iPhone 17e விற்பனை ஆரம்பம்.. என்ன விலை? இதற்கு பதிலாக வேறு எந்த Android போனை வாங்கலாம்?
ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் லேட்டஸ்ட் பட்ஜெட் விலை ஐபோன் ஆன ஐபோன் 17இ (iPhone 17e) மாடலின் இந்திய விற்பனை இன்று (மார்ச் 11) முதல் தொடங்குகிறது. ஐபோன் 16இ க்கும் இதற்கும் என்ன வேறுபாடு? இதற்கு பதிலாக வேறெந்தெ ஆண்ட்ராய்டு போனை வாங்கலாம்? ஐபோன் 17இ விலை என்ன? விரிவான அம்சங்கள் என்னென்ன? இதோ விவரங்கள்:
புதிய ஐபோன் 17இ VS பழைய ஐபோன் 16இ: மாடல் பெயர் குறிப்பிடுவது போலவே ஐபோன் 17ஏ ஆனது கடந்த ஆண்டு அறிமுகமான ஐபோன் 16இ மாடலுக்கு அடுத்தபடியாக வரும் மாடலாகும். ஆனால் புதிய ஏ19 சிப், மேக்ஃசேப் ஆதரவு மற்றும் செராமிக் ஷீல்ட் டிஸ்ப்ளே ப்ரொடெக்ஷன் உள்ளிட்ட சில குறிப்பிடத்தக்க அப்கிரேட்களை பெற்றுள்ளது.

ஆனாலும் கூட புதிய ஐபோன் 17இ இன்னுமும் 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.1-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை தான் கொண்டுள்ளது, அதில் நாட்ச் டிசைனும் உ ள்ளது. மேலும் இது சிங்கிள் 48-மெகாபிக்சல் ரியர் கேமராவுடன் வருகிறது. நல்ல விஷயம் என்னவென்றால் ஐபோன் 17இ 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனில் தொடங்குகிறது. நினைவூட்டும் வண்ணம் ஐபோன் 16இ மாடலை விட இரண்டு மடங்கு அதிக ஸ்டோரேஜாகும்.
ஐபோன் 17இ க்கு பதிலாக வேறு என்னென்ன ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை வாங்கலாம்?
1. கூகுள் பிக்சல் 10ஏ (Google Pixel 10a) - ரூ.49,999 க்கு வாங்க கிடைக்கிறது
2. விவோ எக்ஸ்200டி (Vivo X200T) - ரூ.59,999 க்கு வாங்க கிடைக்கிறது
3. மோட்டோரோலா சிக்னேச்சர் (Motorola Signature) - பிப்கார்ட்டில் ரூ.59,999 க்கு வாங்க கிடைக்கிறது
4. சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ (Samsung Galaxy S25 FE) - விஜய் சேல்ஸ்-ல் ரூ.71,999 க்கு வாங்க கிடைக்கிறது
5. ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R) - விஜய் சேல்ஸ்-ல் ரூ.47,999 க்கு வாங்க கிடைக்கிறது
6. ஐக்யூ 15ஆர் (iQOO 15R) - ரூ.44,999 க்கு வாங்க கிடைக்கிறது
ஐபோன் 17இ மாடலின் விரிவான அம்சங்கள்: டூயல் சிம் (நானோ+இசிம்) ஆதரவுடன் வருமாம் ஐபோன் 17இ மாடலானது ஐஓஎஸ் 26 கொண்டு இயங்குகிறது. இது ஐபோன் 16இ மாடலை போன்ற அதே 60ஹெர்ட்ஸ் 6.1-இன்ச் சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது ட்ரூ டோன் மற்றும் 800 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸை கொண்டுள்ளது.
முன்னரே குறிப்பிட்டபடி ஐபோன் 17இ மாடலானது செராமிக் ஷீல்ட் 2 பாதுகாப்போடு வருகிறது. இது ஐபோன் 16இ மாடலில் உள்ள கிளாஸ் உடன் ஒப்பிடும்போது 3 மடங்கு சிறந்த கீறல் எதிர்ப்பை வழங்குவதாக கூறப்படுகிறது. சிப்செட்டை பொறுத்தவரை இது ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய ஏ19 சிப் மூலம் இயங்குகிறது
இது 8ஜிபி ரேம்-ஐ கொண்டுள்ளது மற்றும் இது 256ஜிபி மற்றும் 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஐபோன் 17இ மாடல் கடந்த ஆண்டு மாடலை போலவே தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான அதே ஐபி68 ரேட்டிங்கை கொண்டுள்ளது. இது ஒரு ஆக்ஷன் பட்டனையும் கொண்டுள்ளது மற்றும் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் அம்சங்களையும் ஆதரிக்கிறது.
கேமராக்களை பொறுத்தவரை ஐபோன் 17இ மாடலானது எப்/1.6 அபெர்க்ஷர் உடனான 48 மெகாபிக்சல் சிங்கிள் ரியர் கேமரா கொண்டுள்ளது. இது ஐபோன் 16இ மாடலில் உள்ளதை போலவே தெரிகிறது. இதனால் 24 மெகாபிக்சல் மற்றும் 48 மெகாபிக்சல் படங்களை எடுக்க முடியும், மேலும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனையும் ஆதரிக்கிறது.
கூடவே ஐபோன் 17இ மாடல் ஆனது "ஆப்டிகல் குவாலிட்டி" 2எக்ஸ் ஜூமையும் ஆதரிக்கிறது. இது 12 மெகாபிக்சல் படங்களை வழங்க இன்-சென்சார் க்ராப்பை பயன்படுத்துவதாக ஆப்பிள் கூறுகிறது. முன்பக்கத்தில், இது எப்/1.9 அபெர்க்ஷர் உடனான 12 மெகாபிக்சல் ட்ரூடெப்த் செல்பீ கேமரா உள்ளது
சுவாரசியமாக ஆப்பிள் அதன் ஐபோன் 17இ மாடலில் மேக்சேப்-க்கான ஆதரவை சேர்த்துள்ளது, இது ஐபோன் 16இ "காணாமல்" போன முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். ஐபோன் 17இ மாடலை - இணக்கமான 20W சார்ஜர் (வயர்டு) மற்றும் 7.5W மேக்சேப் (வயர்லெஸ்) சார்ஜரை பயன்படுத்தி சார்ஜ் செய்யலாம். கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை இது 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத் 5.3, என்எப்சி, ஜிபிஎஸ், க்ளோனாஸ், கலிலியோ, பைடூ மற்றும் நாவிக் ஆகியவைகளை ஆதரிக்கிறது.
ஐபோன் 17இ விலை விவரங்கள்: இந்தியாவில் ஐபோன் 17இ மாடலின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்தியாவில் ஐபோன் 17இ மாடலின் பேஸிக் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.64,900 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மறுகையில் உள்ள 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.84,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
புதிய ஐபோன் 17இ மாடல் மொத்தம் மூன்று வண்ணங்களில் விற்கப்படும்: பிளாக், சாஃப்ட் பிங்க் மற்றும் ஒயிட். இது இன்று (மார்ச் 11 ஆம் தேதி) முதல் ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம், முக்கிய இகாமர்ஸ் வலைதளங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்கள் வழியாக விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications








