பழைய TV கதை முடிந்தது.. 41 சதவீத ஆஃபரில் 32 இன்ச் QLED டிவி.. கூகுள் டிவி ஓஎஸ்.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்?
டிஎல்சி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவி மாடல்கள் மலிவான விலைக்கு கிடைப்பதால் மார்கெட்டில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதில் டிசிஎல் வி4சி 32 இன்ச் கியூஎல்இடி டிவி 2025 எடிஷன் (TCL V4C 32 inch QLED TV 2025 Edition) மாடலானது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த டிசிஎல் கியூஎல்இடி டிவிக்கு கிடைக்கும் தள்ளுபடி மற்றும் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 41 சதவீத தள்ளுபடி போக டிசிஎல் வி4சி 32 இன்ச் கியூஎல்இடி எச்டி ரெடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் (TCL V4C 32 inch QLED HD Ready Smart Google TV 2025 Edition) கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.11.989 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.2,099 தள்ளுபடி கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த தள்ளுபடியை பெற்றால், ரூ.9,890 விலைக்கு இந்த டிசிஎல் வி4சி 32 இன்ச் கியூஎல்இடி டிவி 2025 எடிஷன் மாடலை வாங்கி கொள்ளலாம். 1 வருட வாரண்டி கொடுக்கப்பட்டு உள்ளது. வி4சி (V4C) சீரிஸ் மற்றும் 32வி4சி (32V4C) மாடலின் கீழ் வாங்கி கொள்ளலாம். கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கொண்ட மாடலாகவும் இந்த த டிசிஎல் வி4சி 32 இன்ச் கியூஎல்இடி டிவி உள்ளது.
டிசிஎல் வி4சி 32 இன்ச் கியூஎல்இடி டிவி 2025 எடிஷன் அம்சங்கள் (TCL V4C 32 inch QLED TV 2025 Edition Specifications): 32 இன்ச் (1366 x 768 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளே மற்றும் 300 நிட்ஸ் பிரைட்னஸை இந்த டிசிஎல் வி4சி டிவி கொடுத்துள்ளது. 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மல்டி வியூ மோட் (Multi View Mode), 178 டிகிரி வைடு வியூவிங் ஆங்கிள் (Wide Viewing Angle) கொடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், ஏஐபிகியூ என்ஜின் (AiPQ Engine), எச்டிஆர் 10 (HDR 10), மைக்ரோ டிம்மிங் (Micro Dimming), ஏஐ கிளாரிட்டி (Ai Clarity), டி ஸ்கிரீன் (T-Screen) மற்றும் பெசல் லெஸ் டிசைன் (Bezel Less Design) கொண்டுள்ளது. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மற்றும் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) உள்ளிட்ட இன்-பில்ட் ஓடிடி ஆப்கள் கிடைத்து உள்ளன.
கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) கொடுக்கப்பட்டு உள்ளது. 6W ஸ்பீக்கர் அவுட்புட் கொடுத்து உள்ளது. பாட்டம் சைடு ஸ்பீக்கர்களாக இருக்கிறது. டால்பி ஆடியோ (Dolby Audio) கொடுத்து உள்ளது. யூசர் (User), ஸ்டான்டர்டு, விவிட் (Vivid), ஸ்போர்ட்ஸ், மூவி (Movie) மற்றும் மியூசிக் உள்ளிட்ட ஆடியோ மோட்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரியை கொடுத்து உள்ளது.
பில்ட்-இன் வை-பை (Built-in Wi-Fi), ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring) இந்த டிசிஎல் வி4சி 32 இன்ச் கியூஎல்இடி டிவி 2025 எடிஷன் மாடலுக்கு கிடைக்கிறது. 64 பிட் குவாட் கோர் ப்ராசஸர் (Quad Core Processor) உள்ளது. 2 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), 1 யுஎஸ்பி போர்ட், 1 ஹெட்போன் ஜாக் மற்றும் ஏவி இன் கனெக்டிவிட்டிகளை கொண்டுள்ளது. ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications