அடுத்த லாவா 5ஜி போன் ரெடி.. டூயல் ரியர் கேமரா.. மலிவு விலை.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
லாவா போல்டு 5ஜி (Lava Bold 5G) ஸ்மார்ட்போன் கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போனுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில் லாவா போல்டு 2 5ஜி (Lava Bold 2 5G) ஸ்மார்ட்போனை மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது லாவா நிறுவனம்.
அதாவது தற்போது லாவா போல்டு 2 5ஜி ஸ்மார்ட்போனின் டீசர் அமேசான் தளத்தில் வெளியாகி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் வரும் வாரங்களில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதுவும் இந்த புதிய லாவா ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் கம்மி பட்ஜெட்டில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

லாவா போல்டு 2 5ஜி அம்சங்கள் (Lava Bold 2 5G Specifications): எல்இடி பிளாஸ் ஆதரவுடன் டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த புதிய லாவா போல்டு 2 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனின் வலது பக்கத்தில் ஒரு பவர் பட்டன் மற்றும் சவுண்ட் கண்ட்ரோல்ஸ் உள்ளது. இதன் இடது பக்கத்தில் ஒரு சிம் ட்ரே ஸ்லாட் உள்ளது.
தற்போது லாவா போல்டு 2 5ஜி ஸ்மார்ட்போனின் சில விவரக்குறிப்புகள் மட்டுமே வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இந்த ஸ்மார்ட்போனின் அனைத்து அம்சங்களும் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட லாவா போல்டு 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
லாவா போல்டு 5ஜி அம்சங்கள் (Lava Bold 5G Specifications): லாவா போல்டு 5ஜி போனில் ஃபுல் எச்டி பிளஸ் 3டி கர்வ்ட் டிசைன் கொண்ட 6.67 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1080 x 2400 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 94 பிபிஐ பிக்சல் டென்சிட்டி உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (Octa Core 6nm MediaTek Dimensity 6300) சிப்செட் உடன் லாவா போல்டு 2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. அதுவும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவந்தது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
64 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி செகண்டரி லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த லாவா போல்டு 2 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா வசதியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
5000mAh பேட்டரி உடன் லாவா போல்டு 2 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் உள்ளது.
சப்பயர் ப்ளூ (Sapphire Blue) கலரில் இந்த லாவா ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. தற்போது லாவா போல்டு 5ஜி ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1000 வங்கி சலுகையுடன் சேர்த்து ரூ.13,999-க்கு வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








