Apple ருத்ர தாண்டவம்.. பட்ஜெட் விலை iPhone 17e உட்பட மொத்தம் 10 புதிய அறிமுகம்.. மார்ச் 2 முதல்!
2026 மார்ச் 2 ஆம் தேதி முதல், புதிய தயாரிப்புகளை வெளியிட தொடங்குவதாக ஆப்பிள் (Apple) நிறுவனம் ஏற்கனவே உறுதிப்படுத்தி உள்ளது. அதாவது ஆப்பிள் நிறுவனம் மார்ச் 2 ஆம் தேதி தொடங்கி மார்ச் 4 ஆம் தேதி பல அறிமுகங்களை, பல அறிவிப்புகளை வெளியிட உள்ளது.
இது குறித்த எக்ஸ் தள பதிவில், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன டிம் குக், ஒரு பெரிய வாரம் வருகிறது. இது எல்லாம் திங்கள்கிழமை காலை தொடங்குகிறது! என்றும் கூறியுள்ளார். கூடவே அவர் #AppleLaunch என்கிற ஹேஷ்டேக்கையும் அவர் பயன்படுத்தி உள்ளார்.

ஆக மார்ச் 2 முதல் புதிய ஆப்பிள் தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்படுவது "கிட்டத்தட்ட" உறுதியாகிவிட்டது. ஆனாலும் "வழக்கம் போல" ஆப்பிள் நிறுவனம் எதை எல்லாம் அறிமுகம் செய்யப்போகிறது என்பதை அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை. ஆனால் இதுவரை வெளியான லீக்ஸ் மற்றும் அறிக்கைகள் ஆனது சில சாத்தியமான அறிமுகங்களை சுட்டிக்காட்டுகிறது.
அப்படியாக அடுத்த வரம் - ஐபோன் 17இ (iPhone 17e), எம்5 ப்ரோ (M5 Pro) மற்றும் எம்5 மேக்ஸ் (M5 Max) சிப்புடனான புதிய மேக்புக் ப்ரோ (MacBook Pro) மாதிரிகள், ஸ்டாண்டர்ட் எம்5 (M5) சிப் உடனான புதுப்பிக்கப்பட்ட மேக்புக் ஏர் (MacBook Air) அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூடவே புதிய பட்ஜெட் விலை மேக்புக், புதுப்பிக்கப்பட்ட ஐபேட் (iPad) மாடல்கள், புதுப்பிக்கப்பட்ட மேக்புக் ஸ்டூடியோ (Mac Studio), ஆப்பிள் டிவி 4கே (Apple TV 4K), ஹோம்பாட் மினி (HomePod mini) மற்றும் ஸ்டூடியோ டிஸ்பிளே (Studio Display) போன்றவைகள் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் ஐபோன் 17இ அறிமுகம் தான் இந்நிகழ்வின் முக்கிய ஹைலைட் ஆக இருக்கும்.
ஐபோன் 17இ மாடலில் என்னென்ன எதிர்பார்க்கலாம்? பழைய ஐபோன் 16இ மாடலை போலவே, ஐபோன் 17இ மாடலும் கூட ஆப்பிளின் "மலிவு விலை ஐபோன்" உத்தியை பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடிவமைப்பில் பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்காது. ஆனால் சிப்செட்டில் நல்ல அப்கிரேட்-ஐ எதிர்பார்க்கலாம்.
ஐபோன் 16இ மாடலில் ஐபோன் 17 சீரீஸில் பயன்படுத்தப்படும் ஏ19 சிப்செட் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது முழுமையான மறுவடிவமைப்பு இல்லாமல் சிறந்த ஒட்டுமொத்த வேகம், வலுவான கிராபிக்ஸ் மற்றும் மென்மையான ஏஐ அம்சங்கள் ஆகியவற்றில் ஆப்பிள் நிறுவனம் அதிக கவனம் செலுத்தும் என்பது போல் தெரிகிறது.
ஐபோன் 17இ மாடலின் டிஸ்பிளே "அதே" 6.1 இன்ச் ஆக இருக்கலாம். இது ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே ஆதரவு இல்லாமல் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் பேனலை கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஐபோன் 17இ மாடலின் கேமரா "அதே" சிங்கிள் 48MP ரியர் கேமராவாகவே இருக்கலாம்.
சாத்தியமான மாற்றங்களை பொறுத்தவரை, ஐபோன் 17இ ஆனது சற்று மெலிதான பெஸல்கள், டைனமிக் ஐலேண்ட், மேக்சேஃப் ஆதரவு மற்றும் வீடியோ கால்களில் சிறந்த ஃப்ரேமிங்கிற்காக சென்டர் ஸ்டேஜுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட 18எம்பி செல்பீ கேமரா ஆகியவைகளை பெறலாம். இந்தியா போன்ற சந்தைகளில், ஐபோன் 17இ மாடல் ஆனது சாம்சங்கின் கேலக்ஸி எஸ் எப்இ மாடல்கள் மற்றும் கூகுளின் பிக்சல் ஏ சீரிஸ் மாடல்கள் இருக்கும் அமரும்படியான விலை நிர்ணயத்தை பெறலாம்.


Click it and Unblock the Notifications