கிண்டல் அடித்தவர்களுக்கு பதிலடி! விஸ்வரூபம் எடுத்த எலான் மஸ்க்! Twitter பயனர்களே விஷயம் தெரியுமா?

|

எலான் மஸ்க் சமீபகாலமாக பல விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார். டெஸ்லா பங்கு வீழ்ச்சி, சொத்து மதிப்பு வீழ்ச்சி, Twitter-ஐ வாங்கிய பின் அவருக்கு சொந்தமான டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் போன்ற பிற நிறுவனங்களில் கவனம் செலுத்தவில்லை என்ற விமர்சனங்கள் என பல நெருக்கடிகளை மஸ்க் சந்தித்து வருகிறார். ஆனால் யார் என்ன சொன்னாலும் தனது நோக்கத்தில் உன்னிப்பாகவும் உறுதியாகவும் மஸ்க் செயல்பட்டு வருகிறார் என்பது இங்கே குறிப்பிட வேண்டிய ஒன்று.

தலைமை நிர்வாக அதிகாரி

தலைமை நிர்வாக அதிகாரி

தலைமை நிர்வாக அதிகாரியாக மஸ்க் பல நிறுவனங்களில் பொறுப்பு வகித்து வருகிறார். டெஸ்லா இன்க், ஸ்பேஸ்எக்ஸ், தி போரிங் நிறுவனம், நியூரோலிங்க் மற்றும் மஸ்க் அறக்கட்டளை என பல நிறுவனங்களில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கிறார் மஸ்க்.

பல நிறுவனங்களில் முக்கிய பொறுப்பு வகித்து வரும் மஸ்க், சமீபத்தில் டெஸ்லா நிறுவனத்தின் வருவாயில் குறிப்பிடத்தக்க அளவிலான சரிவை சந்தித்தார். இந்த நிலையில் மஸ்க் தனது நிறுவனங்களின் மூலம் வருவாய் ஈட்டுவதில் கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கிறார்.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கான விலை

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கான விலை

எலான் மஸ்க் முன்னதாகவே ட்விட்டர் ப்ளூ சேவைக்கு கட்டணம் வசூலிக்கும் முறை உறுதி செய்திருந்தாலும். தற்போது இந்த கட்டண சேவையானது வேகமாக பல நாடுகளில் விரிவடைந்து வருகிறது. ட்விட்டர் ப்ளூ டிக் சேவையானது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கு வேறுவேறு மாதிரியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பெரும்பாலான நகரங்களில் இந்த கட்டணம் இரண்டு பயனர்களுக்கும் ஒரே மாதிரியாக நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இங்குள்ள டுவிஸ்ட் என்னவென்றால் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் பயனர்களுக்கு வேறு, ட்விட்டர் இணைய பயனர்களுக்கு (web users) வேறு என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு பளூ சந்தா விலை

ஆண்ட்ராய்டு பளூ சந்தா விலை

முன்னதாக ஐஓஎஸ் பயனர்களுக்கு மட்டும் கிடைத்து வந்த ப்ளூடிக் சேவை தற்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் கிடைக்கத் தொடங்கி இருக்கிறது. ட்விட்டர் ப்ளூ சந்தா சேவைக் கட்டணம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஒரு மாதத்திற்கு $11 (தோராயமாக ரூ.900) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாகவே எதிர்பார்த்தது போல் இந்த கட்டண சேவையின் விலை ஆனது ஒவ்வொரு நாட்டிலும் மாறுபடுகிறது.

பெருமூச்சு விடும் இந்தியர்கள்

பெருமூச்சு விடும் இந்தியர்கள்

தற்போதைய நிலைப்படி ட்விட்டர் ப்ளூ சந்தா சேவை ஆனது UK, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நகரங்களில் கிடைக்கிறது. ப்ளூ சந்தா கிடைக்கும் நாடுகளின் பட்டியல் வேகமாக விரிவடைந்து வருகிறது.

இந்தியாவில் உள்ள யாரும் வருத்தப்பட வேண்டாம். காரணம் இன்னும் ட்விட்டர் ப்ளூ சந்தா சேவை இந்தியாவில் தொடங்கப்படவில்லை. ஆனால் நீண்ட காலத்திற்கு இதே நிலை நீடிக்காது.

ப்ளூ நிற டிக்

ப்ளூ நிற டிக்

ட்விட்டர் ப்ளூ சந்தா பயனர்களுக்கு பல அம்சங்கள் வழங்கப்படுகிறது என்றாலும் இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் ட்விட்டரின் ப்ளூ சந்தா உடன் ப்ளூ நிற சரிபார்ப்பு பேட்ஜ் இணைக்கப்பட்டுள்ளது.

எனவே ட்விட்டரில் ப்ளூ நிற டிக் கொண்ட அனைத்து பயனர்களும் இனி இந்த அம்சத்தை பெறுவதற்கு பணம் செலுத்த வேண்டும். இதன்கீழ் வரும் புதிய சந்தாதாரர்களும் ப்ளூ நிற டிக் பெறுவார்கள் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

ப்ளூ டிக் பிரத்யேக அம்சங்கள்

ப்ளூ டிக் பிரத்யேக அம்சங்கள்

ட்விட்டர் ப்ளூ சந்தா சேவையில் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கையில், ப்ளூ சந்தா உறுப்பினர்களுக்கு பெயருக்கு பின்னால் ப்ளூ டிக் குறி வழங்கப்படும். அதேபோல் ப்ளூ சேவை பயனர்களுக்கு undo ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

பயனர்கள் பதிவிட்ட ட்வீட்டை இதன்மூலம் undo செய்யலாம். இது எடிட் பட்டன் அல்ல என்பது நினைவில் இருக்கட்டும். ட்வீட் பதிவிட்ட பிறகும் அதை மறுபரீசலனை செய்ய இந்த அம்சம் அனுமதிக்கிறது. ஆனால் குறுகிய காலத்துக்கு மட்டுமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் ப்ளூ மெம்பர்ஷிப் பயனர்கள் 60 நிமிடங்களுக்கும் மேலான வீடியோக்களையும், 2 ஜிபி வரை அளவுள்ள வீடியோக்களை பதவேற்றலாம்.

90 நாட்கள் காலக்கெடு விதித்த ட்விட்டர்

90 நாட்கள் காலக்கெடு விதித்த ட்விட்டர்

புக்மார்க் ஃபோல்டர்கள், தனிப்பயன் பயன்பாட்டு ஐகான்கள், பிரத்யேக தீம், டாப் பதிவுகள் மற்றும் ரீடர்கள் ஆகியவை ப்ளூ சந்தா பயனர்களுக்கு கிடைக்கும் பிற குறிப்பிடத்தக்க அம்சங்கள் ஆகும்.

சரி, கணக்கை தொடங்கி பணம் செலுத்தி ப்ளூடிக் மெம்பர் ஆகிவிடலாம் என நினைத்தால் கணக்கு உருவாக்கப்பட்டு 90 நாட்களுக்கு ட்விட்டர் ப்ளூ சந்தா சேவை பெற முடியாது என கூறப்படுகிறது.

ரத்து செய்யும் உரிமை

ரத்து செய்யும் உரிமை

சந்தா செலுத்திய பின்பும், பயனர்கள் ட்விட்டரின் சேவை விதிமுறைகளை மீறினால் பணத்தை திரும்பச் செலுத்தாமல் அவர்களது ப்ளூ டிக் அடையாளத்தை ரத்து செய்யும் உரிமை ட்விட்டருக்கு இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Finally Twitter Blue Subscription Launched For Android and iOs Users: Here the Price and Exclusive special features Details.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X