Home
News

புதிய 6 மணி நேர SIM கார்டு ரூல்ஸ்.. மார்ச் 1 முதல் அமல்.. சிங்கிள், டூயல், இசிம் எல்லாத்துக்கும் பொருந்தும்!

இந்தியாவில், வாட்ஸ்அப் (WhatsApp) செயலிக்கான புதிய விதிகள் மார்ச் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. மார்ச் 1 ஆம் தேதி முதல் - இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வாட்ஸ்அப் அக்கவுண்ட்களுமே ஆக்டிவ் ஆக உள்ள சிம் கார்டுகளுடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் இந்த புதிய விதிமுறைகளின் கீழ், வாட்ஸ்அப் ஆனது ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் தானாகவே லாக்அவுட் ஆக வேண்டும். இதன் மூலம் ஆக்டிவ் ஆக இல்லாத டிவைஸ்கள் தானாகவே லாக்அவுட் செய்யப்படும் மற்றும் அந்த டிவைஸ்களில் பதிவுசெய்யப்பட்ட சிம் கார்ட் இல்லை என்றால், அவைகள் வாட்ஸ்அப்பில் வேலை செய்வது நிறுத்தப்படும்.

புதிய 6 மணி நேர SIM கார்டு ரூல்ஸ்.. மார்ச் 1 முதல் அமல்!

எனவே மார்ச் 1 ஆம் தேதி முதல், நீங்கள் மீண்டும் மீண்டும் வாட்ஸ்அப்பிலிருந்து லாக் அவுட் ஆகினால் - அதை ஏதோவொரு டெக்னீக்கல் கோளாறு என்று நினைக்க வேண்டாம்; அது ஒரு புதிய அரசாங்க விதி ஆகும். தேசிய பாதுகாப்பு கவலைகள் காரணமாகவே வாட்ஸ்அப் தளமானது இனிமேல் - ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும் ஒரு முறை வாட்ஸ்அப் வெப்பில் இருந்து ஒவ்வொரு இந்திய பயனரையும் தானாகவே லாக்அவுட் செய்யும்.

இந்த நடவடிக்கை நவம்பர் 2025 இல் தொலைத்தொடர்புத் துறை (DoT) வெளியிட்ட சிம்-பைண்டிங் (SIM Binding) உத்தரவின் ஒரு பகுதியாகும். இந்த உத்தரவுடன் இணக்கமாக - இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளங்களுக்கான காலக்கெடு பிப்ரவரி 28, 2026 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் அரசாங்கத்தின் கூற்றுப்படி, இந்த காலக்கெடுவிற்கு எந்த நீட்டிப்பும் இருக்காது. ஆக புதிய விதிகள் ஆனது மார்ச் 1 ஆம் முதல் கட்டாயமாக அமலுக்கு வரும்.

இந்த புதிய விதிகளின் கீழ், உங்கள் சிம் கார்டை நீங்கள் மாற்றினாலோ அல்லது செயலிழக்க (Deactivate) செய்தாலோ, மறு சரிபார்ப்பு செய்யப்படும் வரை நீங்கள் வாட்ஸ்அப்பிற்கான அணுகலை இழப்பீர்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த மாற்றம் - டூயல் சிம்கள் அல்லது இசிம் (eSIM) கார்டுகளை பயன்படுத்துபவர்களுக்கும், அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்களுக்கும் அல்லது பல டிவைஸ்களில் ஒரே வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை பயன்படுத்துபவர்களுக்கும் இது பெரிய சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

சிம் பைண்டிங் என்றால் என்ன? இந்திய அரசாங்கத்தின் புதிய விதி - ஒரு வாட்ஸ்அப் அக்கவுண்ட் ஆனது அந்த அக்கவுண்ட்டை பதிவு செய்ய பயன்படுத்தப்படும் சிம் கார்டுடன் தொடர்ந்து இணைக்கப்பட்டிருப்பதையும், அந்த சிம் கார்டு ஆனது குறிப்பிட்ட டிவைஸில் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்கிறது.

அதாவது, உங்கள் வாட்ஸ்அப் நம்பர் ஒரு குறிப்பிட்ட சிம்மில் பதிவு செய்யப்பட்டிருந்தால், அந்த சிம் ஆக்டிவ் ஆக இருக்க வேண்டும் மற்றும் உங்கள் ஸ்மார்ட்போனில் செருகப்பட்டு இருக்க வேண்டும். அது அகற்றப்பட்டால், மாற்றப்பட்டால் அல்லது செயலற்றதாக இருந்தால், செயலிழந்தால், வாட்ஸ்அப் சேவை செயலிழந்து போகலாம்.

இந்திய அரசாங்கத்தின் கூற்றுப்படி, இந்த நடவடிக்கை மிகவும் அவசியமான ஒன்றாகும், ஏனெனில் சில மெசேஜிங் சேவைகள் ஆனது சிம் கார்டு ஆனது இந்தியாவிற்கு வெளியே எடுக்கப்பட்ட பிறகும் அல்லது பயன்படுத்தப்பட்ட பிறகும் கூட இயங்குகின்றன. இந்த "பாதுகாப்பு ஓட்டையை" தான் சைபர் மோசடி செய்பவர்கள் தவறாக பயன்படுத்துவதாக தொடர்புடைய அதிகாரிகள் நம்புகிறார்கள்.

இந்திய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் - டிஜிட்டல் மோசடியை எதிர்த்து போராடுவதை நோக்கமாக கொண்டவை என்று டாட் கூறுகிறது. டிஜிட்டல் மோசடிகளால் இந்தியாவுக்கு ஆண்டுக்கு ₹22,800 கோடி இழப்பு ஏற்படுகிறது என்று தரவுகள் கூறுகின்றன. வணிக சிரமங்களை விட தேசிய பாதுகாப்பு குறித்த கவலைகள் மிக முக்கியமானவை என்றும், 6 மணி நேர லாக்-அவுட் விதி ஆனது வாட்ஸ்அப் வெப் அல்லது டெஸ்க்டாப் அணுகல் போன்ற கூடுதல் அமர்வுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் ஆணைய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியதாக கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
WhatsApp 6 hours logout New SIM Binding Rules From Indian Govt Came to Effect From March 1
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X