வேலையை காட்டிய BSNL.. ஜனவரி 1 முதல் சைலன்ட் ஆக அமல் ஆன புதிய மாற்றம்! இனிமே இப்படி தான்!

|

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது, 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமல் ஆகும்படியான ஒரு புதிய மாற்றத்தை சத்தமில்லாமல் செய்துள்ளது.

அதென்ன மாற்றம்? இந்த மாற்றத்திற்கு பின்னால் உள்ள காரணம் என்ன? இதோ விவரங்கள்:

நேரம் முடிஞ்சு போச்சு!

நேரம் முடிஞ்சு போச்சு!

"இதுக்கு மேல புண்ணியம் இல்ல.. நேரம் முடிஞ்சு போச்சு!" என்கிற பாணியில் பிஎஸ்என்எல் நிறுவனம், அதன் பிராட்பேண்ட் போர்ட்ஃபோலியோவில் சில முக்கிய மாற்றங்களை செய்துள்ளது.

அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் இரண்டு மலிவு விலையிலான பிராட்பேண்ட் திட்டங்களையும் சேர்த்து மொத்தம் 3 பிராட்பேண்ட் திட்டங்களை - இரவோடு இரவாக - நீக்கியுள்ளது.

நேர்மைக்கும், பொறுமைக்கும் கிடைத்த பரிசு! BSNL-ஐ நக்கல் அடிச்சவங்கலாம்.. இப்போ மூஞ்ச எங்க வச்சிப்பாங்க?நேர்மைக்கும், பொறுமைக்கும் கிடைத்த பரிசு! BSNL-ஐ நக்கல் அடிச்சவங்கலாம்.. இப்போ மூஞ்ச எங்க வச்சிப்பாங்க?

அதென்ன திட்டங்கள்?

அதென்ன திட்டங்கள்?

பிஎஸ்என்எல்-ன் பிராட்பேண்ட் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ள அந்த மூன்று திட்டங்கள்: ரூ.275, மீண்டும் ஒரு ரூ.275 மற்றும் ரூ.775 ஆகும்.

இநத் 3 திட்டங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் என்கிற வரைமுறையின் கீழ் அறிமுகம் செய்யப்பட்ட திட்டங்கள் ஆகும். இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால், இந்த 3 பிராட்பேண்ட் திட்டங்களுமே கடந்த 2022 ஆம் ஆண்டு சுதந்திர தின சலுகையின் ஒரு பகுதியாக அறிமுகம் செய்யப்பட்டன.

நினைச்சது ஒன்னு.. நடந்தது ஒன்னு!

நினைச்சது ஒன்னு.. நடந்தது ஒன்னு!

முன்னதாக, இந்த 3 திட்டங்களும் காலாவதி ஆகாமல் தொடர்ந்து அணுக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதாவது சுதந்திர தின சிறப்பு திட்டங்களாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த 3 திட்டங்களும் மற்ற பிராட்பேண்ட் திட்டங்களை போல நிரந்தரமாக ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது, இந்த 3 திட்டங்களும் சத்தமின்றி நீக்கப்பட்டுள்ளது. மேலும் பிஎஸ்என்எல்-ன் பிராட்பேண்ட் போர்ட்ஃபோலியோவில் நிகழ்த்தப்பட்டுள்ள இந்த மாற்றம் ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கும் வந்துள்ளது.

ஹலோ அம்பானி சார்.. BSNL-ஐ பார்த்து கத்துக்கோங்க! காசு இல்ல கஸ்டமர் தான் முக்கியம்னு நிரூபிக்கும் ஒரு ஆபர்!ஹலோ அம்பானி சார்.. BSNL-ஐ பார்த்து கத்துக்கோங்க! காசு இல்ல கஸ்டமர் தான் முக்கியம்னு நிரூபிக்கும் ஒரு ஆபர்!

BSNL ரூ.275 திட்டங்களின் நன்மைகள்:

BSNL ரூ.275 திட்டங்களின் நன்மைகள்:

முன்னரே குறிப்பிட்டபடி, BSNL நிறுவனமானது ரூ.275 என்கிற விலையில் இரண்டு வெவ்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து இருந்தது.

இந்த இரண்டு திட்டங்களுமே 75 நாட்கள் என்கிற வேலிடிட்டி, 3.3TB என்கிற அளவிலான மொத்த டேட்டா மற்றும் அன்லிமிட்ட் வாய்ஸ் கால்கள் போன்ற பொதுவான நன்மைகளை வழங்குகின்ற்ன .

இந்த இரண்டிற்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால், ஒரு திட்டம் 30Mbps என்கிற இண்டர்நெட் ஸ்பீட்-ஐ வழங்கியது, இன்னொரு திட்டம் 60Mbps என்கிற இண்டர்நெட் ஸ்பீடை ழங்கியது.

மேலும், இந்த இரண்டு திட்டங்களிலுமே எந்த வகையான OTT நன்மைகளும் இணைக்கப்படவில்லை.

BSNL ரூ.775 திட்டத்தின்  நன்மைகள்:

BSNL ரூ.775 திட்டத்தின் நன்மைகள்:

இந்த திட்டமும் கூட 75 நாட்கள் என்கிற வேலிடிட்டியுடன் வந்தது. ஆனால் இதுவொரு 100Mbps பிராட்பேண்ட் பிளான் ஆகும்.

நன்மைகளை பொறுத்தவரை, இது 3300TB என்கிற மொத்த டேட்டாவை வழங்குகிறது. BSNL வழங்கும் இந்த அதிவேக டேட்டா வரம்பை மீறிய பின்னர், அதாவது 3.3டிபி டேட்டாவையும் தீர்த்த பின்னர், இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் ஆனது 4Mbps ஆக குறைக்கப்படும்.

2023 மார்ச் 31-க்குள் இதை பண்ணிடுங்க.. ஆதார் அட்டை வைத்து இருப்போருக்கு அரசாங்கம் விதித்துள்ள புதிய கெடு!2023 மார்ச் 31-க்குள் இதை பண்ணிடுங்க.. ஆதார் அட்டை வைத்து இருப்போருக்கு அரசாங்கம் விதித்துள்ள புதிய கெடு!

இனிமேல் கிடைக்காது.. ஆனாலும் கவலைப்பட வேண்டாம்!

இனிமேல் கிடைக்காது.. ஆனாலும் கவலைப்பட வேண்டாம்!

மேலும் ரூ.775 திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ், SonyLIV, ZEE5, Voot, Yupp TV, Disney+ Hotstar, Lionsgate, Shemaroo மற்றும் Hungama போன்ற ஓடிடி நன்மைகளும் அணுக கிடைத்தது. ஆனால் இனிமேல் இந்த திட்டம் ரீசார்ஜ் செய்ய கிடைக்காது.

ரூ.500 மற்றும் ரூ.1000 க்குள் ரீசார்ஜ் செய்ய கிடைத்த இந்த 3 பிராட்பேண்ட் திட்டங்கள் நீக்கப்பட்டாலும் கூட, BSNL நிறுவனத்தின் கீழ் பரந்த அளவிலான மலிவு விலை திட்டங்கள் அணுக கிடைக்கிறது. எனவே இதில் கவலைப்பட ஒன்றுமே இல்லை!

Best Mobiles in India

English summary
BSNL Rs 275 and Rs 775 Broadband Plans Are No More To Recharge Because Its Already Removed

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X