Just In
- 5 hrs ago
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- 5 hrs ago
வெறும் 15 ரூபாய் NFC ஸ்டிக்கர் இத்தனை வேலையை செய்யுமா? வீட்டயே ஸ்மார்ட்டாக மாற்றலாமா?
- 6 hrs ago
உங்களிடம் பழைய போன் இருக்கிறதா? தூசித் தட்டி எடுக்க நேரம் வந்துருச்சு! விஷயம் தெரியுமா?
- 7 hrs ago
iPhone 15 சீரீஸ்: மொத்தம் 4 மாடல்கள்.. அனைத்திலுமே "இந்த" அம்சம் இருக்கும்.. என்னது அது?
Don't Miss
- News
பிபிசி ஆவணப்படம் பார்த்த மாணவர்களை கைது செய்வது கருத்துரிமைக்கு எதிரானது.. வேல்முருகன் ஆவேசம்!
- Sports
உலக கோப்பை ஹாக்கி.. வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த இந்தியா.. 9வது இடத்தை பிடித்தது
- Movies
AK 62 அப்டேட்: விக்கிக்காக சமரசம் பேசினாரா நயன்..? ஆனாலும் லைகா கொடுத்த ரெட் சிக்னல்
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
யாரு சொன்னது ஓசோன் ஓட்டைய அடைக்க முடியாதுனு.! அடச்சுட்டோம் மாறா.! இனி பூமிக்கு அழிவு இல்ல.!
வாகன பயன்பாடு பெருக்கத்தால் ஏற்படும் காற்று மாசு, தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக வீட்டு உபயோகப் பொருட்களின் பயன்பாடு அதிகரிப்பு போன்றவற்றால் - கடந்த 1970 முதல் ஓசோன் படலம் (Ozone Layer) பாதிக்கப்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.! இந்த ஓசோன் ஓட்டை காரணமாக, பூமி கொஞ்சம்-கொஞ்சமாக அழிந்து வருகிறது என்பதும் நீங்கள் அறிந்த ஒன்று தான்.!

உடம்புக்கு சென்ட் அடிச்சே ஓசோன்ல ஓட்டைய போட்டுட்டோமா?
வீட்டில் இருக்கும் பிரிட்ஜ், ஏர் கண்டிஷனர் (Air Conditioner), அன்றாடம் நாம் பயன்படுத்தும் பெர்ஃப்யூம் (Perfume) ஆகியவற்றில் இருந்து வெளிவரும் குளோரோ ஃப்ளோரோ கார்பன் (Chloro Fluoro Carbon, CFC) என்னும் வேதிப்பொருள் ஓசோன் படலத்தை பாதித்து அதில் ஓட்டையை உருவாக்குகிறது.
எனவே மக்கள் அதன் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்பதை பல பேர் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம்.

பூமியின் ஓசோனில் ஓட்டை இருப்பது எப்போது தெரிய வந்தது?
தொழில்நுட்ப வளர்ச்சியின் ஆரம்பக் காலத்தில், இந்த சிக்கலை பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் அனைவரும் பூமியின் ஓசோன் (Earth's Ozone Layer) படலத்தைச் சேதப்படுத்தி வந்தோம்.
பிறகு, இதில் இருக்கும் பிரச்சனையை கண்டறிந்து, அதற்கான மாற்று என்ன என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் யோசிக்க ஆரம்பித்தனர்.
1985 ஆம் ஆண்டு மே மாதம் ஆராய்ச்சியாளர் ஒருவர் ஓசோன் படலத்தில் உருவான முதல் ஓட்டையை (Ozone hole) பற்றி கண்டறிந்து ஆய்வறிக்கை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மான்ட்ரியல் புரோட்டகால் (Montreal Protocol) என்றால் என்னனு தெரியுமா?
அதன் பிறகு தான் குளோரோ ஃப்ளோரோ கார்பன் (CFC) மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்பு பற்றித் தெரிய வந்தது.. உலகில் உள்ள 29 நாடுகள் - குளோரோ ஃபளோரோ கார்பனை குறைவாக வெளியிடும் சாதனங்களை உருவாக்க முடிவு செய்தது.
குளோரோ ஃப்ளோரோ கார்பன் வெளியீட்டைத் தவிர்க்கும் இந்த நோக்கத்திற்கு மான்ட்ரியல் புரோட்டகால் (Montreal Protocol) என்ற பெயரும் இட்டனர்.

ஓசோன் லேயரை கொஞ்சம் - கொஞ்சமாகச் சரி செய்ய முடியுமா?
இந்தப் புரோட்டோகால் காரணமாக ஓசோன் லேயர் கொஞ்சம் - கொஞ்சமாகச் சரியாகி வருகிறது என்று கூறப்படுகிறது.
பொதுவாகச் சூரியனிலிருந்து பலவிதமான கதிர்வீச்சுகள் வெளியிடப்படும் - அவற்றில் ஒன்று தான் மனிதர்களுக்கு ஆபத்தான புற ஊதாக்கதிர்கள்.
இவை மனிதர்களின் தோளில் நேரடியாகப் படும் பொழுது பல எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்பதே உண்மையாக இருக்கிறது.

ஓசோன் படலம் இல்லையென்றால் மனிதர்களுக்கு என்னவாகும்?
மனிதர்களை, அந்த ஆபத்தான புற ஊதா கதிர்களிலிருந்து (UV Radiation) காப்பாற்றும் காவலன் தான் இந்த ஓசோன் படலம். இவை இயற்கையாகவே உருவாக்கப்பட்டவை.
குளோரோ ஃப்ளோரோ கார்பன் வெளியீட்டின் மூலம் ஓசோன் படலத்தில் பாதிப்பு ஏற்பட்டு அதில் ஓட்டை விழுகிறது.
குளோரோ ஃப்ளோரோ கார்பனின் வெளியீடு அதிகரிக்கும் பொழுது அந்த ஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை பெரிதாகி, சூரியனிலிருந்து வெளியிடப்படும் புற ஊதா கதிர்கள் நேரடியாகப் பூமியை அடையும் அபாயம் உள்ளது.

ஓசோன் படலம் சரியாகி வருகிறதா? மனிதர்கள் எடுத்த முயற்சியால் இது சாத்தியமானதா?
1980-களில் ஓசோனில் ஏற்படும் ஓட்டைகளை பற்றிக் கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள் அதற்கான தீர்வாக குளோரோ ஃப்ளோரோ கார்பன் வெளியீட்டை தவிர்க்க ஆலோசனை கூற, அதை உலக நாடுகள் ஏற்றுக் கொண்டு செயல்படுத்த ஆரம்பித்துள்ளது.
அதன் விளைவாக இன்று, ஓசோன் படலம் சிறிது சிறிதாக சரியாகி வருகிறது என்று ஐக்கிய நாடுகள் அறிக்கை வெளியிட்டுள்ளது. கேட்கவே நிம்மதியாக இருக்கிறதல்லவா.!

பூமியின் காலநிலை மாற்றம் மற்றும் பாதிப்பிற்கு ஓசோன் தான் காரணமா?
உலகில் பல்வேறு காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டதற்கு ஓசோன் படலத்தில் உருவான ஓட்டையையும் ஒரு காரணம் என்றே கூறலாம்.
அதிக வெப்பம், எதிர்பாராத நேரத்தில் மழை, எதிர்பார்த்த நேரத்தில் மழையின்மை இவை அனைத்துமே மனிதனின் செயல்பாடுகளால் ஏற்பட்ட விளைவுகள் ஆகும்.
இவற்றிற்கு ஓசோன் படலத்தில் உருவான ஓட்டையும் ஒரு முக்கிய காரணம்.

