மார்க்கெட்டே மிரள போகுது.. 200எம்பி கேமரா.. 7000எம்ஏஎச் பேட்டரி.. வருகிறது புதிய விவோ 5ஜி போன்.. எந்த மாடல்?
விவோ வி70 எப்இ (Vivo V70 FE) ஸ்மார்ட்போன் வரும் மார்ச் 9-ம் தேதி இந்தோனேசியாவில் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த போன் இந்தோனேசியாவில் அறிமுகமான சில வாரங்களில் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் விவோ வி70 எப்இ போனின் நிறங்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
மியூஸ் பர்பிள் (Muse Purple), ஓஷன் ப்ளூ ( Ocean Blue) மற்றும் டைட்டானியம் சில்வர் (Titanium Silver) ஆகிய நிறங்களில் இந்த புதிய விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவோ வி70 எப்இ அம்சங்கள் (Vivo V70 FE Specifications): சக்திவாய்ந்த ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7360 டர்போ 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7360 Turbo 4nm) சிப்செட் உடன் விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.
அதேபோல் 6.83 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் புதிய விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate)மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த புதிய போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
குறிப்பாக 200 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது புதிய விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் மூலம் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளன. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
ஏஐ டிராவல் போர்ட்ராய்டு (AI Travel Portrait), ஏஐ ரீடச் (AI Retouch), ஏஐ பெஸ்ட் பேஸ் (AI Best Face), ஃபிலிம் போட்டோ மோட் (Film Photo Mode) உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த விவோ போனில் உள்ளன.
அதுவும் ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மூலம் விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போன் இயங்கும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும். குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.
விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போன் 7000எம்ஏஎச் பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
மேலும் IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் விவோ வி70 எப்இ மாடல் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த புதிய விவோ போன் ரூ.28,999 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications








