புது வருடம் பிறந்து 5 நாட்கள் கூட ஆகல அதுக்குள்ள திட்டங்களின் விலையை உயர்த்திய BSNL.!

|

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான திட்டங்கள் மற்றும் அருமையான சலுகைகளை வழங்கி வந்தது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு இருக்கும் என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களில் மறைமுக கட்டண உயர்வைக் கொண்டுவந்துவிட்டது.

மறைமுகமாகக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது..

மறைமுகமாகக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது..

குறிப்பாக telecomtalk வலைத்தளத்தின் தகவல்படி பிஎஸ்என்எல் நிறுவனம் மூன்று ப்ரிபெய்ட் திட்டங்களின் கட்டணத்தை மறைமுகமாக உயர்த்தி உள்ளது. அதாவது தற்போது ரூ.269, ரூ.499, ரூ.769 ப்ரீபெய்ட் திட்டங்களில் நன்மையைக் குறைத்து மறைமுகமாகக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது பிஎஸ்என்எல்.

மலிவான விலையில் ப்ளூடூத் காலிங் வசதியுடன் பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.!மலிவான விலையில் ப்ளூடூத் காலிங் வசதியுடன் பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.!

பிஎஸ்என்எல் ரூ.269 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.269 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.269 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது முன்பு 30 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்கியது. தற்போது இதன் வேலிடிட்டி குறைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு இப்போது 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இந்த திட்டத்தின் ஒரு நாள் செலவு ரூ.8.96 இருந்தது, தற்போது ரூ.9.60-ஆக உயர்ந்துள்ளது.

நினைச்சத விட கம்மி விலை.. OnePlus 11 5G அறிமுகமானது.. இந்திய விற்பனை சும்மா பிச்சுக்க போகுது!நினைச்சத விட கம்மி விலை.. OnePlus 11 5G அறிமுகமானது.. இந்திய விற்பனை சும்மா பிச்சுக்க போகுது!

பிஎஸ்என்எல் ரூ.269 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்

பிஎஸ்என்எல் ரூ.269 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்

பிஎஸ்என்எல் ரூ.269 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள் குறித்துப் பார்க்கையில், தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது இந்த திட்டம். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், BSNL Tunes, Eros Now சேவைகள், ஹார்டி மொபைல் கேம்ஸ் சேவை, அரீனா மொபைல் கேமிங் சேவை, லோக்துன், ஜிங் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது ரூ.269 ப்ரீபெய்ட் திட்டம்.

இதுதான் பொங்கல் பரிசு: புதிய ஸ்மார்போனை அறிமுகம் செய்த கையோடு தள்ளுபடி வழங்கிய Samsung.!இதுதான் பொங்கல் பரிசு: புதிய ஸ்மார்போனை அறிமுகம் செய்த கையோடு தள்ளுபடி வழங்கிய Samsung.!

பிஎஸ்என்எல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம்

இது ஒரு பழைய திட்டம் ஆகும். அதாவது இந்த ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம் செய்தபோது 90 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்கியது. பின்பு கடந்த ஆண்டு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 80 நாட்களாகக் குறைக்கப்பட்டது. தற்போது மூன்றாவது முறையாக வேலிடிட்டி குறைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 75 நாட்கள் தான் வேலிடிட்டி கிடைக்கிறது. எனவே இந்த திட்டத்தின் ஒரு நாள் செலவு ரூ.6.23 இருந்தது, தற்போது ரூ.6.65-ஆக உயர்ந்துள்ளது.

ப்ளீஸ்! எக்காரணத்தை கொண்டும் இந்த 4 விஷயங்களையும் Google-ல் தேட வேண்டாம்.. மீறினால் வீட்டுக்கு போலீஸ் வரும்!ப்ளீஸ்! எக்காரணத்தை கொண்டும் இந்த 4 விஷயங்களையும் Google-ல் தேட வேண்டாம்.. மீறினால் வீட்டுக்கு போலீஸ் வரும்!

பிஎஸ்என்எல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்

பிஎஸ்என்எல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்

பிஎஸ்என்எல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்ஸ், பிஎஸ்என்எல் ட்யூன்ஸ், ஜிங் மற்றும் கேமிங் நன்மைகள் உள்ளிட்ட பல அசத்தலான சலுகைகளை வழங்குகிறது இந்த ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக தற்போது இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 75 நாட்கள் தான் வேலிடிட்டி கிடைக்கும்.

புதுசு வந்ததும் பழசு விலை குறைப்பு: ரூ.74,999 Samsung போனை மிட்-ரேன்ஜ் விலையில் வாங்கலாம்!புதுசு வந்ததும் பழசு விலை குறைப்பு: ரூ.74,999 Samsung போனை மிட்-ரேன்ஜ் விலையில் வாங்கலாம்!

 பிஎஸ்என்எல் ரூ.769 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.769 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்எனஎல் ரூ.769 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது முன்பு 90 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்கியது. ஆனால் தற்போது இந்த திட்டத்தின் வேலிடிட்டி குறைக்கப்பட்டுள்ளது. அதாவது தற்போது பிஎஸ்எனஎல் ரூ.769 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 84 நாட்கள் தான வேலிடிட்டி கிடைக்கும். அதாவது திட்டத்தின் தினசரி செலவு ரூ.8.54ல் இருந்து தற்போது ரூ.9.15 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 பிஎஸ்என்எல் ரூ.769 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்

பிஎஸ்என்எல் ரூ.769 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்

பிஎஸ்என்எல் ரூ.769 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் சேவைகள், ஹார்டி மொபைல்ஸ் கேம் சேவை உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி தற்போது 84 நாட்கள் ஆகும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
BSNL has implemented indirect tariff hikes on three prepaid plans: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X