Home
News

Vodafone Idea சிம்முக்கு லாட்டரி.. மாதம் ரூ.154 போதும்.. 12 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்!

வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் சிம் கார்டுகளை (Prepaid SIM Card) வைத்து இருக்கும் கஸ்டமர்களுக்கு மலிவான விலைக்கு வாய்ஸ் ஒன்லி திட்டங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதில் 12 மாதங்களுக்கான வேலிடிட்டி திட்டத்துக்கு மாதம் ரூ.154 மட்டுமே தேவைப்படுகிறது.

தனியார் டெலிகாம் நிறுவனங்களின் கஸ்டமர்களுக்கு மலிவான விலைக்கு சிம் ஆக்டிவ் கொடுப்பதை உறுதி செய்ய டிராய் (TRAI) ஆனது வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் மட்டுமே கொண்ட திட்டங்களை கொடுக்க உத்தரவிட்டது. இதன்படி ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பார்தி ஏர்டெல் (Bharti Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்கள் திட்டங்களை கொடுக்கின்றன.

Vodafone Idea சிம்முக்கு லாட்டரி.. மாதம் ரூ.154 போதும்.. 12 மாதங்கள்!

இதில் ஜியோ நிறுவனத்துக்கு நிகராக மலிவான விலைக்கு வோடபோன் ஐடியா நிறுவனமானது 2 வாய்ஸ் ஒன்லி திட்டங்களை வழங்குகிறது. வோடபோன் ஐடியா ரூ.1849 திட்டத்தில் 12 மாதங்கள் வேலிடிட்டி மற்றும் வோடபோன் ஐடியா ரூ.470 திட்டத்தில் 3 மாதங்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இதில் ரூ.1849 திட்டமானது, மாதத்துக்கு ரூ.154 செலவில் ரீசார்ஜ் செய்ய கிடைத்துள்ளது.

வோடபோன் ஐடியா ரூ.1849 வாய்ஸ் திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 1849 Voice Plan Details): இது 12 மாதங்களுக்கான வேலிடிட்டியை வழங்குகிறது. அதாவது, 365 நாட்கள் முழுவதும் சிம் ஆக்டிவ் கொடுக்கும். இதில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 3600 எஸ்எம்எஸ்களும் கிடைக்கும். இந்த 2 சலுகைகளை தவிர வேறு சலுகைகள் கொடுக்கப்பட்வில்லை.

இருப்பினும், டேட்டா தேவைப்படும் நேரத்தில் டேட்டா வவுச்சர்களை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ரூ.21 முதல் வோடபோன் ஐடியாவில் டேட்டா திட்டங்கள் கிடைக்கின்றன. 1 ஜிபி டேட்டா முதல் பெற்று கொள்ளலாம். கூடுதல் டேட்டாவுக்கு அதிக விலை கொண்ட டேட்டா வவுச்சர்களுக்கு கஸ்டமர்கள் செல்லலாம். இது டேட்டா தேவைப்படும்பட்சத்தில் மட்டும்தான்.

இதுபோன்ற வாய்ஸ் ஒன்லி திட்டத்துக்கு செல்லும் கஸ்டமர்கள், சிம் ஆக்டிவ் மட்டுமே இருந்தால் போதும் என்று எண்ணுகின்றனர். ஆகவே, இது வருடம் முழுவதும் மலிவான விலைக்கு சிம் ஆக்டிவ் கொடுக்கிறது. அதே நேரத்தில் வாய்ஸ் கால்களையும் செய்து கொள்ள முடிகிறது. இதற்கு அடுத்து மூன்று மாத வேலிடிட்டியுடன் திட்டம் இருக்கிறது.

வோடபோன் ஐடியா ரூ.470 வாய்ஸ் திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 470 Voice Plan Details): இது 3 மாதங்களுக்கு வேலிடிட்டி கொடுக்கும் வாய்ஸ் ஒன்லி திட்டமாக இருக்கிறது. ஆனால், 90 நாட்கள் வேலிடிட்டி எதிர்பார்க்க முடியாது. 28 நாட்கள் கணக்கில் 84 நாட்களுக்கு வேலிடிட்டியை வழங்கியுள்ளது. இந்த நாட்களில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் வழங்கப்படும்.

மேலும், 900 எஸ்எம்எஸ் சலுகை கொடுக்கப்படும். இதிலும் டேட்டா சலுகை தேவைப்பட்டால், டேட்டா வவுச்சர்களை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஜியோ நிறுவனத்தின் கிடைக்கும் வாய்ஸ் ஒன்லி திட்டத்தில் 336 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. ஆகவே, வோடபோன் ஐடியா கூடுதல் வேலிடிட்டியை கொடுத்து கஸ்டமர்களை தக்க வைத்துள்ளது.

இருப்பினும், ஜியோ வாய்ஸ் ஒன்லி திட்டத்தில் விலை சற்று மலிவாக இருக்கிறது. அதாவது, வோடபோன் ஐடியாவில் ரூ.1849 விலைக்கு வருடாந்திர வாய்ஸ் ஒன்லி திட்டம் கிடைக்கிறது. ஆனால், ஜியோவில் ரூ.1748 விலைக்கு கிடைக்கிறது. வேலிடிட்டியை பார்க்கையில் குறைவாகவும், விலை பார்க்கையில் வோடபோனை விட கம்மியாகவும் இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea Rs 1849 Voice Plan 365 Days Validity Vodafone Idea Rs 470 Voice Plan 84 Days Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X