வெச்சி செஞ்ச விவோ.. ரூ.23000 பட்ஜெட்ல 7200mAh பேட்டரி.. 44W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 8GB ரேம்.. எந்த மாடல்?
விவோ நிறுவனத்தின் புதிய மாடலாக விவோ விவோ டி5எக்ஸ் 5ஜி (Vivo T5x 5G) வெளியாக இருக்கிறது. இந்த செக்மெண்ட்டில் ஃபாஸ்டஸ்ட் பர்ஃபாமென்ஸ் கொண்ட மாடலாக இருக்கப் போகிறது. ஓர்ஜின்ஓஎஸ், 8 ஜிபி ரேம் மற்றும் பட்ஜெட் விவரங்களை விவோ நிறுவனமே உறுதி செய்துள்ளது. இந்த விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் விவோ டி4எக்ஸ் 5ஜி (Vivo T4x 5G) ஸ்மார்ட்போனானது பட்ஜெட் விலையில் 6500mAh பேட்டரி மற்றும் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட மாடலாக களமிறங்கியது. பட்ஜெட் பிரியர்களுக்கு ஏற்ற பீச்சர்களை கொடுத்ததால், விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால், விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மீதான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டை விவோ நிறுவனமே உறுதி செய்துள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டு, பட்ஜெட், ரேம், ஸ்டோரேஜ் உள்ளிட்ட விவரங்கள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட முக்கிய பீச்சர்களும் மார்கெட்டில் கசிந்துவிட்டன. முதலில் பிளிப்கார்ட் மைக்ரோசைட்டில் வெளியான விவரங்களை பார்க்கலாம்.
விவோ டி5எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Vivo T5x 5G Specifications): இந்த செக்மெண்ட்டில் ஃபாஸ்டஸ்ட் சிப்செட் கொண்ட மாடலாக இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் வெளியாக இருக்கிறது. ஓர்ஜின்ஓஎஸ் (OriginOS) கிடைக்க உள்ளது. ரூ.23,000 பட்ஜெட் செக்மெண்ட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த விவரங்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக உறுதியாகி இருக்கின்றன.
மார்கெட்டில் கசிந்த பீச்சர்களை பார்க்கையில், மீடியாடெக் டைமன்சிட்டி 7400 டர்போ (MediaTek Dimensity 7400 Turbo) சிப்செட் கிடைக்க உள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட உள்ளது. 7200mAh பேட்டரி மற்றும் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட மாடலாக விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது. மார்ச் மாதத்தில் வெளியாக இருக்கிறது.
விவோ டி4எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Vivo T4x 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 4nm) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஃபன்டச்ஓஎஸ் 15 (FuntouchOS 15) கொடுக்கப்பட்டு உள்ளது.
6.72 இன்ச் (2408 x 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை கொடுத்து உள்ளது. இதில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1050 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைத்துள்ளது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமராவை இந்த விவோ டி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து இருக்கிறது.
இதில் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ கேமரா மற்றும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கிடைத்து உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), IP64 ரேட்டிங் மற்றும் MIL-STD-810H சர்டிபிகேஷன் டியூரபிலிட்டி கொண்டுள்ளது. இதில் இருந்து அப்கிரேட் செய்யப்பட்ட பீச்சர்கள் விவோ டி5எக்ஸ் 5ஜி மாடலில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








