மறுபயன்பாடு செய்யக்கூடிய ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப் ராக்கெட்! தயாரிப்பை முடுக்கிவிடும் எலன் மஸ்க்‌‌..

|

வெகுவிரைவில் மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அழைத்து செல்லக்கூடிய ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்ஷிப் ராக்கெட் தான் இனி தனது நிறுவனத்தின் முக்கியமான பணி என்று எலோன் மஸ்க் கூறியுள்ளார்.

ழ்விற்கு ஒரு வாரம் கழித்து தனது நிறுவனத்தின் மின்னஞ்சலில்,

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற் மூலம் முதல் குழு சர்வதேச விண்வெளி நிலையத்தினை அடைந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்விற்கு ஒரு வாரம் கழித்து தனது நிறுவனத்தின் மின்னஞ்சலில், ஸ்டேர்ஷிப்பின் பணிகளை ‘வியத்தகு முறையில் உடனடியாக' துரிதப்படுத்துமாறு ஸ்பேஸ்எக்ஸ் ஊழியர்களை மஸ்க் கேட்டுக்கொண்டார்.

விண்ணில் ஏவப்பட்ட பின்னர், நாசா

மே 30 அன்று விண்ணில் ஏவப்பட்ட பின்னர், நாசா விண்வெளி வீரர்களான ராபர்ட் பெஹன்கென் மற்றும் டக்ளஸ் ஹர்லி இருவரும் 19 மணி நேர பயணத்திற்கு பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தனர்.

இந்த செயல்பாட்டில், நாசாவின் விண்வெளி விண்கல திட்டம் 2011 இல் முடிவடைந்த பின்னர், அமெரிக்காவிலிருந்து சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட முதல் குழுவாக இது அமைந்தது.

வாட்ஸ்அப்-ல் இப்படியொரு ஒரு பிரச்சனையா? உஷார் மக்களே.!வாட்ஸ்அப்-ல் இப்படியொரு ஒரு பிரச்சனையா? உஷார் மக்களே.!

 நிறுவனம் இப்போது

ஆனால் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் இப்போது மனிதர்களையும் வணிக சரக்குகளையும் ‘சந்திரன், செவ்வாய் மற்றும் அதற்கு அப்பால்' கொண்டு செல்வதற்கான அதன் முதன்மை நோக்கத்தில் கவனம் செலுத்தவுள்ளது.

 திரும்பும் அபாயத்

தயவுசெய்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் முன்னுரிமை ஸ்டார்ஷிப் என்று கருதுங்கள்( க்ரூ டிராகன் பூமிக்கு திரும்பும் அபாயத்தை குறைக்கக்கூடிய எதையும் தவிர) 'என்று மஸ்க் கடந்த அனுப்பிய சனிக்கிழமை மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார்.ஸ்டார்ஷிப் (பயணிகளை ஏற்றிச் செல்லும் பிரிவு) மற்றும் சூப்பர் ஹெவி ராக்கெட் பூஸ்டர் ஆகியவற்றைக் கொண்ட இரண்டு கட்ட விண்கலங்களைப் பயன்படுத்தி மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப ஸ்பேஸ்எக்ஸ் திட்டமிட்டுள்ளது.

இருப்பினும், ஸ்பேஸ்எக்ஸின் டெக்சாஸ் மேம்பாட்டு தளத்தில் முன்பு 'பி.எஃப்.ஆர்' என்று அழைக்கப்பட்ட ஸ்டார்ஷிப்பின் கட்டுமானத்தை முடிக்க ஸ்பேஸ்எக்ஸ் சில பணிகளை செய்யவேண்டியுள்ளது.

கடந்த மாதம் தான் ஸ்பேஸ்எக்ஸின் நான்காவது ஸ்டார்ஷிப் ராக்கெட் முன்மாதிரி டெக்ஸாஸில் உள்ள பாகா சிகா தளத்தில் நடைபெற்ற ஒரு அழுத்த பரிசோதனையை தொடர்ந்து தீப்பிழம்புகளுடன் வெடித்தது.

துண்டிக்கப்படுவதற்கான

"துரதிர்ஷ்டவசமாக விரைவாக துண்டிக்கப்படுவதற்கான ஒரு சிறிய சோதனையாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தது ஒரு பெரிய பிரச்சினையாக முடிந்தது, 'என்று மஸ்க் இந்த வெடிப்பை பற்றி குறிப்பிடுகிறார்.

இந்த வாரம் ஜூன் 10 புதன்கிழமை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் எஸ்என் 5 உடன் ஸ்பேஸ்எக்ஸ் மீண்டும் ஒரு முறை ஸ்டார்ஷிப் சோதனையை முன்னெடுக்கும்.

முழுவதும் பூர்த்தி செய்யப்பட்ட ஏவுகணை வாகனம் 2021 வரை தயாராகாது என்றாலும் இது பல வெற்றிகரமான 'ஹாப் சோதனைகளை' முடித்துவிட்டது.

 நம்மை 'பல கிரக

எலக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லாவின் உரிமையாளரான மஸ்க், நம்மை 'பல கிரக இனமாக' மாற்றுவதற்கு 2050 ஆம் ஆண்டளவில் செவ்வாய் கிரகத்தில் ஒரு மில்லியன் மனிதர்களை குடியமர்த்தும் வகையில் 1,000 ஸ்டார்ஷிப்களை உருவாக்க விரும்புகிறார்.

பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களை சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பிற்கு கொண்டு செல்வதன் மூலம் ஸ்டார்ஷிப் ஒரு வணிக விமானத்தைப் போலவே செயல்படும் என்று மஸ்க் கருதுகிறார்.


ஒவ்வொரு ஸ்டார்ஷிப்பின் ஆயுட்காலமும் 'ஒரு விமானத்தை போல' சுமார் 20 முதல் 30 ஆண்டுகள் இருக்கும் என்று மஸ்க் முன்பு கூறினார். ஒரு நாளைக்கு சுமார் மூன்று ஸ்டார்ஷிப் விமானங்கள் அல்லது வருடத்திற்கு 1,000 விமானங்கள் பூமியிலிருந்து செலுத்தப்படும். மேலும் இவை ஒவ்வொன்றும் சுமார் 90,000 பவுண்டுகள் எடைக்கு மேல் சுமக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.

ம் 2050 ஆம் ஆண்டில்

செவ்வாய் கிரகத்திற்கு 180 மில்லியன் மைல் கடநத்உ மக்களை தொடர்ந்து அழைத்து செல்வதன் மூலம், 2030 ஆம் ஆண்டுவாக்கில் அங்கு 1,000 மனிதர்களை குடியமர்த்த முடியும் என கணித்துள்ளார். மேலும் 2050 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை ஒரு மில்லியன் என்ற அளவில் இருக்கும் என்று கணித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
Scientists Invented New Method Of Generating Electricity From Shadow: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X