சீறிப்பாயும் BSNL.. வெறும் 6 ரூபாய் 23 பைசா செலவில்.. 160 நாட்களுக்கு ஓஹோன்னு நன்மைகள்!

|

அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் ஆப்ரேட்டர் ஆன பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது, வெறும் 6 ரூபாய் மற்றும் 23 பைசா என்கிற தினசரி செலவில் ஒரு தனித்துவமான ப்ரீபெயிட் ரீசார்ஜ் (Unique Prepaid Recharge) திட்டத்தை வழங்குகிறது.

அதென்ன திட்டம்? இது ஏன் ஒரு தனித்துவமான திட்டம் ஆகும்? இந்த ரீசார்ஜ்ஜின் விலை நிர்ணயம் என்ன? இது என்னென்ன நன்மைகளை வழங்குகிறது? இதோ விவரங்கள்:

வெறும் 6 ரூபாய் 23 பைசா செலவில்!

வெறும் 6 ரூபாய் 23 பைசா செலவில்!

நாம் இங்கே பேசுவது பிஎஸ்என்எல்-ன் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ரூ.997 திட்டத்தை பற்றியே ஆகும். இந்த திட்டத்தின் முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால்..

வெறும் 6 ரூபாய் மற்றும் 23 பைசா என்கிற தினசரி செலவின் கீழ், இது டெய்லி டேட்டா (Daily Data), அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (Unlimited Voice Calls), இலவச எஸ்எம்எஸ் (Free SMS) மற்றும் இலவச ரிங்டோன் (Free Ringtone) போன்ற நன்மைகளை வழங்குகிறது!

திக் திக் நிமிடங்கள்! அது தான் பூமியின் கடைசி நாளாக இருக்கும்? நெடுநாள் மர்மத்தை உடைத்த NASA விஞ்ஞானிகள்!திக் திக் நிமிடங்கள்! அது தான் பூமியின் கடைசி நாளாக இருக்கும்? நெடுநாள் மர்மத்தை உடைத்த NASA விஞ்ஞானிகள்!

இது ஏன் ஒரு தனித்துவமான திட்டம் ஆகும்?

இது ஏன் ஒரு தனித்துவமான திட்டம் ஆகும்?

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.997 திட்டமானது மிகவும் தனித்தன்மை வாய்ந்த ஒரு திட்டம் ஆகும்,
ஏனென்றால் இந்திய டெலிகாம் சந்தையில், 160 நாட்கள் என்கிற வேலிடிட்டியுடன் (160 Days Validity) வரும் வேறு எந்த ரீசார்ஜ் திட்டமும் இல்லை!

அதாவது ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பார்தி ஏர்டெல் (Airtel) மற்றும் வோடாபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற நிறுவனங்களிடம் 160 நாட்கள் என்கிற வேலிடிட்டியை வழங்கும் ப்ரீபெயிட் திட்டங்கள் எதுவும் கிடையாது.

வருஷத்துக்கு 2 முறை ரீசார்ஜ் செய்தால் போதும்!

வருஷத்துக்கு 2 முறை ரீசார்ஜ் செய்தால் போதும்!

வழக்கத்திற்கு மாறான வேலிடிட்டியை கொண்டுள்ள பிஎஸ்என்எல் ரூ.997-ஐ ரீசார்ஜ் செய்ய விரும்புகிறீர்கள் என்றால், நீங்கள் ஒரு வருஷத்திற்கு 2 முறை ரீசார்ஜ் செய்தால் போதும்.

ஏனென்றால், ரூ.997-ஐ இரண்டு முறை ரீசார்ஜ் செய்தால் உங்களுக்கு 320 நாட்கள் என்கிற மொத்த வேலிடிட்டி கிடைக்கும். 365 நாட்கள் என்கிற காலத்திற்கு 45 நாட்கள் குறைவாக இருந்தாலும் கூட.. ரூ.2000 க்குள் இவ்வளவு நன்மைகளை வழங்கும் வேறு ஒரு திட்டத்தை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது!

நேர்மைக்கும், பொறுமைக்கும் கிடைத்த பரிசு! BSNL-ஐ நக்கல் அடிச்சவங்கலாம்.. இப்போ மூஞ்ச எங்க வச்சிப்பாங்க?நேர்மைக்கும், பொறுமைக்கும் கிடைத்த பரிசு! BSNL-ஐ நக்கல் அடிச்சவங்கலாம்.. இப்போ மூஞ்ச எங்க வச்சிப்பாங்க?

ரூ.997-ன் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

ரூ.997-ன் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

பிஎஸ்என்எல் ரூ.997 திட்டமானது தினமும் 2ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. அதாவது செல்லுபடியாகும் 160 நாட்களுக்கும் மொத்தம் 320ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.

அதுமட்டுமின்றி, இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது.

கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை, இந்த திட்டம் இரண்டு மாதங்களுக்கான இலவச பிஆர்பிடி (Personal Ring Back Tone - PRBT) சேவையையும், இலவச லோக்துன் (Lokdhun) சேவையையும் வழங்குகிறது!

அடுத்த 18 முதல் 24 மாதங்களில்!

அடுத்த 18 முதல் 24 மாதங்களில்!

பிஎஸ்என்எல் நிறுவனமானது, அடுத்த 18 முதல் 24 மாதங்களில் இந்தியா முழுவதும் அதன் 4ஜி சேவைகளை (4G Service) அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் பின்னர் ரூ.997 போன்ற திட்டங்களானது வாடிக்கையாளர்களை சுண்டி இழுக்கும் 4ஜி ரீசார்ஜ்களாக (4G Recharge) உருமாறும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். வரும் நாட்களில் இதுபோன்ற திட்டங்களில், இலவச ஓடிடி (Free OTT) சந்தாக்களும் கூட இணைக்கப்படலாம்!

வேலையை காட்டிய BSNL.. ஜனவரி 1 முதல் சைலன்ட் ஆக அமல் ஆன புதிய மாற்றம்! இனிமே இப்படி தான்!வேலையை காட்டிய BSNL.. ஜனவரி 1 முதல் சைலன்ட் ஆக அமல் ஆன புதிய மாற்றம்! இனிமே இப்படி தான்!

பிஎஸ்என்எல் 5ஜி எப்போது அறிமுகமாகும்?

பிஎஸ்என்எல் 5ஜி எப்போது அறிமுகமாகும்?

மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்வின் (Ashwini Vaishnaw) கூற்றுப்படி, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 5ஜி (BSNL 5G) சேவைகளானது வருகிற 2024 ஆம் ஆண்டில் தான் அறிமுகமாகும்.

இதன் மூலம் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவைகளானது இந்த 2023 ஆம் ஆண்டிலேயே - இந்தியா முழுவதும் - அறிமுகமாகி விடும் என்பதையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது!

Best Mobiles in India

English summary
BSNL Unique Recharge Rs 997 Is The Only Prepaid Plan Which Comes With 160 Days Validity

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X