச்சலை காட்டிலும், சிறந்த இமேஜ் பிராசஸிங், மேம்பட்ட லோ லைட் செயல்திறன் மற்றும் மிகவும் நிலையான ரிசல்ட்களை வழங்கலாம். விவோகடைசியாக இது தூசி மற்றும் தண்ணீருக்கு எதிராக வலுவான பாதுகாப்பை வழங்கும் IP68 மற்றும் IP69 ரேட்டிங்களை தக்க வைத்து கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விவோ டி5 ப்ரோவின் எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயம்: இந்தியாவில் இதன் விலை இது ரூ.30,000 க்கு சற்று அதிகமாகவும், ஆனால் ரூ.35,000 க்கு குறைவாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ரூ.27,999 என்கிற ஆரம்ப விலையுடன் அறிமுகப்படுத்தப்பட்ட விவோ டி4 ப்ரோவுடன் ஒப்பிடும்போது இது நிச்சயமாக ஒரு விலை உயர்வுதான். ஆனால், உதிரிபாகங்களின் விலையேற்றத்தால் ஸ்மார்ட்போன் துறையில் நிலவும் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொள்ளும்போது இந்த விலை உயர்வு - நியாயமானது தான்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo T5 Pro 5G With 9020mAh Battery 120FPS gaming support Price Under Rs 35000 India Launch Soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X