போட்டான் பாரு மோட்டோ.. pOLED டிஸ்பிளே.. 5200mAh பேட்டரி.. 68W சார்ஜிங்.. SONY கேமரா.. எந்த மாடல்?
மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2026 (moto g stylus 2026) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஆக்டிவ் ஸ்டைலஸ் மட்டுமல்லாமல், பிஓஎல்இடி டிஸ்பிளே, 5200mAh பேட்டரி, 68W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் சோனி சென்சார் கேமராவை கொடுத்து உள்ளது. இந்த மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2026 ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்த ஆக்டிவ் ஸ்டைலஸ் வழியாக ஸ்கெட்ச் டூ இமேஜ் (Sketch to Image) கிடைக்கிறது. ஹேட்ரைட்டிங் கால்குலேட்டர் (Handwriting Calculator) கிடைக்கிறது. மேலும், குயிக் கிளிப் (Quick Clip), டிராக் & டிராப் (Drag & Drop), ஹோவர் டூ மேக்னிபை (Hover to Magnify) கிடைக்கிறது. 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 100 மணி நேரங்களுக்கு ஸ்டாண்ட்பை டைம் கொடுக்கும்.

மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2026 அம்சங்கள் (moto g stylus 2026 Specifications): ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 4என்எம் (Octa Core Qualcomm Snapdragon 6 Gen 3 4nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்ட்டை இந்த மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2026 ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) உள்ளது.
மை யுஎக்ஸ் (My UX) கிடைக்கிறது. 6.7 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. 1.5K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டு உள்ளது. 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பை கொடுத்து உள்ளது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொடுத்து உள்ளது.
50 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. மேக்ரோ ஆப்ஷன் (Macro Option) கிடைக்கிறது. மெயின் கேமராவுக்கு சோனி எல்ஒய்டி 700சி (Sony LYT 700C) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி கிடைக்கிறது. 32 எம்பி செல்பீ கேமராவை கொடுக்கிறது. மேலும், 3‑இன்‑1 லைட் சென்சார் உள்ளது.
இந்த கேமராவுக்கு போட்டோ என்ஹான்ஸ்மெண்ட் என்ஜின் (Photo Enhancement Engine), சிக்னேச்சர் ஸ்லைட் (Signature Style), சூப்பர் ஜூம் (Super Zoom), ஆக்சன் ஷாட் (Action Shot) மற்றும் போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) கிடைக்கிறது. வாட்டர் டச் டெக்னாலஜி (Water Touch Technology) கிடைக்கிறது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உள்ளது.
மோட்டோரோலா நிறுவனத்தின் ஹேலோ யுஎக்ஸ் (Hello UX) கிடைக்கிறது. இதில் ஸ்மார்ட் கனெக்ட் (Smart Connect), மோட்டோ செக்யூர் (Moto Secure) உள்ளிட்ட சப்போர்ட் கிடைக்கிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட குவாட் ஸ்பீக்கர்கள் (Quad Speakers) கொடுக்கப்பட்டு உள்ளன. மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கிடைக்கிறது.
68W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட 5200mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த பேட்டரியுடன் 8.29 எம்எம் தடிமன் மற்றும் 192.3 கிராம் எடை கொண்டுள்ளது. குளோபல் மார்கெட்டில் ரூ.46,190 ஆக விலை இருக்கிறது. இந்திய மார்கெட்டில் விரைவில் எதிர்பார்க்கலாம். இதைவிட மலிவாக கிடைக்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








