அலசி ஆராய்ந்து பார்த்தா ரூ.12,000க்கே பெஸ்ட் ஸ்மார்ட்போன் இருக்கே.! 5ஜி போனும் உண்டு!

|

என்ன தான் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் தொடர்ந்து அறிமுகமாகி வந்தாலும் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனுக்கு என இந்தியாவில் தனி வரவேற்பு இருக்கத் தான் செய்கிறது. ரூ.12,000க்குள் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போனை வாங்கத் திட்டமிட்டிருந்தால் உங்களுக்கு இந்த பட்டியல் பேருதவியாக இருக்கும்.

அலசி ஆராய்ந்து பார்த்தா ரூ.12,000க்கே பெஸ்ட் ஸ்மார்ட்போன் இருக்கே.!

ரூ.12,000க்கு கிடைக்கும் ஸ்மார்ட்போன்

இந்தியாவில் ஸ்மார்ட்போன் சந்தை உற்று நோக்கினால் ரூ.12,000 விலைக்கே சிறந்த ஸ்மார்ட்போன்களை வாங்கலாம் என்பது புரிய வரும். சிறந்த கேமரா, மேம்பட்ட சிப்செட் என ஒவ்வொரு ஸ்மார்ட்போனும் ஒவ்வொரு குறிப்பிடத்தக்க அம்சங்களைக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான பிராண்டுகள் சிறந்த அம்சங்களுடன் கூடிய பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதில் தான் கவனம் செலுத்தி வருகிறது.

Redmi, Realme, Samsung, Poco, Lava என பல பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் கிடைக்கிறது. குறைந்த விலையில் சிறந்த ஸ்மார்ட்போனை உங்களுக்கோ உங்கள் பெற்றோருக்கோ வாங்கத் திட்டமிட்டிருந்தால் இது உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

ரெட்மி 10

ரெட்மி 10 ஸ்மார்ட்போன் ஆனது இரண்டு மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.12,000 விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. அதாவது இந்த ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.9,999 எனவும் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.11,999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

6000mAh பேட்டரி

இந்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனில் உள்ள குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இதில் 6000mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது Qualcomm Snapdragon 680 SoC மூலம் இயக்கப்படுகிறது. இதில் வாட்டர் டிராப் நாட்ச் வசதி கொண்ட 6.71 இன்ச் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இதில் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனில் ஏணைய குறிப்பிடத்தக்க அம்சங்கள் இருக்கிறது.

Realme C35

Realme C35 ஸ்மார்ட்போனானது ரூ.12,000 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ரியல்மி சி35 ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் இல் கிடைக்கிறது. இதன் விலை ரூ.11,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்டிலும் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

50 எம்பி டிரிபிள் ரியர் கேமரா

சிறந்த செயல்திறனை வழங்கக்கூடிய Unisoc T616 செயலி பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 50 எம்பி டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. முழு எச்டி டிஸ்ப்ளே, 5000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இதில் வழங்கப்பட்டிருக்கிறது. சிறந்த கேமரா அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போனை வாங்கத் திட்டமிட்டிருந்தால் உங்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்.

லாவா ப்ளேஸ் 5ஜி

உள்நாட்டு தயாரிப்பு ஸ்மார்ட்போனான லாவா ப்ளேஸ் 5ஜி, இந்தியாவில் மலிவு விலையில் கிடைக்கும் 5ஜி ஸ்மார்ட்போன்களில் பிரதான ஒன்றாகும். ரூ.12,000 விலையில் லாவா பிளேஸ் 5ஜி போன் கிடைக்கிறது. நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு மிஞ்சிய ஏணைய அம்சங்கள் இதில் இருக்கிறது. இது இந்திய நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

அலசி ஆராய்ந்து பார்த்தா ரூ.12,000க்கே பெஸ்ட் ஸ்மார்ட்போன் இருக்கே.!

மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப்செட்

இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 12 வாட்ஸ் வயர்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல் இது ப்ரீமியம் தோற்ற வடிவமைப்புடன் விற்பனைக்கு கிடைக்கிறது.

Poco M5

Poco M5 ஸ்மார்ட்போனானது ரூ.12,499க்கு கிடைக்கிறது. 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது இந்த ஸ்மார்ட்போன். 6.58 இன்ச் டிஸ்ப்ளே, 5000 எம்ஏஎச் பேட்டரி, 50 எம்பி டிரிபிள் ரியர் கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜி99 ப்ராசஸர் என பல மேம்பட்ட ஆதரவுகளைக் கொண்டிருக்கிறது இந்த போக்கோ ஸ்மார்ட்போன்.

Samsung Galaxy F13

ரூ.12,000 விலைப் பிரிவில் கிடைக்கும் குறிப்பிடத்தக்க ஸ்மார்ட்போன்களில் சாம்சங்கின் இந்த ஸ்மார்ட்போனுக்கு பிரதான இடம் இருக்கும். சாம்சங் கேலக்ஸி எஃப்13 விலை ரூ.11,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.6 இன்ச் முழு எச்டி+ டிஸ்ப்ளே, 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

எக்ஸினோஸ் 850 சிப்செட் மூலம் இது இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கிறது. 50 எம்பி பிரைமரி லென்ஸ், 5 எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் ஆதரவைக் கொண்டிருக்கிறது. முன்புறத்தில் 8 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Here the list of Best Smartphones Available Under Rs.12,000 in January 2023: 5G Smartphone also in list

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X