நீ ஐபோனா இரு, ஆண்ட்ராய்டு போனா இரு.. இனி இந்தியாவுக்குள் வர இது கட்டாயம்.! இதுதான் கெடு!

|

மொபைல்கள் உள்ளிட்ட பிற அனைத்து சாதனங்களுக்கும் பொதுவான சார்ஜிங் போர்ட்களை கொண்டு வர வேண்டும் என இந்திய அரசு கட்டாயமாக்கி இருக்கிறது. மார்ச் 2025க்குள் அனைத்து மின்னணு சாதனங்களுக்கும் USB Type C சார்ஜிங் போர்ட்டை OEMகள் பயன்படுத்த வேண்டும் என இந்திய அரசு அறிவித்துள்ளது.

USB Type-C போர்ட்

USB Type-C போர்ட்

தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்து மின்னணு சாதனங்களையும் USB Type-C போர்ட்கள் உடன் தொடங்க வேண்டும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய அரசு அறிவிப்பால் ஆப்பிள் நிறுவனம் மிகவும் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து போன்களுக்கும் டைப்-சி சார்ஜிங் போர்ட்

அனைத்து போன்களுக்கும் டைப்-சி சார்ஜிங் போர்ட்

அனைத்து மொபைல் போன்களிலும் யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் கொண்டு வர வேண்டும் என இந்திய அரசு அறிவித்திருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் முன்னதாக இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில் தற்போது இந்திய அரசு இதேமுறையை வலியுறுத்தி இருக்கிறது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பிடுகையில் மொபைல் நிறுவனங்களுக்கு இந்திய அரசு அதிக அவகாசம் அளித்துள்ளது.

கெடு விதித்த இந்திய அரசு

கெடு விதித்த இந்திய அரசு

BIS Type-C சார்ஜர்களுக்கான தரநிலைகளை அறிவித்துள்ளது. மொபைல்கள் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் அக்சஸரிஸ்கள் ஆகிய இரண்டுக்கும் பொதுவான சார்ஜிங் போர்ட்களை கொண்டு வர வேண்டும் என நுகர்வோர் விவகாரங்கள் துறையின் செயலாளர் ரோஹித் குமார் சிங் கூறினார்.

இதுகுறித்த பிசினஸ் ஸ்டாண்டர்டின் அறிக்கைப்படி, மின் கழிவுகளை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் டிசம்பர் 2024க்குள் அனைத்து எலக்ட்ரானிக் சாதனங்களும் USB டைப் சி டைப்-சி சார்ஜிங் போர்ட்டாக OEMகள் மாற்ற வேண்டும் என அறிவித்துள்ளது. இதே அறிவிப்பை இந்திய அரசும் அறிவித்திருக்கிறது. ஆனால் மார்ச் 2025 வரை கால அவகாசம் வழங்கி இருக்கிறது.

உலகளவில் கட்டாயமாக்கப்படலாம்..

உலகளவில் கட்டாயமாக்கப்படலாம்..

ஐரோப்பிய ஒன்றியம், இந்திய அரசாங்கம் என தொடர்ச்சியாக பொதுவான சார்ஜிங் போர்ட்களை பயன்படுத்த வேண்டும் என அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. மின்னணு உற்பத்தியாளர்கள் உலகளாவிய ஒருங்கிணைந்த விநியோகச் சங்கிலியைக் கொண்டிருப்பதால் யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட்களை பயன்படுத்துவது உலகளவில் கட்டாயமாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோனுக்கும் இது கட்டாயம்

ஐபோனுக்கும் இது கட்டாயம்

இந்த அறிவிப்பால் ஆப்பிள் மிகவும் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், பல ஆண்டுகளாக ஐபோன்களில் Lightning போர்ட்கள் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே ஆப்பிள் ஐபோன் 15 தொடரை நிறுவனம் யுஎஸ்பி டைப்-சி போர்ட் உடன் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மின் கழிவுகளை குறைக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் வெவ்வேறு சார்ஜிங் போர்ட் என்ற முறை இதன்மூலம் அழிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவான சார்ஜிங் போர்ட் என்ற உத்தரவுக்கு இணங்குவதாக ஆப்பிள் ஏற்கனவே உறுதிப்படுத்தி உள்ளது.

எதற்கு ஒரே சார்ஜிங் போர்ட்..

எதற்கு ஒரே சார்ஜிங் போர்ட்..

இந்தியத் தர நிர்ணய பணியகம் (Bureau of Indian Standards) யூஎஸ்பி டைப்-சி போர்ட் இந்தியாவில் கட்டாயமாக்க வேண்டும் என முன்னதாகவே வலியுறுத்தியது. அதன்படி தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. நுகர்வோர் விவகாரங்கள் துறையின் செயலாளர் ரோஹித் குமார் சிங், மின்னணு கழிவுகளை குறைக்கும் விதமாகவும், மக்கள் பல சார்ஜர்கள் வாங்குவதை தவிர்க்கும் விதமாகவும் இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார்.

பொதுவான சார்ஜிங் போர்ட்

பொதுவான சார்ஜிங் போர்ட்

பொதுவான சார்ஜிங் போர்ட் என்பது ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமில்லை ஸ்மார்ட்வாட்ச், அக்சஸரீஸ்கள் என அனைத்துக்கும் யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் தான் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை எப்படி செயலில் கொண்டு வருவது என இந்திய தொழில்நுட்ப நிறுவனமான கான்பூர் ஐஐடி-யில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அகற்றக்கூடிய வகையில் பேட்டரி

அகற்றக்கூடிய வகையில் பேட்டரி

மின் கழிவுகளை குறைக்கும் நோக்கில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் பேட்டரி அகற்றக்கூடிய வகையில் இருக்க வேண்டும் என்ற புதிய விதிமுறை ஐரோப்பாவில் கொண்டு வருவதற்கு முயற்சிகள் நடந்து வருகிறது. அதாவது போன்களில் பேட்டரியானது அதனுள்ளயே இன்பில்டாக உள்ளது. எனவே பேட்டரியில் பிரச்சனை அல்லது பேட்டரி ஆயுள் குறைந்தால் மொத்தமாக ஸ்மார்ட்போனையே மாற்ற வேண்டிய நிலைமை உள்ளது.

ஸ்மார்ட்போனை இனி மாற்ற வேண்டாம்

ஸ்மார்ட்போனை இனி மாற்ற வேண்டாம்

இதை சரிசெய்வதற்கென, ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்படும் பேட்டரி ஆனது அகற்றி, மாற்றும் வகையில் இருக்க வேண்டும் எனவும், ஒரு வேளை பேட்டரி ஆயுள் குறைந்துவிட்டால், பேட்டரியை மட்டும் தனியாக மாற்றும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என்றும் விரைவில் வலியுறுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Common Charging Ports For Mobile and all Electronic Devices by March 2025: Indian Government

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X