Home
Gadgets

அடிச்சான் பாரு ஆப்பிள்.. iPad Air M4 அறிமுகம்.. 1TB மெமரி.. 12MP கேமரா.. இந்திய விலை எப்படி?

இந்திய மார்கெட்டில் ஆப்பிள் எம்4 சிப்செட்டுடன் ஐபேட் ஏர் (iPad Air) மாடல் அறிமுகமாகி இருக்கிறது. 12 ஜிபி ரேம், 1 டிபி மெமரி மட்டுல்லாமல், லிக்விட் ரெடினா டிஸ்பிளே, மீடியா என்ஜின், ஆப்பிள் இன்டலிஜென்ஸ் உள்ளிட்ட பீச்சர்களை கொடுத்துள்ளது. இந்த ஐபேட் ஏர் எம்4 சிப்செட் மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஐபேட் ஏர் 8ஆவது ஜென் 2026 அம்சங்கள் (iPad Air 8th Gen 2026 Specifications): 11 இன்ச் (2360 x 1640 பிக்சல்கள்) எல்இடி பேக்லிட் மல்டி-டச் டிஸ்பிளே மற்றும் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ஐபிஎஸ் டெக்னாலஜி கிடைக்கிறது. மேலும், 13 இன்ச் (2732 x 2048 பிக்சல்கள்) ல்இடி பேக்லிட் மல்டி-டச் டிஸ்பிளே கிடைக்கிறது. பி3 வைடு கலர், 264 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.

அடிச்சான் பாரு ஆப்பிள்.. iPad Air M4 அறிமுகம்.. 1TB மெமரி.. 12MP கேம்!

ஆப்பிள் எம்4 சிப் (Apple M4 Chip) கிடைக்கிறது. 8 கோர் சிபியு மற்றும் 9 கோர் ஜிபியு கொடுக்கப்பட்டு உள்ளது. ஐபேட்ஓஎஸ் 26 (iPadOS 26) மற்றும் ஆப்பிள் இன்டலிஜென்ஸ் (Apple Intelligence) கிடைக்கிறது. 12 எம்பி வைடு கேமரா மற்றும் 5எக்ஸ் டிஜிட்டல் ஜூம் கிடைக்கிறது. மேலும், ஆட்டோ போகஸ், போகஸ் பில்சல் மற்றும் ஸ்மார்ட் எச்டிஆர் 4 (Smart HDR 4) கிடைத்துள்ளது. ஆட்டோ இமேஜ் ஸ்டெபிலைசேஷன் உள்ளது.

4K ரெக்கார்டிங், சினிமாடிக் வீடியோ ஸ்டெபிலைசேஷன் உள்ளது. 12 எம்பி சென்டர் ஸ்டேஜ் கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது. 1080p வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. லேண்ட்ஸ்கேப் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Landscape Stereo Speakers) கிடைக்கின்றன. டூயல் மைக்ரோபோன்கள் வருகின்றன. வை-பை + செல்லூலார் மாடல்களில் 5ஜி ஆப்ஷனல் கிடைக்கிறது. ஜிகாபைட் எல்டிஇ கனெக்டிவிட்டி உள்ளது. ஈசிம் கிடைக்கிறது.

ஐபேட் ஏர் 11 இன்ச் மாடலில் 28.93-வாட்-ஹவர் லித்தியம் பாலிமர் பேட்டரி கிடைக்கிறது. ஐபேட் ஏர் 13 இன்ச் மாடலில் 36.59-வாட்-ஹவர் லித்தியம் பாலிமர் பேட்டரி கிடைக்கிறது. ப்ளூ (Blue), பர்பிள் (Purple), ஸ்டார்லைட் (Starlight) மற்றும் ஸ்பேஸ் கிரே (Space Grey) ஆகிய கலர்களில் வாங்கி கொள்ளலாம். மார்ச் 4ஆம் தேதி ப்ரீ ஆர்டரும், மார்ச் 11ஆம் தேதி விற்பனையும் தொடங்க உள்ளது.

1. ஐபேட் ஏர் 8ஆவது ஜென் 11 இன்ச் 128 ஜிபி (வை-பை) மாடலின் விலை ரூ.64,900ஆகவும், ஐபேட் ஏர் 8ஆவது ஜென் 11 இன்ச் 256 ஜிபி (வை-பை) மாடலின் விலை ரூ.74,900ஆகவும், ஐபேட் ஏர் 8ஆவது ஜென் 11 இன்ச் 512 ஜிபி (வை-பை) மாடலின் விலை ரூ.94,900 ஆகவும் இருக்கிறது. ஐபேட் ஏர் 8ஆவது ஜென் 11 இன்ச் 1 டிபி (வை-பை) மாடலின் விலை ரூ.1,14,900 ஆக உள்ளது.

2. ஐபேட் ஏர் 8ஆவது ஜென் 11 இன்ச் 128 ஜிபி (வை-பை + செல்லுலார்) மாடலின் விலை ரூ.79,900ஆகவும், ஐபேட் ஏர் 8ஆவது ஜென் 11 இன்ச் 256 ஜிபி (வை-பை + செல்லுலார்) மாடலின் விலை ரூ.89,900ஆகவும், ஐபேட் ஏர் 8ஆவது ஜென் 11 இன்ச் 512 ஜிபி (வை-பை + செல்லுலார்) மாடலின் விலை ரூ.1,09,900ஆகவும் இருக்கிறது. 1 டிபி வேரியண்ட்டின் விலை ரூ.1,29,900ஆகவும் உள்ளது.

3. ஐபேட் ஏர் 8ஆவது ஜென் 13 இன்ச் 128 ஜிபி (வை-பை) மாடலின் விலை ரூ.84,900ஆகவும், ஐபேட் ஏர் 8ஆவது ஜென் 13 இன்ச் 256 ஜிபி (வை-பை) மாடலின் விலை ரூ.94,900ஆகவும், ஐபேட் ஏர் 8ஆவது ஜென் 13 இன்ச் 512 ஜிபி (வை-பை) மாடலின் விலை ரூ.1,14,900 ஆகவும் இருக்கிறது. ஐபேட் ஏர் 8ஆவது ஜென் 13 இன்ச் 1 டிபி (வை-பை) மாடலின் விலை ரூ.1,34,900 ஆக உள்ளது.

4. ஐபேட் ஏர் 8ஆவது ஜென் 13 இன்ச் 128 ஜிபி (வை-பை + செல்லுலார்) மாடலின் விலை ரூ.99,900ஆகவும், ஐபேட் ஏர் 8ஆவது ஜென் 13 இன்ச் 256 ஜிபி (வை-பை + செல்லுலார்) மாடலின் விலை ரூ.1,09,900ஆகவும், ஐபேட் ஏர் 8ஆவது ஜென் 13 இன்ச் 512 ஜிபி (வை-பை + செல்லுலார்) மாடலின் விலை ரூ.1,29,900ஆகவும் இருக்கிறது. 1 டிபி வேரியண்ட்டின் விலை ரூ.1,49,900ஆகவும் உள்ளது.

Best Mobiles in India

English summary
iPad Air With M4 Chip 12GB RAM Launched in India Pre Order From March 4 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X