யாரு சாமி அவன்.. 200MP கேமரா.. 7000mAh பேட்டரி.. 100W ஃபாஸ்ட் சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டும் திரும்பி பார்க்கும்படியான டிசைன் மற்றும் பீச்சர்களுடன் இன்பினிக்ஸ் நோட் 60 அல்ட்ரா (Infinix NOTE 60 Ultra) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 200 எம்பி கேமரா, 7000mAh பேட்டரி, 100W சார்ஜிங் உள்ளிட்ட பீச்சர்களை கொடுத்து உள்ளது. இந்த இன்பினிக்ஸ் நோட் 60 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விவரங்களை பார்க்கலாம்.
மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2026 (Mobile World Congress 2026) நிகழ்வில் மட்டுமே இன்பினிக்ஸ் நோட் 60 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. குளோபல் மற்றும் இந்திய மார்கெட்டில் வெளியாக ஓரிரு மாதங்களுக்கு மேலாகலாம். இருப்பினும், மலேசிய மார்கெட்டில் இந்த மாடலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை தெரியவந்துள்ளது. அதற்கு முன்பு பீச்சர்களை பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் நோட் 60 அல்ட்ரா அம்சங்கள் (Infinix NOTE 60 Ultra Specifications): 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.78 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை இந்த இன்பினிக்ஸ் நோட் 60 அல்ட்ரா கொண்டுள்ளது. 1.5K ரெசொலூஷன் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) பாதுகாப்பு கொடுத்து உள்ளது.
ரியரில் ஆக்டிவ் மேட்ரிக்ஸ் டிஸ்பிளே (Active Matrix Display) கொடுக்கப்பட்டு உள்ளது. நோட்டிபிகேஷன், வாய்ஸ் அசிஸ்டன்ட் கன்ட்ரோல்களை பயன்படுத்தி கொள்ளலாம். ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8400 அல்டிமேட் 4என்எம் (Octa Core MediaTek Dimensity 8400 Ultimate 4nm) சிப்டெட்டை இந்த இன்பினிக்ஸ் நோட் 60 அல்ட்ரா கொடுத்து உள்ளது.
மேலும், எக்ஸ்ஓஎஸ் 16 (XOS 16) மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு உள்ளது. 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரியை கொடுத்து உள்ளது. 200 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா + அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கொடுக்கப்பட்டு உள்ளது.
மெயின் கேமராவில் சாம்சங் ஐசோசெல் எச்பிஇ (Samsung ISOCELL HPE) சென்சார் மற்றும் டெலிபோட்டோவில் சாம்சங் ஐசோசெல் ஜேஎன்5 (Samsung ISOCELL JN5) சென்சார் கொடுக்கப்பட்டு உள்ளது. டெலிபோட்டோவுக்கு 100X டிஜிட்டல் ஜூமிங் சப்போர்ட் கிடைக்கிறது. எக்ஸ்டிஆர் இமேஜ் என்ஜின் (XDR Image Engine) உள்ளிட்ட கேமரா பீச்சர்கள் கிடைத்து உள்ளன.
100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7000mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. 3 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 5 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களை கொடுக்கிறது. டொரினோ பிளாக் (Torino Black), மோன்சா ரெட் (Monza Red) கலர்களில் வருகிறது.
மேலும், அமல்ஃபி ப்ளூ (Amalfi Blue) மற்றும் ரோமா சில்வர் (Roma Silver) ஆகிய கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் மலேசிய விலை ரூ.69,571ஆக இருக்கிறது. குளோபல் மார்கெட்டில் விலை தெரியவில்லை. ஆகவே, குளோபல் மார்கெட்டில் வெளியாகும்போது, இந்திய விலையை யூகிக்கலாம்.


Click it and Unblock the Notifications








