சைலன்ட்-ஆ அறிமுகமான புது iPhone 17e மாடல்.. சர்ர்னு விலை குறைந்த பழைய iPhone 16e மாடல்!
ஆப்பிள் (Apple) நிறுவனமானது மிகவும் அமைதியான முறையில் அதன் புதிய பட்ஜெட் விலை ஐபோன் ஆக ஐபோன் 17இ மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது நேற்று (மார்ச் 2 ஆம் தேதி) நடந்த நிகழ்வில் இந்தியா உட்பட பல உலக சந்தைகளில் அறிமுகமானது. இந்தியாவில் இது வருகிற மார்ச் 11 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது.
ஆப்பிளின் புதிய ஐபோன் 17இ மாடலின் இந்திய விலை நிர்ணயம் ரூ.64,900 முதல் தொடங்குகிறது. இது ஐபோன் 17இ மாடலின் பேஸிக் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையாகும். இதே மாடலின் 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.84,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

புதிய மாடல் அறிமுகமான வேகத்தில், பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன அமேசான் இந்தியாவானது, கடந்த ஆண்டு அறிமுகமான ஆப்பிள் ஐபோன் 16இ (iPhone 16e) மாடலின் விலையை கடுமையாக குறைத்துள்ளது. தற்போது அமேசானில் ஐபோன் 16இ மாடலின் பேஸிக் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.52,390 க்கு வாங்க கிடைக்கிறது.
நினைவூட்டும் வண்ணம் இதன் அசல் அறிமுக விலை ரூ.59,900 ஆகும். ஆக அமேசானில் இது ரூ.7510 என்கிற நேரடி விலை குறைப்பின் கீழ் வாங்க கிடைக்கிறது. அதாவது பேங்க் டிஸ்கவுண்ட் அல்லது எக்ஸ்சேன்ஜ் ஆபர் போன்ற கூடுதல் சலுகைகளை பயன்படுத்தினால் ஐபோன் 16இ மாடலின் பைனல் ஆபர் ப்ரைஸ்-ஐ இன்னும் குறைக்க முடியும்.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க இன்னொரு இகாமர்ஸ் வலைத்தளம் ஆன பிளிப்கார்ட்டில் ஐபோன் 16இ ஆனது இன்னமும் அதே ரூ.59,900 க்கு தான் வாங்க கிடைக்கிறது. ஐபோன் 16இ மாடலின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை ஐபோன் 16இ ஆனது ஃபேஸ் ஐடி உடனான 6.1-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது ஆப்பிளின் ஏ18 சிப் மூலம் இயக்கப்படுகிறது.
கேமராக்களை பொறுத்தவரை ஐபோன் 16இ ஆனது சிங்கிள் 48எம்பி ஃப்யூஷன் ரியர் கேமராவுடன் வருகிறது. முன்பக்கத்தில் ஐபோன் 16இ மாடலில் ஆட்டோஃபோகஸுடன் 12எம்பி ட்ரூ டெப்த் கேமரா உள்ளது. வீடியோ ரெக்கார்டிங்கை பொறுத்தவரை, ஐபோன் 16இ மாடல் ஆனது 4கே ரெக்கார்டிங்கை வினாடிக்கு 60 பிரேம்கள் வரை ஆதரிக்கிறது. கடைசியாக ஐபோன் 16இ மாடல் ஆனது 26 மணிநேர வீடியோ பிளேபேக்கை வழங்கும் என்று ஆப்பிள் கூறுகிறது.
புதிய ஐபோன் 17ஏ மாடலின் விரிவான அம்சங்கள்: டூயல் சிம் (நானோ+இசிம்) ஆதரவுடன் வருமாம் ஐபோன் 17இ மாடலானது ஐஓஎஸ் 26 (iOS 26) கொண்டு இயங்குகிறது. இது ஐபோன் 16இ மாடலை போன்ற அதே 60ஹெர்ட்ஸ் 6.1-இன்ச் (1170×2532 பிக்சல்ஸ்) சூப்பர் ரெட்டினா XDR (OLED) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது ட்ரூ டோன் மற்றும் 800 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸை கொண்டுள்ளது.
முன்னரே குறிப்பிட்டபடி ஐபோன் 17இ மாடலானது செராமிக் ஷீல்ட் 2 பாதுகாப்போடு வருகிறது. இது ஐபோன் 16இ மாடலில் உள்ள கிளாஸ் உடன் ஒப்பிடும்போது 3 மடங்கு சிறந்த கீறல் எதிர்ப்பை வழங்குவதாக கூறப்படுகிறது. சிப்செட்டை பொறுத்தவரை இது ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய ஏ19 சிப் (ஆறு-கோர் CPU, 4-கோர் GPU, 16-கோர் நியூரல் எஞ்சின்) மூலம் இயங்குகிறது
இது 8ஜிபி ரேம்-ஐ கொண்டுள்ளது மற்றும் இது 256GB மற்றும் 512GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஐபோன் 17இ மாடல் கடந்த ஆண்டு மாடலை போலவே தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான அதே IP68 ரேட்டிங்கை கொண்டுள்ளது. இது ஒரு ஆக்ஷன் பட்டனையும் கொண்டுள்ளது மற்றும் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் அம்சங்களையும் ஆதரிக்கிறது.
கேமராக்களை பொறுத்தவரை ஐபோன் 17இ மாடலானது எப்/1.6 அபெர்க்ஷர் உடனான 48 மெகாபிக்சல் சிங்கிள் ரியர் கேமரா கொண்டுள்ளது. இது ஐபோன் 16இ மாடலில் உள்ளதை போலவே தெரிகிறது. இதனால் 24 மெகாபிக்சல் மற்றும் 48 மெகாபிக்சல் படங்களை எடுக்க முடியும், மேலும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனையும் ஆதரிக்கிறது.
கூடவே ஐபோன் 17இ மாடல் ஆனது "ஆப்டிகல் குவாலிட்டி" 2எக்ஸ் ஜூமையும் ஆதரிக்கிறது. இது 12 மெகாபிக்சல் படங்களை வழங்க இன்-சென்சார் க்ராப்பை பயன்படுத்துவதாக ஆப்பிள் கூறுகிறது. முன்பக்கத்தில், இது எப்/1.9 அபெர்க்ஷர் உடனான 12 மெகாபிக்சல் TrueDepth செல்பீ கேமரா உள்ளது
சுவாரசியமாக ஆப்பிள் அதன் ஐபோன் 17இ மாடலில் மேக்சேப்-க்கான ஆதரவை சேர்த்துள்ளது, இது ஐபோன் 16இ "காணாமல்" போன முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். ஐபோன் 17இ மாடலை - இணக்கமான 20W சார்ஜர் (வயர்டு) மற்றும் 7.5W மேக்சேப் (வயர்லெஸ்) சார்ஜரை பயன்படுத்தி சார்ஜ் செய்யலாம். கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை இது 5ஜி, 4ஜி LTE, வைஃபை 6, ப்ளூடூத் 5.3, என்எப்சி, ஜிபிஎஸ், க்ளோனாஸ், கலிலியோ, பைடூ (BeiDou) மற்றும் நாவிக் (NavIC) ஆகியவைகளை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications