Just In
- 3 hrs ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 6 hrs ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 6 hrs ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 7 hrs ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
Don't Miss
- Movies
டான்சர் ரமேஷ் தற்கொலையில் சந்தேகம்.. அவரை தேடி வந்த 4 பேர் யார்? வெளியான அதிர்ச்சி தகவல்!
- News
10 ஆண்டுகளில் 15வது முறை.. குஜராத்தில் கசிந்த வினாத்தாள்.. கடைசி நேரத்தில் போட்டித் தேர்வு ரத்து!
- Finance
எல்ஐசி, எஸ்பிஐ, மியூச்சுவல் பண்ட்களுக்கும் பிரச்சனையா.. முதலீடு என்னவாகும்.. அதானியால் கஷ்டகாலம்!
- Lifestyle
ஆண்களின் நிம்மதியை கெடுக்கும் அவர்களிடம் இருக்கும் பாதுகாப்பற்ற உணர்வுகள் என்ன தெரியுமா?
- Sports
தீபக் ஹூடா சரிப்பட்டு வர மாட்டாரு.. இந்திய அணியில் மாற்றம் தேவை.. தினேஷ் கார்த்திக் வலியுறுத்தல்
- Automobiles
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கான செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல இவ்ளோ
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
PhonePe, Google Pay, Paytm யூஸ் பண்றீங்களா? அப்போ இனிமேல் "இதை" கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க.!
கூகுள் பே, பேடிஎம், போன்பே செயலிகளை இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்த துவங்கிவிட்டனர். குறிப்பாக முக்கிய நகரங்கள் முதல் துவங்கி, உள்ளூர் சந்தைகள் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் ஆதரிக்கத் துவங்கியுள்ளனர்.

UPI செயலிகள்
அதேபோல் இந்த செயலிகள் மூலம் ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, கடைக்குச் சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கும் ஸ்கேன் செய்து பணம் வழங்கும் முறை இப்போது அதிகரித்து வருகிறது. மேலும் மின்சார கட்டணத்தைக் கூட இந்த UPI செயலிகள் மூலம் செலுத்த முடியும். ஆனாலும் தற்போது Google Pay, Paytm மற்றும் PhonePe ஆகியவை UPIஐப்பயன்படுத்தி பணத்தைப் பரிமாற்றக்கூடிய வெவ்வேறு அதிகபட்ச வரம்புகளை அமைத்துள்ளன. இப்போது அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

அமேசான் பே
ஒரு நாளில் ரூ.1 லட்சம் வரையிலான UPI பரிவர்த்தனைகளை Amazon அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அமேசான் பே செயலியில் பதிவு செய்த முதல் 24 மணிநேரத்திற்கு அதிகபட்ச வரம்பு ரூ.5000-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கூகுள் பே
அமேசான் பே செயலியைப் போலவே கூகுள் பே செயலியும் ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளை அனுமதிக்கிறது. ஆனால் ஒரு நாளைக்குச் செய்யப்படும் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையில் ஒரு வரம்பு உள்ளது. அதாவது இதில் ஒரே நாளில் 10 முறைக்கு மேல் பணம் அனுப்ப முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

பேடிஎம் செயலி
பேடிஎஎம் செயலி ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளை அனுமதிக்கிறது. ஆனால் பேடிஎம் செயலி ஒரு மணி நேரத்தில் ரூ.20,000 வரையிலான பரிவர்த்தனைகளை அனுமதிக்கிறது. அதேபோல் இதில் ஒரு மணி நேரத்திற்கு 5 பரிவர்த்தனைகள் மற்றும் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 20 பரிவர்த்தனைகள் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போன்பே
போன்பே பயனர்களும் ஒரு நாளில் ரூ.1 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளைச் செய்ய முடியும். ஆனால் இந்த செயலில் வங்கியின் கொள்கைகளைப் பொறுத்து ஒரு நபர் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 10 அல்லது 20 பரிவர்த்தனைகளை மட்டுமே செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

7 சதவீதம் அதிகம்
அதேபோல் இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் யுபிஐ பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 782 கோடியாக அதிகரித்துள்ளது. இது அதற்கு முந்தைய நவம்பர் மாதத்தை விட 7 சதவீதம் அதிகம் ஆகும்.

76 சதவீதம் அதிகரித்துள்ளது
குறிப்பாக ஒட்டுமொத்தமாக 2022-ம் ஆண்டு யுபிஐ மூலம் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 7404 கோடியாகவும், பரிவர்த்தனை செய்யப்பட்ட தொகை ரூ.125 லட்சம் கோடியாகவும் உள்ளது. எனவே இதன்படி கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் 2022-ம் ஆண்டு பரிவர்த்தனை எண்ணிக்கை 90 சதவீதமும், பரிவர்த்தனை தொகை 76 சதவீதமும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470