டிவி ரிமோட் பேட்டரிக்கு முடிவுகட்டப் போகும் புதிய தொழில்நுட்பம்: எப்போது கிடைக்கும்? வெயிட் பண்ணும் மக்கள்.!

|

இப்போது அறிமுகமாகும் பல்வேறு புதிய தொழில்நுட்ப சாதனங்கள் நமது தினசரி வேலையை எளிமையாக்குகின்றன. அதேபோல் பல முன்னணி நிறுவனங்கள் மக்களுக்குத் தேவையான புதிய புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டுவந்த வண்ணம் உள்ளது என்றே கூறலாம்.

ஸ்மார்ட் டிவி

ஸ்மார்ட் டிவி

குறிப்பாக இப்போது மக்கள் சாதாரண டிவிகளை பயன்படுத்துவதை விட ஸ்மார்ட் டிவிகளை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக ஸ்மார்ட் டிவிகள் சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கிறது என்றே கூறலாம். ஆனால் சாதாரண டிவிகளின் ரிமோட் பேட்டரி அளவை விட ஸ்மார்ட் டிவிகளின் ரிமோட்டின் பேட்டரிக்கு அதிக தேவை இருக்கும். மேலும் இவை அடிக்கடி சார்ஜ் தீர்ந்து மாற்றவேண்டிய நிலைமை கூட உள்ளது.

அட! இது தெரியாம போச்சே! மொபைல் வழியாக உங்கள் டிஜிட்டல் வாக்காளர் அட்டையை டவுன்லோட் செய்வது எப்படி?அட! இது தெரியாம போச்சே! மொபைல் வழியாக உங்கள் டிஜிட்டல் வாக்காளர் அட்டையை டவுன்லோட் செய்வது எப்படி?

TW electronics நிறுவனம்

TW electronics நிறுவனம்

இந்நிலையில் இந்த பேட்டரி பிரச்சனைக்கு முடிவுகட்ட ஒரு நிறுவனம் அருமையான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளது. அதாவது சார்ஜ் ஆகிக்கொள்ளும் ரிமோட் ஒன்றை TW electronics நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. கண்டிப்பாக இந்த தொழில்நுட்பம் அனைவருக்கும் பயன்படும் வகையில் இருக்கும் என்றே கூறலாம்.

Phantom X2 Pro 5G போனின் முன்பதிவு தேதி அறிவிப்பு: எக்கச்சக்க சலுகைகளை வழங்கி தெறிக்கவிட்ட டெக்னோ.!Phantom X2 Pro 5G போனின் முன்பதிவு தேதி அறிவிப்பு: எக்கச்சக்க சலுகைகளை வழங்கி தெறிக்கவிட்ட டெக்னோ.!

 ரிமோட் தானாக சார்ஜ் ஆகும்

ரிமோட் தானாக சார்ஜ் ஆகும்

அதாவது ரிமோட் அடியில் உள்ள பேட்டரி மேலே 'Photovoltaic panel' ஒன்றைப் பொருத்தி அதன் மூலமாக சார்ஜிங் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக நாம் தனியாக எதுவும் செலவழிக்கத் தேவை இருக்காது. நமது வீட்டில் இருக்கும் வெளிச்சம் போதும். அந்த வெளிச்சம் மூலம் நமது ரிமோட் தானாக சார்ஜ் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே ஒரு சார்ஜ் 10 நாட்களுக்கு கவலை இருக்காது: வருகிறது 22,000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்.!ஒரே ஒரு சார்ஜ் 10 நாட்களுக்கு கவலை இருக்காது: வருகிறது 22,000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்.!

Exeger மற்றும் Google TV

Exeger மற்றும் Google TV

மேலும் சமீபத்தில் TW எலக்ட்ரானிக்ஸ் தெரிவித்த தகவல் என்னவென்றால், தானாகவே சார்ஜிங் ஆகிக்கொள்ளும் ரிமோட் கண்ட்ரோல் அறிமுகம் செய்வதில் மிகவும் மகிழ்ச்சி என்றும், இதனை Exeger மற்றும் Google TV உடன் இணைந்து செய்து விரைவாக உருவாக்க முடிந்ததாகத் தெரிவித்துள்ளது.

ஒரே ஒரு சார்ஜ் 10 நாட்களுக்கு கவலை இருக்காது: வருகிறது 22,000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்.!ஒரே ஒரு சார்ஜ் 10 நாட்களுக்கு கவலை இருக்காது: வருகிறது 22,000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்.!

சாம்சங், அமேசான்

சாம்சங், அமேசான்

குறிப்பாக இந்த ரிமோட் ஒளியை மின்சாரமாக மாற்றி ரிமோட் உள்ளே இருக்கும் பேட்டரி சார்ஜ் ஆகும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதேபோல் புதிய டெக்னாலஜி ஒன்றை சாம்சங், அமேசான் ஆகிய நிறுவனங்கள் ஆராய்ச்சி செய்வதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

நடை, உடை அனைத்தும் ஐபோன் போல்.. 1 வித்தியாசம் கூட சொல்ல முடியாது! ரூ.10,900க்கு சீன கம்பெனி லீலை.!நடை, உடை அனைத்தும் ஐபோன் போல்.. 1 வித்தியாசம் கூட சொல்ல முடியாது! ரூ.10,900க்கு சீன கம்பெனி லீலை.!

கூகுள் விரைவில் அறிமுகம் செய்யும்

கூகுள் விரைவில் அறிமுகம் செய்யும்

மேலும் இந்த புதிய தொழில்நுட்பம் கொண்ட ரிமோட்-ஐ கூகுள் விரைவில் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு இதுபோன்ற ரிமோட் மக்களுக்குக் கிடைத்தால் தொடர்ந்து பல ஆண்டுகளுக்குப் பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த அதிநவீன ரிமோட் மட்டும் வெளிவந்தால், ஒரு புதிய சாதனையாகத் தான் இருக்கும்.

யாரு சொன்னது ஓசோன் ஓட்டைய அடைக்க முடியாதுனு.! அடச்சுட்டோம் மாறா.! இனி பூமிக்கு அழிவு இல்ல.!யாரு சொன்னது ஓசோன் ஓட்டைய அடைக்க முடியாதுனு.! அடச்சுட்டோம் மாறா.! இனி பூமிக்கு அழிவு இல்ல.!

முன்னணி நிறுவனங்கள்

முன்னணி நிறுவனங்கள்

அதேபோல் இந்த ஆண்டு பல முன்னணி நிறுவனங்கள் அதிநவீன ஸ்மார்ட் டிவிகளை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு இனி வரும் ஸ்மார்ட் டிவிகளில் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்குப் பல புதிய தொழில்நுட்ப வசதிகள் இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Future Google TV remotes will feature a self-charging battery powered by indoor light: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X