VIVO-வின் புது வேட்டைக்காரன்.. பக்கா பட்ஜெட்டில் 16GB ரேம், 6000mAh பேட்டரி, 44W பாஸ்ட், ரிவர்ஸ் சார்ஜிங்!
விவோ (Vivo) நிறுவனம் ஆனது 6000mAh பேட்டரி உடனான ஒரு புதிய 5ஜி ஸ்மார்ட்போனை "சைலன்ட் ஆக" அறிமுகம் செய்துள்ளது. இந்நிறுவனம் சீனாவில் விவோ ஒய்37 பிளஸ் 5ஜி (Vivo Y37 Plus 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக விவோ ஒய்36 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், இதுவும் எப்போது வேண்டுமானாலும் இந்திய சந்தையில் அறிமுகம் ஆகலாம்.
விவோ ஒய்37 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1600 x 720 ரெசல்யூஷன், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் கண் பாதுகாப்பு (Eye Protection) உடனான 6.74-இன்ச் LCD பிளாட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்ப்ளிங் ரேட், 70% NTSC கலர் கேமட் மற்றும் 1500:1 கான்ட்ராஸ்ட் ரேஷியோவையும் ஆதரிக்கிறது.

சிப்செட்டை பொறுத்தவரை, விவோ ஒய்37 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 6300 உடன் வருகிறது. இது மாலி-G57 GPU உடன் இணைக்கப்பட்ட ஒரு 6என்எம் ஆக்டா-கோர் ப்ராசஸர் ஆகும். இது 8GB LPDDR4X ரேம் மற்றும் 256GB UFS 2.2 ஸ்டோரேஜ் உடன் வருகிறது, மெமரி ஃப்யூஷன் அம்சத்தின் மூலம் கூடுதலாக 8GB விர்ச்சுவல் ரேமிற்கான ஆதரவையும் வழங்கும்.
கேமராக்களை பொறுத்தவரை இது ஆட்டோஃபோகஸ் மற்றும் எப்/2.2 அபெர்க்ஷர் உடனான சிங்கிள் 13MP ரியர் கேமராவை கொண்டுள்ளது. இது நைட், போர்ட்ரெய்ட், பனோரமா மற்றும் ப்ரோ மோட் போன்ற மோட்களை ஆதரிக்கிறது. இது 10x டிஜிட்டல் ஜூம் வரை ஆதரிக்கிறது, அதே நேரத்தில் 1080p வீடியோ பதிவை ஆதரிக்கும்.
முன்பக்கத்தில், விவோ ஒய்37 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது செல்பீக்கள் மற்றும் வீடியோ கல்களுக்கான 5MP பிக்ஸடு-ஃபோகஸ் கேமராவை கொண்டுள்ளது. இதுவும் 1080p வீடியோக்களை பதிவு செய்யும் திறன் கொண்டது. இந்த ஸ்மார்ட்போன் ஐந்து ஆண்டுகள் வரை ஆயுட்காலம் கொண்ட மிகப்பெரிய 6000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 44W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது மற்றும் பிற டிவைஸ்களை சார்ஜ் செய்ய உதவும் ரிவர்ஸ் சார்ஜிங்கையும் (OTG) வழங்குகிறது.
கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட OriginOS 5 இல் இயங்குகிறது. இது சமீபத்திய அம்சங்கள், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு, யூஸர் பிரெண்ட்லி இன்டர்பேஸ் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பிற்காக அறிவார்ந்த மோசடி எதிர்ப்பு பாதுகாப்பையும் வழங்குகிறது.
கூடவே விவோ ஒய்37 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது NFC, இன்ப்ரா ரெட் ரிமோட் கண்ட்ரோல், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் மற்றும் 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் ஆகிய கனெக்டிவிட்டி ஆப்ஷன்களுடன் டூயல் நானோ சிம்மையும் ஆதரிக்கிறது. கடைசியாக இது SGS ஆல் சான்றளிக்கப்பட்ட டிராப் ரெசிஸ்டன்ஸையும் கொண்டு உள்ளது.
விவோ ஒய்37 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை: இந்த ஸ்மார்ட்போனின் 8GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது சீனாவில் 1,599 யுவானுக்கு, அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.21,400 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது
இந்த ஸ்மார்ட்போன் மூன்று நேர்த்தியான கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது: அப்சிடியன் பிளாக், கிளேஸ் ப்ளூ மற்றும் சன்ரைஸ் கோல்ட். இந்த ஸ்மார்ட்போன் இப்போது, சீனாவில், விவோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. விரைவில் விற்பனை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா உட்பட மற்ற நாடுகளில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்த சரியான விவரங்கள் இல்லை.


Click it and Unblock the Notifications