ஓசோன் ஓட்டைய அடச்சுட்டோம் மாறா.! மனிதர்களுக்கு பாராட்டு.!
நம்முடைய செயல்பாடு இயற்கையே பாதிக்கும் நிலையில் அதற்கான தீர்வை கண்டறிந்து, அதனைச் செயல்படுத்தி, இயற்கையைச் சீர் செய்யும் முயற்சியை உலக நாடுகள் எடுத்த முயற்சியில் இப்போது நாம் வெற்றியையும் கண்டு வருகிறோம் என்பது மிகவும் பாராட்டுக்குரிய ஒரு செயலாகும்.
தவறு செய்வது இயல்பு தான்.. ஆனால், அந்த தவறை நாம் எப்படிச் சரி செய்ய போகிறோம் என்பதே முக்கியம்.

இந்த உண்மையை யாராலும் மறுக்கவே முடியாது.!
அப்படி நாம் இந்த கிரகத்திற்குச் செய்த மிகப்பெரிய தவறை கண்டறிந்தது மட்டுமின்றி, அதற்கான காரணத்தையும் கண்டறிந்து, அதனைச் சரி செய்து, இப்போது சூழ்நிலையைச் சீரமைத்துள்ளதற்கான இந்த பாராட்டு அனைத்து தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த மனித குலத்திற்கே சேரும்.
இந்த கிரகத்திற்குச் சிக்கலும் நாமே.! தீர்வும் நாமே என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

பூமியின் ஓசோன் ஓட்டை எப்போது முழுமையாக மூடப்படும் தெரியுமா?
இப்போது கடைப்பிடிக்கும் செயல்பாடுகளை தொடர்ந்தால் 2040-ல் ஓசோன் படலம் முழுமையாக சீரடைந்துவிடும் என்றும், 1980-களுக்கு முன் இருந்தது போல ஓசோன் படலம் முழுமையாக மாறும் என்று ஐக்கிய நாடுகள் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஆர்டிக் மற்றும் அண்டார்டிக் பகுதிகளில் முறையே 2045 மற்றும் 2066 ஆம் ஆண்டுகளில் ஓசோன் படலம் முழுமையாக சீரமையும் என்று கணிக்கப்படுகிறது.

அழிவில் இருந்த பூமி கிரகம் சீராகிறதா? குட் நியூஸ் மனிதர்களே.!
அண்டார்டிக் பகுதிகளில் மற்ற இடங்களை குறிப்பிடும் பொழுது ஓசோன் படலத்தில் இருக்கும் ஓட்டையின் அளவு பெரியதாக இருக்குமாம்.
இதற்கு அந்தப் பகுதிகளில் இருக்கும் வானிலையே முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
இதன் காரணமாகத் தான் அண்டார்டிக் பகுதியில் ஓசோன் படலத்தில் இருக்கும் ஓட்டை அடையக் கூடுதல் கால அளவு தேவைப்படுகிறது.
அழிவில் இருந்த பூமி கிரகம் இப்போது தன்னை சீரமைக்கும் பணியில் இயங்கி வருகிறது என்பது சந்தோஷமான விஷயமாகும்.

ஓசோன்ல ஓட்டைய போட்டது யாரு? சரி செஞ்சது யாரு?
இப்பொழுது ஓசோனில் உள்ள ஓட்டை சீரமைந்து வருவது மனிதனின் வாழ்க்கையைச் சிறந்த சுற்றுச்சூழலுடன் வாழ உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இனி ''ஓசோனில் ஏற்கனவே பெரிய ஓட்டைய போட்டுட்டீங்கனு யாரும் சொன்னால், அதைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைச்சுட்டு இருக்கோம்ப்பா தம்பி''-னு சொல்லிடுங்க.!
இந்த தகவலை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அவர்களும் அவர்களால் முடிந்த நன்மைகளை இந்த பூமி கிரகத்திற்கு செய்யட்டும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470