ரூ.8000, ரூ.9000 இல்ல அதுக்கும் மேல.. வரலாறு காணாத விலை குறைப்பு.. Pixel 9a அடிமட்ட விலைக்கு!
கூகுளின் புதிய பிக்சல் 10ஏ (Google Pixel 10a) ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை தொடங்கியதுமே, பழைய பிக்சல் 9ஏ (Pixel 9a) ஸ்மார்ட்போனின் விலை ஆனது முன்னேப்பதும் இல்லாத அளவிற்கு கடுமையான வீழ்ச்சியை கண்டு உள்ளது. பிக்சல் 9ஏ எவ்வளவு விலை குறைந்துள்ளது? புதிய பிக்சல் 10ஏ விலை என்ன? இதோ விவரங்கள்:
பிக்சல் 9ஏ மீது ரூ.10000 விலை குறைப்பு: பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன பிளிப்கார்ட்டில், தற்போது பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன், அதன்அசல் அறிமுக விலையான ரூ.49,999 க்கு பதிலாக ரூ.10,000 நேரடி விலைக்குறைப்பை பெற்று ரூ.39,999 க்கு வாங்க கிடைக்கிறது.

கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 7 ஆண்டுகளுக்கு ஓஎஸ் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்ஸ்
- டூயல் சிம் (நானோ+இசிம்) ஆதரவு
- 60Hz மற்றும் 120Hz இடையேயான ரெஃப்ரெஷ் ரேட்
- 2700 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன்
- 6.3-இன்ச் ஆக்டுவா டிஸ்பிளே
- நான்காவது தலைமுறை டென்சர் ஜி4 சிப்
- டைட்டன் எம்2 செக்யூரிட்டி கோப்ராசசர்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 1/2-இன்ச் சென்சார், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், குளோஸ்டு-லூப் ஆட்டோஃபோகஸ் மற்றும் f/1.7 அபெர்க்ஷர் கொண்ட 48-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா (இது 8x வரை சூப்பர் ரெஸ் ஜூமையும் ஆதரிக்கிறது)
- 13 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா (இது 120 டிகிரி பீல்ட் ஆப் வியூ மற்றும் f/2.2 அபெர்க்ஷரை கொண்டுள்ளது)
- முன்பக்கத்தில் f/2.2 அபெர்க்ஷர் கொண்ட 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 5100mAh பேட்டரி
- கூகுளின் 45W பவர் அடாப்டருடன் பயன்படுத்தும்போது 23W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7.5W வயர்லெஸ் (Qi) சார்ஜிங்
- ஒரு முறை சார்ஜ் செய்தால் 30 மணிநேர பேட்டரி லைஃப்
- எக்ஸ்ட்ரீம் பேட்டரி சேவர் மோட்-ல் 100 மணிநேரம் வரை பேட்டரி லைஃப்
- இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- ஃபேஸ் அன்லாக் ஆதரவு
கூகுள் பிக்சல் 10ஏ விலை: இந்த ஸ்மார்ட்போனின் 8GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.49,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வாங்கும் போது HDFC வங்கி கிரெடிட் கார்டுடன் ரூ.3,000 வரை உடனடி கேஷ்பேக்கும், கூடுதலாக ரூ.3,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் 24 மாதங்கள் வரை வட்டி இல்லாத EMI விருப்பங்களும் கூகுள் பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போனின் மீது கிடைக்கிறது. கூகுளின் புதிய ஸ்மார்ட்போன் தற்போது பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் கூகுள் இந்தியா (Google India) ஆன்லைன் ஸ்டோர் வழியாக விற்பனை செய்யப்படுகிறது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் இதை பெர்ரி, ஃபாக், லாவெண்டர் மற்றும் அப்சிடியன் ஆகிய கலர்களில் வாங்கலாம்.
கூகுள் பிக்சல் 10ஏ முக்கிய அம்சங்கள்:
- லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (7 வருட ஓஎஸ் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்ஸ்)
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 3000 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன்
- 6.3-இன்ச் ஆக்டுவா (pOLED) டிஸ்பிளே
- டென்சர் ஜி4 சிப்செட்
- டைட்டன் எம்2 செக்யூரிட்டி கோப்ராசசர்
- 8GB ரேம் மற்றும் 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 48 மெகாபிக்சல் (f/1.7) ப்ரைமரி ஷூட்டர் (25மிமீ போக்கல் லெங்த், 1/2.0-இன்ச் சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் - OIS)
- 13 மெகாபிக்சல் (f/2.2) அல்ட்ராவைடு கேமரா (120-டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூ மற்றும் 1/3.1-இன்ச் சென்சார்)
- 13 மெகாபிக்சல் (f/2.2) செல்பீ கேமரா
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 ரேட்டிங்
- 5100mAh பேட்டரி
- 30W வயர்டு மற்றும் 10W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு
- அளவீட்டில் 153.9x73x9மிமீ
- எடையில் சுமார் 183 கிராம்


Click it and Unblock the Notifications