வீட்டுக்குள் ஒரு 4K மினி தியேட்டர்.. 150 இன்ச்.. ஆண்ட்ராய்டு ஓஎஸ்.. புதிய ப்ரொஜெக்டர் அறிமுகம்.. எந்த மாடல்?
லைஃப்லாங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய லைஃப்லாங் ROAR சரவுண்ட்-சவுண்ட் கரோக்கி ப்ரொஜெக்டர் (Lifelong ROAR surround-sound karaoke projector) மாடலை அறிமுகம் செய்துள்ளது. அதுவும் கம்மி விலையில் தரமான அம்சங்கள் மற்றும் தனித்துவமான வடிவமைப்பு இந்த ப்ரொஜெக்டர் மாடல் வெளிவந்துள்ளது. இப்போது இந்த சாதனத்தின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
Lifelong ROAR ப்ரொஜெக்டர் அம்சங்கள் (Lifelong ROAR Projector Specifications): 720pஎச்டி ரெசல்யூஷன் மற்றும் 1080p ஃபுல் எச்டி மற்றும் 4கே ரெசல்யூஷன் ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான Lifelong ROAR ப்ரொஜெக்டர் மாடல். குறிப்பாக இது ஒரு எல்இடி ப்ரொஜெக்டர் ஆகும். அதுவும் இந்த ப்ரொஜெக்டர் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது Lifelong நிறுவனம்.

Lifelong ROAR ப்ரொஜெக்டர் மாடல் ஆனது 3840 × 2160 பிக்சலஸ், 4000 லுமன்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது. ஆகவே இந்த ப்ரொஜெக்டர் மாடல் ஆனது சிறந்த திரை அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் Lifelong ROAR ப்ரொஜெக்டர் மாடல் மூலம் 150 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். எனவே 100 இன்ச் டிவிகளை வாங்க வேண்டிய அவசியமே இருக்காது. அதாவது இந்த ப்ரொஜெக்டர் மாடலே பெரிய திரை அனுபவத்தைக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ப்ரொஜெக்டர் உடன் ரிமோட் கண்ட்ரோல் ஒன்றும் கிடைக்கும்.
ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த Lifelong ROAR ப்ரொஜெக்டர் வெளியாகி உள்ளது. எனவே இந்த ப்ரொஜெக்டர் மாடலில் பல புதிய அம்சங்களைப் பயன்படுத்த முடியும். ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), பிரைம் வீடியோ (Prime Video) மற்றும் நெட்பிளிக்ஸ் (Netflix) போன்ற பல்வேறு ஓடிடி ஆப்களை இதில் பயன்படுத்த முடியும்.
ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone),Manual போகஸ், டூயல் வயர்லெஸ் மைக்ரோபோன்கள் போன்ற பல சிறப்பான வசதிகள் இந்த Lifelong ROAR ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன. அதேபோல் மிராகாஸ்ட் (Miracast) சப்போர்ட் மற்றும் ஸ்கிரீன் மிரரிங் (screen mirroring) சப்போர்ட் கொண்டுள்ளது இந்த சாதனம்.
இந்த புரொஜெக்டர் உடன் ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட், ஸ்பீக்கர்கள், யுஎஸ்பி டிரைவ், செட்-டாப் பாக்ஸ்,மல்டிபிள் போர்ட் போன்றவற்றை கனெக்ட் செய்து கொள்ளலாம். புளூடூத், வைஃபை, எச்டிஎம்ஐ, யூஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த Lifelong ROAR ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன.

பிலட் இன் 20W ஸ்பீக்கர்கள் இந்த சாதனத்தில் உள்ளன. மேலும் இதில் 50,000 மணி நேர எல்இடி லேம்ப் லைஃப் (LED Lamp Life) கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் 1000 கிராம் எடை கொண்டுள்ளது Lifelong ROAR ப்ரொஜெக்டர் மாடல்.
அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் இந்த Lifelong ROAR ப்ரொஜெக்டர் விற்பனைக்கு வருகிறது. மேலும் இந்த சாதனத்தின் விலை ரூ.7,999-ஆக உள்ளது. குறிப்பாக மலிவு விலையில் 150 இன்ச், 4கே சப்போர்ட், 20W ஸ்பீக்க்கள், ஆட்டோ கீஸ்டோன் உள்ளிட்ட பல தரமான அம்சங்களுடன் இந்த ப்ரொஜெக்டர் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








